Thursday, January 15, 2009

ஜோதிடம் - சன்யாச யோகம்






பொதுவாக ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமலே கடைசிவரை தனது குடும்பத்திற்காகவே வாழ்ந்து இறந்து விடுவர். வேறு சிலர் தனது குடும்பத்தையும் துறந்து , தனது சுக இன்பங்களையும் மறந்து இறைப்பணிக்காக இல்லற வாழ்க்கையை விட்டு துறவறமென்னும் சன்யாசத்தை ஏற்படுத்திக்கொள்வர். இவையெல்லாம் முன் ஜென்ம கரும பலன்களே. அதாவது பூர்வ புண்யம் என்பர். அவ்வாறு இல்லறத்தை விட்டு துறவறத்தை கொண்ட வைணவப்பெரியார் ராமானுச்சாரியாரின் ஜாதநிலையில் உள்ள கிரககங்கள் ஒரு பார்வை.
பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவப் பெரியார்.
உதாரண ஜாதகத்தில் திருமணம் ஆகாமலே சன்யாச வாழ்க்கை வாழ்ந்த ராமானுஜச்சாரியாரின் ஜாதக கிரகநிலைகள் :
  1. சந்திரனுக்கு நான்காம் அதிபதி புதன் சுக்கிரனுடன் இணைந்திருப்பது.
  2. சந்திரன் , குரு இணைந்து சனியினால் சமசப்தமாக பார்க்கப்படுவது.இங்கு குரு , சனி இணைப்பு சன்யாச யோகத்தை தந்தது.
  3. சூரியன் உச்சம் பெற்று 3-12 க்கு அதிபதி புதன் , 4-11 க்கு அதிபதி சுக்கிரனுடன் இணைந்து 10- ல் இருப்பது இறவாப் புகழ் பெற்ற சன்யாச யோகமாகும்.

ஜோதிடம் - நட்சத்திர பலன்கள் பகுதி 2




இந்த பலன்கள் எல்லாம் பொதுவான நட்சத்திர பலன்கள்தான். இது அவரவர் சுய ஜாதகத்தின் அடிப்படையில் கிரகங்கள் இருக்கும் நிலைக்கு ஏற்ப குறைவாகவும் , அதிகமாகவும் இருக்கும்.
  • அழகானவர்
  • அறிவாற்றல் மிக்கவர்
  • ஆபரணத்தில் ஆசையுடையவர்
  • கலை ஆர்வமிக்கவர்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராசி மேஷமாகும். ராசி அதிபதி செவ்வாய்.நடத்திர அதிபதி கேது



  • செயல் வீரர்
  • எண்ணியதை நிறைவேற்றும் வெற்றி வீரர்
  • உண்மையே வெற்றி பெறும் என்ற எண்ணம் கொண்டவர்
  • நோயற்ற வாழ்க்கை அமையும்
  • மகிழ்ச்சியானவர்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராசி மேஷமாகும்.
ராசி அதிபதி செவ்வாய்.நடத்திர அதிபதி கேது



  • அழகான தோற்றமுடையவர்
  • உலகப்புகழ் பெறுபவர்
  • ப்ல பெண்கள் தொடர்புடையவர்
  • சாப்பாட்டு பிரியர்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கார்த்திகை 1 முதல் 2 பாதங்கள் ராசி மேஷமாகும். கார்த்திகை 3 முதல் 4 பாதங்கள் ராசி ரிசபமாகும்.
ராசி அதிபதி செவ்வாய்.நடத்திர அதிபதி கேது

இந்த பகுதியின் தொடர்ச்சி அடுத்த பதிவில்...............

Wednesday, January 14, 2009

27 நட்சத்திர பலன்கள் ....

பாகம் - 1
ஜாதகத்தில் ஒருவரின் ராசியை சந்திரன் இருக்கும் இடத்தை வைத்துதான் அடையாளம் காண முடியும். அவ்வாறு 12 ராசிக்கும் 27 நடசத்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ராசியிலும் 3 நட்சத்திரங்கள் தனது ஆதிக்கத்தை செலுத்துகின்றன.அதில் ஒவ்வொரு நடசத்திரமும் ஒன்று முதல் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முறையே முதல் பிரிவு முதல் பாதம் இரண்டாம் பிரிவு இரண்டாம் பாதம், மூன்றாம் பிரிவு மூன்றாம் பாதம் , நான்காம் பிரிவு நான்காம் பாதம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நட்சத்திரத்தையும் நவக்கிரங்கள் ஒன்பதுக்கும் சமமாக , ஒவ்வொன்றுக்கும் மூன்று வீதம் 9 X 3 = 27 பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கிரகமும் மூன்று நட்சத்திரத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்துகிறது. கிரகங்களின் குணங்களுக்கு ஏற்ப மனிதனின் குண நலனில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த பகுதியின் தொடர்ச்சி அடுத்த பதிவில்.....