Friday, April 29, 2011

குருப்பெயர்ச்சி பலன்கள் 2011 (சிம்மம்)

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! கடந்த சில ஆண்டுகளாக ஏழரைச் சனி நடைபெறுவதால் சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்து வரும் உங்களுக்கு, வரும் 8-5-2011-ல் ஏற்படவிருக்கும் குருப் பெயர்ச்சியால் குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புத அமைப்பாகும். குடும்பச் சூழ்நிலை யானது மிகவும் மகிழ்ச்சிகரமானதாக மாறும். தடைப்பட்ட மங்கள கரமான திருமண சுப காரியங்கள் இனிதே தடபுடலாக நிறை வேறும். சிலர் அழகான பிள்ளைச் செல்வத்தையும் பெறுவர். பணப் புழக்கம் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலிலும் நல்ல லாபமும் பல பெரிய மனிதர்களின் நட்பும் கிட்டும். வெளிவட்டார பழக்க- வழக்கங்கள் விரிவடையும். வரும் 15-11-2011-ல் உங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஏழரைச் சனியும் முழுமையாக முடிவ டைந்து விடுவதால் உங்களது துன்பங்கள் அனைத்தும் பகல வனைக் கண்ட பனிபோல விலகும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய முயற்சிகளில் வெற்றியைக் காண்பீர்கள். கூட்டாளிகளாலும் அனுகூலம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவிகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம், பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கை யாவும் மிகச் சிறப்பாக அமையும்.

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் புத்திர வழியில் உண்டாகிய மருத்துவச் செலவுகள் மறையும். உங்கள் வலிமையும் வளமும் கூடும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பூர்வீகச் சொத்து கிடைப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர் பயணங்களாலும் மகிழ்ச்சி உண்டாகும்.

பொருளாதார நிலை:

பொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவையும் சேமிப்பையும் உண்டாக்கும். பழைய கடன்கள் அடைபடும். வழக்கு விவகாரங் களில் உங்களுக்குச் சாதகமான நிலை ஏற்படும். சொத்து வகையில் லாபங்களும் அரசாங்க வகையில் அனுகூலங்களும் தனரீதியில் சாதகமான பலன்களும் உண்டாகும்.

குடும்பம்:

கணவன்- மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை காணப்படும். எதிர்பாராத சாதனை செய்வீர்கள். பிள்ளைகள் வழியில் பூரிப்பைக் கொடுக்கும். உறவினர்களும் நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகமும் அரசு வழியில் ஆதாயமும் கிடைக்கக்கூடும். புதிய முயற்சி வெற்றியைக் கொடுக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

திட்டமிட்ட செயல்கள் மூலம் சிறப்பான சாதனை செய்வீர்கள். வேலைப் பளு குறையும். அதிகாரிகளின் பாராட்டும் சக ஊழியர் களின் ஆதரவும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். உங்கள் உத்தியோக நிலையில் மிகவும் சிறப்பான பதவி உயர்வு, ஊதிய உயர்வுகளும் அமையப் பெறும். கௌரவமான பதவிகளையும் சிலர் அடை வார்கள். வெளியூர் பயணம் ஏற்றம் தரும்.

தொழிலாளர்களுக்கு:

தொழில்ரீதியாக இருந்து வந்த போட்டி, பூசல்கள் யாவும் விலகி மிகவும் உயர்வான நற்பலன்கள் உண்டாகும். அதிக முதலீடு செய்து தொழிலை துணிந்து விரிவுபடுத்தலாம். வெற்றியும் லாபமும் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறும்.

பெண்களுக்கு:

குடும்பத்தில் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். உறவினர் வருகை யால் மன நிம்மதி உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல் நற்பலனை அளிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அற்புதமாகவே அமையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பெருகும்.

கலைஞர்களுக்கு:

வருமானம் நன்றாக இருக்கும். புதிய புதிய வாய்ப்புகள் கிடைக் கும். உங்களின் பெயர், புகழ் கூடும். ரசிகர்களின் ஆதரவும் இருக்கும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களால் லாபமும் பொருள் வரவும் உண்டாகும்.

விவசாயிகளுக்கு:

எதிர்பார்த்த விளைச்சல் ஏற்றத்தை உண்டாக்கும். எதிர்பார்த்த உதவிகள் பெறுவீர்கள். அதனால் பல திட்டங்கள் நிறைவேறும். விவசாயத்திற்குத் தேவையான நவீன கருவிகள் வாங்குவீர்கள். விளை பொருட்கள் சிறப்பான விலைக்குப் போவதால் உங்களது கடன் உடனடியாக விலகும்.

இளைஞர்களுக்கு:

வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். தன வரவுகள் தாராள மாகக் காணப்படும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் ஏற்றமும் உயர்வும் உண்டாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியும்.

மாணவர்களுக்கு:

கல்வியில் நல்ல ஊக்கமும் உற்சாகமும் உயர்ந்த மதிப்பெண்களும் பெற்று, பெற்றோர் மற்றும் ஆசிரியர் பாராட்டையும் பெறுவீர்கள். மேற்கல்வி முயற்சிகளில் வெற்றிமேல் வெற்றி கிட்டும். சிலருக்கு அரசு உதவி பெற்று வெளியூர், வெளிநாடுகளில் தங்கிப் படிக்கும் யோகம் அமையும்.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்

உங்களுக்கு வெற்றிமேல் வெற்றி கொடுக்கக்கூடிய காலமாகும். உங்களின் கௌரவம், புகழ் யாவும் கூடும். புத்திரர்கள் வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். சிலருக்கு வாகனம் வாங்குதல், வீடு மாற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். நீங்கள் எடுக்கக் கூடிய முயற்சிகள் பரிபூரண வெற்றியைக் கொடுக்கும். உங்கள் ஆரோக்கியம் திருப்திகரமாகக் காணப்படும். உங்கள் சகோதரர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அரசு வழியில் உதவிகள் திடீரென்று அமையப் பெறும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் சிறப்பாகக் கைகூடி மனமகிழ்வை ஏற்படுத்தும். மக்கட்பேறு இல்லாதவர்களுக்கு மக்கட்பேறு கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும். செய்கின்ற தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மையும் அபிவிருத்தியும் ஏற்படும். கூட்டுத் தொழில் யோகம் கொடுக்கும்.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்

இக்காலமும் உங்களுக்கு சிறப்பான பலன்களை உண்டாக்கும். உங்களின் வலிமை, வல்லமை யாவும் சிறப்பாகவே இருக்கும். எதிரி களின் பலம் குறையும். உங்களுக்கு வெற்றிகள் குவிந்தபடியே இருக்கும். செய்யும் தொழிலில் பெரிய அளவு முதலீடுகளைச் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உறவினர், நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அரசியல்வாதிகள் இழந்த பதவியை மீண்டும் பெறு வார்கள். புதிய சொத்துகள் வாங்கும் அமைப்பும் உண்டாகும். குடும் பத்தில் சுபிட்சமான நற்பலன்கள் அமையப் பெறும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். விவசாயிகளுக்கு மகசூல் எதிர்பார்த்த அளவுக்குமேல் இருக்கும். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றிமேல் வெற்றி பெறுவார்கள். கலைஞர் களுக்கு சிறப்பான வாய்ப்புகளால் அற்புதமான தன வரவுகள் உண்டாகும்.

குரு வக்ரகதியில் 31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்

உங்கள் தேக ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. எதிலும் அமைதியற்ற போக்கும் அலைச்சலும் உண்டாகும். குடும் பத்தில் கணவன்- மனைவி இடையே வீண் சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டபடியே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை களில் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். எடுத்த காரியத்தில் தடையினை ஏற்படுத்தும். கலைஞர்களுக்கு எதிர்பார்க்கும் பட வாய்ப்பு கிடைக்காது. மாணவர்களின் கல்வியில் ஈடுபாடு குறையும். செய்கின்ற தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடு தோன்றி பிரிவினை உண்டாகும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் குறையும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடை, தாமதம் உண்டாகும். பணிபுரியும் பெண்களுக்கு வேலையில் மன நிம்மதி குறைந்து காணப்படும்.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்

உங்கள் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். பொருளாதார ரீதியில் உயர்வுகள், புதிய முயற்சிகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் அமைப்பும் உண்டாகும். அரசு மூலம் வெகுமானம் கிட்டும். ஒரு நல்ல குறிக்கோளுக்காக புண்ணிய ஸ்தலப் பயணமும் மேற் கொள்ளும் அமைப்பு ஏற்படும். வியாபார சம்பந்தமான வெளி நாட்டுப் பயணமும் ஏற்படும். சுக வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் யாவும் வீட்டில் நிறைந்திடும். குடும்ப வாழ்வில் பூரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவிக்குள் மிக அன்னியோன்ய நிலை அமையப் பெறும். புத்திர வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் மாறி மாறி ஏற்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். உங்களின் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் யாவும் கூடும் காலமாகும்.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்

உங்களின் தேக ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். உங்களுக்கு செய்யும் தொழில் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவி சாதகமாக இருக்கும். புதிய சொத்து வாங்கும் அமைப்பு உண்டாகும். குடும் பத்தில் சுபிட்சமான நற்பலன்கள் அமையப் பெறும். புதிய தொழில் இக்காலத்தில் தொடங்கலாம். எடுக்கும் காரியத்தில் வெற்றிமேல் வெற்றி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத தன வரவு உண்டாகி மன மகிழ்வை ஏற்படுத்தும். குடும்பத்தில் கணவன்- மனைவி உறவு கள் மிகவும் நன்றாகவே இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றமும் மேன்மையும் உண்டாகும். நண்பர்கள் வகையில் சகாயமும் முன்னேற்றமும் உண்டாகும். கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற துறையில் இருப்போர் சுபிட்சமான நற்பலன்களைப் பெறுவார்கள். விவசாயத்தில் லாபம் பெருகும்.

குரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்
3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்

உங்களின் தேகநிலை சிறப்பாகவே இருக்கும். உங்கள் செல்வம், செல்வாக்கு, புகழ், பெருமை யாவும் இக்காலத்தில் மிகச் சிறப் பாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் தனச் சேர்க்கை, லாபம் போன்றவை ஏற்படும். குடும்பத்தில் சேமிப்பு நிலை பெருகும். கணவன்- மனைவி ஒற்றுமை அற்புதமாகவே இருக்கும். பிள்ளை களால் பூரிப்பும் மகிழ்ச்சியும் நற்பெயரும் பெற்றோர்களுக்கு கிடைக்கும். பொருளாதாரம் எந்த வழியிலாவது பெருகும். வீட்டுக்கு வேண்டிய தட்டுமுட்டுச் சமான்களும் வண்டி வாகனங்களும் அமையும். கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற தொழில் செய்வோருக்கு லாபம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் நல்ல மேன்மையும் அபிவிருத்தியும் உண்டாகும். உறவினர், நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

மக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் பொருள் சந்தையில் பெயர், புகழ் பெறும்; லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் விரும்பிய பதவி கிடைக்கப் பெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்; குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் உருவாகும். கொடுக்கல்- வாங்கல் யோகம் கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றிமேல் வெற்றி பெறுவர்.

பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

உடல்நிலை சிறப்பாகவே இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி புகழ் பெறுவீர்கள். உறவினர்களின் வருகையால் நன்மை உண்டாகும். கூட்டுத் தொழிலில் வெற்றி கிட்டும். புத்திர வழியில் பூரிப்பும் பெருமையும் உண்டாகும். அரசியல்வாதிகளின் புகழ், பெருமை, செல்வம், செல்வாக்கு யாவும் கூடும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பெருகும். சுப காரியங்கள் நினைத்தபடியே கைகூடி மன மகிழ்வை ஏற்படுத்தும்.

உத்திரம் 1-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:

உங்களின் தேகநலன் நன்றாகவே இருக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் தேடிவந்து அமையும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் சிறப்பாக கைகூடும். பெண்களின் அபிலாஷைகள் யாவும் பூர்த்தி அடையும். மாண வர்கள் கல்வியில் வெற்றிமேல் வெற்றி பெறுவார்கள். விவசாயிகள் லாபம் அடைவார்கள்.

அதிர்ஷ்டம் அளிப்பவை:

அதிர்ஷ்ட தேதி : 1, 10, 19, 28.
அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.
அதிர்ஷ்ட கல்: மாணிக்கம்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு.
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன்.

பரிகாரம்:

இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் சாதகமாக சஞ்சரித்தாலும், வரும் 15-11-2011 வரை ஏழரைச் சனி தொடருவதால் சனி பகவானுக்கு சனிக் கிழமைகளில் கறுப்புநிற வஸ்திரமும் நீல நிற சங்குப் பூக்களும் சாற்றி, எள் எண்ணெயில் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. ஆஞ்சனேயரை வழிபடுவதும், ஊனமுற்ற ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதும் உத்தமம்.

No comments: