Friday, April 29, 2011

குருப்பெயர்ச்சி பலன்கள் 2011 (கடகம்)

கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

நல்ல அழகும் அறிவாற்றலும் கற்பனைத் திறனும் கொண்ட கடக ராசி நேயர்களே! 8-5-2011-ல் ஏற்படவிருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் 17-5-2012 வரை சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தொடக்கத்தில் சனி 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு எதிலும் எதிர்நீச்சல் போட்டு ஏற்றத்தை அடைந்துவிட முடியும் என்றாலும், 15-11-2011-ல் சனியும் 4-ஆம் வீட்டுக்கு மாறுதலாகி விடுவதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனியும் தொடங்கிவிடுகிறது. இது எல்லா வகையிலும் பிரச்சினை களை ஏற்படுத்திவிடக்கூடிய அமைப்பாகும். பொருளாதாரரீதியாக நெருக்கடிகள், அசையும்- அசையா சொத்துகளால் வீண் விரயங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பெரிய தொகைகளை முதலீடு செய்ய நினைக்கும் காரியங்களை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடைய முடியும்.

ஆரோக்கியம்:

உங்களின் தேகநலன் சீராகவே இருக்கும். மனைவி வழியில் சிறுசிறு உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டு விலகும். புத்திர வழியில் இருந்து வந்த பாதிப்புகள் குறைந்து காணப்படும். மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். சிலருக்கு நீர் தொடர்புள்ள நோய்கள் ஏற்பட்டு மறையும்.

பொருளாதார நிலை:

பண வரவு பெருகும் என்றாலும் பொருளாதார வகையில் நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டிவரும். புதிய பொருள் சேர்க்கையும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்தி என்ற நிலையைக் கொடுக்காது. மற்றவருக்கு வாக்குறுதி தருவதைத் தவிர்க்க வேண்டும். பழைய கடன்கள் வசூலாகும்.

குடும்பம்:

கணவன்- மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் போவதால் நன்மை உண்டாகும். உறவினர்கள் வருகையால் ஓரளவு அனுகூலும் இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். புத்திர வழியில் சுபச் செலவைக் கொடுக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

அதிகாரிகளின் கெடுபிடிகளும் வேலைப் பளுவும் கூடும் என்றாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு ஆறுதலைத் தரும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். புதுமுயற்சிகளைத் தவிர்க்க வேண்டும். எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வு தாமதப்படும். புதிய பணி தகுதிக்குக் குறைவானதாக அமையும்.

தொழிலாளர்களுக்கு:

உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும். புதிய முயற்சிகள் சிறிது வெற்றி யினைத்தான் ஏற்படுத்தும். உங்கள் அபிலாஷைகள் பூர்த்தி அடையும். நடுவில் சில சங்கடங்களைச் சந்திக்கும் நிலை ஏற்படும். சிலருக்கு உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைக்காது. இதனால் புதிய கடன்கள் உருவாகும்.

பெண்களுக்கு:

புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. கணவன்- மனைவி உறவு சுமாராகவே இருக்கும். பணி புரியும் பெண்களுக்கு வேலையில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். எதிலும் நிதானமாகச் செயல்பட வேண்டும்.

கலைஞர்களுக்கு:

சிறப்பான வாய்ப்புகள் சற்று தாமதித்து வரும். எதிரிகளின் போட்டி, பொறாமைகள் மறையும். படத்தயாரிப்பு துறை, இசைத் துறையில் உள்ளவர்களுக்கு ஓரளவு நன்மை உண்டாகும். தொலை தூரப் பயணங்களில் அதிக அலைச்சல், டென்ஷன் உண்டாகும்.

விவசாயிகளுக்கு:

விளைச்சல் நன்றாக இருந்தாலும் பண வரவு திருப்தி தராது. மறைமுக எதிர்ப்புகள் சற்று குறையும். எதிர்பார்க்கும் தகவல்கள் அனுகூலப் பலனை தாமதித்து தரும். கடன்கள் படிப்படியாகக் குறையும். புது முயற்சியைத் தவிர்க்கவும்.

இளைஞர்களுக்கு:

எதிலும் கவனமாகச் செயல்படுவதன்மூலம் எதிர்ப்புகள் குறைந்து ஏற்றம் உண்டாகும். சக நண்பர்கள் மூலம் வீண் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும். எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டிய காலமாகும்.

மாணவர்களுக்கு:

மாணவர்களுக்கு கல்வியில் சற்று ஆர்வம் குறையும். பெற்றோர், ஆசிரியர்கள் கண்டிப்பாக நடப்பதால் வருத்தம் அடையாமல் அதை அறிவுரையாக ஏற்பது வெற்றி தரும். தேவையற்ற அலைச் சலைத் தவிர்க்க வேண்டும்.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்

உங்கள் உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் பணப் பற்றாக்குறை அதிகரித்து கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவதால் குழப்பத்திலிருந்து விடுபட முடியும். புதிய முயற்சிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறையும். மாணவர்களின் கல்வியில் மந்தமான நிலை காணப்படும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு சற்று குறையும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கை நழுவும். விவசாயிகளுக்கு விளைச்சல் சோதனையை ஏற்படுத்தும். பெண்கள் எதிர்பார்க்கும் சுப காரியத்தில் தடை தாமதம் உண்டாகும்.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்

உங்களின் தேக ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். சிலருக்கு நீர் தொடர்புள்ள சில உபாதைகள் ஏற்பட்டு மறையும். மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் கணவன்- மனைவி உறவு அன்பு டன் காணப்படும். உறவினர்களின் வருகை நன்மை தரும். செய்யும் தொழிலில் உங்களின் திறமையால் எதையும் சமாளித்து அனுகூலப் பலன் அடைய முடியும். கூட்டுத் தொழில் சிறக்கும். உத்தியோகஸ்தர் களுக்கு உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைத்து, ஏற்றமான பதவி உயர்வும் உண்டாகும். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளை சிரமப்பட்டு நிறைவேற்றுவார்கள். மாணவர்களின் கல்வியில் மந்த நிலை விலகி ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாரான பலனையே ஏற்படுத்தும். புது முயற்சியில் நிதானம் தேவை.

குரு வக்ரகதியில் 31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்

உங்களுக்கு சிறப்பான காலமாகவே இருக்கும். குடும்பத்தில் பூரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். தொழில் செய்வோருக்கு மிகவும் பிரமாதமான வர்த்தக வளர்ச்சியினைக் கொடுக்கும் கால மாகும். போட்டி, பொறாமை எதுவும் ஏற்படாமல் சிறப்பான முன்னேற்றம் அடைய முடியும். உங்கள் கௌரவம், அந்தஸ்து, பெருமை சிறப்பாகக் காணப்படும். எதிரிகளும் நண்பர்களாகி உங்களுக்கு உதவி புரிவார்கள். திட்டமிட்ட காரியத்தை செயல் வடிவமாக்கி அற்புதப் பலன்களையும் பெற முடியும். வெளியூர் பயணங்கள் மூலம் நன்மையும் ஆதாயமும் உண்டாகும். சிலருக்கு பூர்வீகச் சொத்து சேரும் அமைப்பு உண்டாகும். சிலர் பழைய வண்டி வாகனத்தை விற்றுவிட்டு புதிதாக வாங்குவார்கள். வழக்கு களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு உண்டாகும். உடன்பிறந்த சகோதரி வழியில் சிலருக்கு சுபகாரியம் சுபமாக முடியும்.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்

உங்கள் உடல்நலம் சீராகவே காணப்படும். சிலருக்கு உஷ்ண சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். பொருளாதார நிலையில் ஓரளவு சிறப்பு காணப்படும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். பெண்களுக்கு உடல்நலம் தேறும். வியாபாரம், கூட்டுத் தொழிலில் பெரிய அளவு முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் தாமதித்து அமையும். புதிய திட்டங்களை மெதுவாக- சிறப்பாக செயல்படுத்தினால் வெற்றி கிட்டும். மாணவர்கள் சிறப்பான கல்வி மூலம் ஏற்றம் பெற முடியும். அரசியல்வாதிகளும் கொடுத்த வாக்கை கஷ்டப்பட்டாகிலும் காப்பாற்றி பெருமை அடைவார்கள். விவசாயிகளுக்கு கடன்கள் சற்று குறையும்.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்

எதிலும் நிதானமாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும். குடும்பத்தில் மன அமைதி குறையும். கொடுக்கல்- வாங்கலில் சங்கடத்தை ஏற்படுத்தும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு உண்டாகும். தேவையற்ற அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் அநேக தடைகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் விரும்பிய இட மாற்றம் கிடைக்காது. அசையா சொத்துகள் சேர தாமதம் உண்டாகும். மாணவர்களின் கல்வியில் மந்த நிலை நிலவும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குறையும்; அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசியல்வாதி களுக்கு நெருக்கமானவர்களே துரோகம் செய்ய எண்ணுவார்கள். விவசாயத்தில் விளைச்சல் குறைவாகவே இருக்கும். வெளிவட்டார பழக்க- வழக்கத்தால் சாதகமான பலன் இருக்காது.

குரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்
3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்

உங்களுக்கு கடந்தகால சோதனைகள் படிப்படியாகக் குறைந்து அனுகூலமான பலன்கள் உண்டாகும். தேகநலன் சுமாராகவே இருக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். பொருளா தார ரீதியில் பண வரவுகளில் இருந்த தடை நீங்கி வரவுகள் வர ஆரம்பிக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே சுமாரான ஒற்றுமை நிலவும். விவசாயிகளுக்கு தக்கசமயத்தில் விளைச்சல் உதவும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர் களுக்கு நிலைமை சற்று சீரடையும். அரசியல்வாதிகளுக்கு சொன்ன சொல்லைக் காப்பாற்றும் நிலை ஏற்பட்டு புகழ், பெருமை கூடும். பெண்களுக்கு புத்திர வழியில் வீண் மனக் குழப்பம் ஏற்பட்டு விலகும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் எதிர் பார்த்த லாபம் இருக்காது.

புனர்பூசம் 4-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:

தேகநிலை சுமாராகத்தான் இருக்கும். எடுத்த காரியங்கள் யாவுமே சுபமாக முடிவடையும். நல்லவரை நண்பர்களாக ஆக்கிகொள்ளக் கூடிய முயற்சி யாவுமே நற்பலனைக் கொடுத்திடும். உற்றார்- உறவினர் களால் தொல்லை ஏற்படும். கடன் தொல்லைகள் சற்று குறையும். கூட்டுத் தொழிலில் அனுசரித்துச் செல்வது நல்லது. புது முயற்சியில் நிதானம் தேவை.

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

தேக நலன் சீராக இருக்கும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளில் தடை, தாமதம் உண்டாகும். புத்திர வழியில் புதுப்புதுச் செலவைக் கொடுக்கும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. குடும்பத்தில் வரவுக்குத் தகுந்த செலவு ஏற்படும் என்பதால் சேமிக்க முடியாது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். பெண்கள் உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை.

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

தேக நலனில் சிறிது பாதிப்பு ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சீராகவே இருக்கும். புத்திர வழியில் வீண் செலவைக் கொடுக்கும். கொடுக்கல்- வாங்கலில் சுமாரான நற்பலன் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்றவை ஏற்றம் தராது. பெண்கள் எதிர்பார்க்கும் சுபகாரியம் தடைப்படும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை:

அதிர்ஷ்ட தேதி : 2, 11, 20, 29.
அதிர்ஷ்ட கிழமை: திங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை.
அதிர்ஷ்ட கல்: முத்து.
அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு.
அதிர்ஷ்ட தெய்வம்: வெங்கடாசலபதி.

பரிகாரம்:

இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் குரு ப்ரீதி, தட்சிணா மூர்த்தியைத் தொடர்ந்து வியாழக்கிழமைதோறும் நெய் தீபமேற்றி வழிபடுவது, ஏழை- எளிய அந்தணர்களுக்கு உதவிகள் செய்வது உத்தமம். 15-11-2011 முதல் சனி 4-ல் சஞ்சரிக்கவுள்ளதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறவுள்ளது. இதனால் சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுவது உத்தமம்.

No comments: