Friday, April 29, 2011

குருப்பெயர்ச்சி பலன்கள் 2011 (கன்னி)

கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

பிறரின் குணம் அறிந்து அதற்கேற்றார்போல் வளைந்து கொடுத்து வாழக்கூடிய கன்னி ராசி நேயர்களே! வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அனு கூலமற்ற அமைப்பாகும். இதனால் பண வரவுகளில் பலவகையில் நெருக்கடிகளைச் சந்திப்பீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள்கூட தாமதப்படும். நன்றாகப் பழகியவர்கள்கூட ஏதாவது உதவி கேட்பீர் களோ என ஒதுங்கிக் கொள்வார்கள். குரு சாதகமின்றி சஞ்சரிப்பது மட்டுமின்றி உங்களுக்கு ஏழரைச் சனியும் தொடருவதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சி களில் தடைகள் ஏற்படும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் தடை, தாமதங்களையே சந்திப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். கூட்டாளி களின் ஒற்றுமை யற்ற செயல்பாட்டால் அபிவிருத்தியும் குறையும். உத்தியோகஸ்தர் களுக்கு பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும். உயரதிகாரிகளின் கெடுபிடிகள் மன உளைச்சலை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது மிகவும் உத்தமம்.

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. சிலருக்கு வயிற்றுக் கோளாறு, சரியான உறக்கமின்மை போன்ற அனுகூலமற்றப் பலனைக் கொடுக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத் தில் மனைவிக்கு உடல்பாதிப்பு உண்டாகும். மன சந்தோஷம் குறைந்திடும். எதிலும் எச்சரிக்கை தேவை.

பொருளாதார நிலை:

பணப் பற்றாக்குறை தொடர்ந்து இருக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்தி கொடுக்காது. பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். உங்களால் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. புதிய செலவுகள் ஏற்படும். சிலருக்கு அசையா சொத்து வகையில் செலவுகள் அதிகரிக்கும்.

குடும்பம்:

கணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறையும். அலைச்சல் அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் சண்டைச் சச்சரவுகள் தோன்றி மறைந்திடும். குடும்பத்தில் எந்த காரியமும் நடைபெறாமல் இழுபறியாகவே செல்லும். ஸ்திரச் சொத்து இழப்பு உண்டாகும். உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

உத்தியோக நிலையில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் காணப் படும். வேலைக்கேற்ற உயர்வினை அடையமுடியாது; தடை உண்டாகும். மன அமைதி குறையும். உடல்நலம் பாதித்து அடிக்கடி விடுப்பு எடுத்து பணியில் கவனம் குறையும். புதிய வேலை வாய்ப்பு அமையாது. வெளியூர் பயணங்களால் அலைச்சல், டென்ஷன் யாவும் உண்டாகும்.

தொழிலாளர்களுக்கு:

தகுந்த முதலாளி அமைந்தாலும் பல நிலைகளில் அவரை சந்திக்க முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். வேலை பாரமும் கூடும். சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பின்மை ஏற்படும். பொருளாதாரத் தட்டுப்பாடும் காணப்படும். புதிய முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.

பெண்களுக்கு:

பணிபுரியும் பெண்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை குறையும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சண்டைச் சச்சரவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த நற்பலன்கள் உண்டாக தடை உண்டாகும்.

கலைஞர்களுக்கு:

வெளியூர் வாய்ப்புகள் பொருளாதாரரீதியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை உண்டாகப் பெறும். கடுமையான போட்டி, பொறாமைகளைச் சந்திக்க நேரிடும்.

விவசாயிகளுக்கு:

விளைச்சல் நன்றாகவே இருந்தாலும் பண நெருக்கடியைச் சமாளிக்க முடியாத நிலை உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவி, புதிய முயற்சிகள் கை கூடாமல் ஏமாற்றம் தரும். பெரிய விவசாயப் பணிகள், கிணறுகள் தோண்டுவது, போர் அமைப்பது போன்ற வற்றைத் தவிர்க்கவும்.

இளைஞர்களுக்கு:

அனுகூலமான வேலையில் இருக்கும் உங்களுக்கு எதிர்பாராத சிக்கல் மூலம் தற்போது உள்ள நிலையில் பிரச்சினை உண்டாகும். நெருங்கிப் பழகியவர்கள் மூலம் வீண்பழி உண்டாகும். எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டிய காலம் இது.

மாணவர்களுக்கு:

படிப்பின்மீது கவனம் செலுத்தினால் பாராட்டு கிடைக்கும். வெளியில் அதிகம் சுற்றுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். மதிப் பெண்கள் திருப்திகரமாக இருக்காது. விளையாட்டில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம்.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்

இக்காலத்தில் உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படவே செய்யும். நீர்தொடர்புள்ள கோளாறுகள் ஏற்படும். பொருளாதார வரவில் மந்தமான நிலையே காணப்படும். செய்யும் தொழிலில் வேலை ஆட்களுக்கும் உங்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை பாதிக்கும். கூட்டுத் தொழிலில் பிரியும் நிலை உருவாகும். வியாபாரத்திலும் லாபம் குறையும். உங்கள் வேலையாட்கள் உங்களை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை ஏற்படும். எதிரிகளின் பலம் கூடும். விவசாயிகளுக்கு அரசு வழியில் எவ்வித நற்பலனும் அமையாமல் வயல்களை விற்க வேண்டிய சூழல் ஏற்படும். மாணவர்களின் கல்வியில் மிகவும் மந்த மான நிலை ஏற்படும். கலைஞர்களுக்கு பட வாய்ப்புகள் குறையும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடி உடல்சோர்வுடன் காணப் படுவார்கள்.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்

இக்காலத்தில் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிட்டாது. சகோதர வழியில் சோதனைகளும் கருத்து வேறுபாடு களும் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத தன விரயம், செலவு உண்டாகும். புத்திரர்களின் வழியிலும் மனக் கவலைகள் ஏற்படும். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கடன் பிரச்சினைகள் அதிகரிக் கும். எடுக்கும் எந்த முயற்சியுமே தடையுடன் முடிவடையும். சுப காரியங்கள் குடும்பத்தில் ஏற்பட தடை உண்டாகும். புதிய முயற்சி களிலும் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்திலும் அதிகாரி களால் அனுகூலமற்ற பலன்களே உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கடினமாக உழைப்பதன் மூலம் மதிப்பெண்களைப் பெற முடியும். குடும்பத்தில் கணவன்- மனைவி உறவு ஒற்றுமை குறைந்து காணப்படும். புதிய விவசாயிகளுக்கு கடன்கள் தொல்லை தரும்.

குரு வக்ரகதியில் 31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்

இது பெரிய யோகம் கொடுக்கும் காலம் என்று கூறமுடியாது. தொழில்ரீதியாக போட்டிகளைச் சந்திக்க நேரிடும். தொழிலாளர் களும் வேலை ஆட்களும் தேவையில்லாமல் பிரச்சினை செய் வார்கள். பொருளாதார பற்றாக்குறையினால் கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு கடன் பிரச்சினை அதிகரிக்கும். குடும்ப வாழ்விலும் கணவன்- மனைவி இடையே கருத்து வேறு பாடும் சண்டையும் உண்டாகி மன அமைதி குறையும். வியாபாரம் மந்தமாகவே நடைபெறும். கொடுக்கல்- வாங்கலிலும் சிக்கல்கள் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் உண்டாகும். எதிரிகளின் பலம் கூடி உங்கள் பலம் குறையும். எனவே அரசியல்வாதிகள் புது முயற்சியைத் தவிர்ப்பது உத்தமம். விவசாயிகளுக்கு புழு, பூச்சிகளின் தொல்லையால் விளைச்சல் பாதிக்கும்.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்

உங்கள் தேகநலனில் அக்கறை செலுத்த வேண்டும். மனைவி, குழந்தைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பொருளாதார ரீதியாக பணப் பற்றாக்குறை ஏற்பட்டு கடன் பிரச்சினைகள் உண்டாகும். தொழிலாளர்களுக்குள் பகை, கருத்து வேறுபாடுகள் போன்றவை உண்டாகும். வியாபாரத்தில் நன்றாக ஈடுபட முடியாத சில சூழ்நிலைகள் உண்டாகும். வீட்டில் அமைதி குறைந்து காணப் படும். கணவன்- மனைவி இருவரும் அடிக்கடி வாய்த் தகராறு செய்ய நேரிடும். குழந்தைகளால் அக்கம்பக்கத்தில் வீண் வாக்கு வாதங்கள் நிகழும். எதிலும் மிகவும் கவனமாகவும் மிகவும் எச்சரிக்கையுடனும் செயல்படுவதால் வீண் விரயம், வீண் விரோதத்தை சற்று குறைக்கலாம். உத்தியோகத்தில் நிம்மதி இருக்காது. மாணவர்களின் ஆர்வம் கல்விமேல் செல்லாது.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்

இக்காலத்திலும் தேக ஆரோக்கியம் பாதிப்பை உண்டாக்கும். புத்திர வழியிலும் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பெண்களால் சிலருக்கு கெடுபலன்கள் அதிகரிக்கும். செய்யும் தொழி லில் போட்டி, பொறாமைகள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைச் சற்று தள்ளிப் போடுவது உத்தமம். கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் உருவாகும். உறவினர் களால் பகை ஏற்படும். பெண்களுக்கும் உடல் உபாதைகள் உண்டாகும். அரசியல்வாதிகள் ஊழல் வழக்கில் சிக்கிட நேரும். அதனால் புகழ், கௌரவம் குறையும். மாணவர்களின் கல்வியில் ஆர்வம் குறையும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கை நழுவும். விவசாயிகளுக்கு கடன்களால் தொல்லையும் பகைவர்களால் விரோதமும் ஏற்பட்டு மனக்கவலை உண்டாகும்.

குரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்
3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்

இக்காலத்தில் தேக ஆரோக்கியம் பாதிக்கும். உஷ்ண சம்பந்த மான நோய்கள் ஏற்படும். உடல் சோர்வும் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் கூடும். புதிய கடன்கள் ஏற்படும். சுப காரியம் நடைபெற பல்வேறு இடையூறுகள் உண்டாகும். செய்யும் தொழில் ரீதியாக அலைச்சலும் டென்ஷனும் உண்டாகும். மனக்கவலை ஏற்படும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு நிலவும். மனதில் பயம், வீண் குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரி களின் கெடுபிடியும், தெரியாத இடத்திற்கு மாற்றமும் உண்டாகும். பெண்களுக்கு மனசஞ்சலம் ஏற்படும். புத்திர வழியில் மனக்கவலை ஏற்படும். அரசியல்வாதிகளின் கௌரவம் குறையும். மாணவர்கள் சற்று மந்தமாகக் காணப்படுவார்கள். கலைஞர்கள் உற்சாகம் குறைந்து காணப்படுவார்கள். விவசாயிகளுக்கு மகசூலில் திருப்தி யற்ற நிலை நிலவும்.

உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:

தொழில்ரீதியாக அலைச்சல், டென்ஷன் உண்டாகும். போட்டி, பொறாமையும் நெருக்கடிகளும் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களில் இடையூறுகள் ஏற்படும். குடும்ப வாழ்வில் ஒற்றுமை குறையும். கலைஞர்களுக்குப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் பெரிய அளவு முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.

அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

தேகநலனில் கவனம் தேவை. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் கூடும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு அதிகரிக் கும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சி மேற்கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் புதுமுயற்சியைத் தவிர்ப்பது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்றவை லாபம் தராது. பெண் களுக்கு இல்வாழ்வில் சோதனைகள் நிறைந்திருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கல் ஏற்படும்.

சித்திரை 1, 2-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:

சுபகாரிய முயற்சிகளில் தடை, தாமதம் உண்டாகும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது- ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. புத்திர வழியில் செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் இவற்றில் லாபங்கள் குறைந்து விரயம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். குடும்பத்தில் அமைதி குறையும். கலைஞர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் கை நழுவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை:

அதிர்ஷ்ட தேதி: 5, 9, 14, 18, 23, 27.
அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய், புதன்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு.
அதிர்ஷ்ட கல்: மரகதம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு.
அதிர்ஷ்ட தெய்வம்: விஷ்ணு.

பரிகாரம்:

இந்த குருப்பெயர்ச்சியால் குரு பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் வியாழக் கிழமைதோறும் தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலையும், மஞ்சள் நிற பூக்களும் சாற்றி நெய் தீபமேற்றுவது உத்தமம். ஏழரைச் சனியும் தொடரு வதால் சனிக்கு எள் எண்ணெயில் தீபமேற்றி நீலநிற சங்குப் பூக்களால் அர்ச்சனை செய்யவும். முடிந்தால் சனிக்கு பரிகார ஸ்தல மான திருநள்ளாறு சென்று வருவதும் நல்லது.

No comments: