Friday, April 29, 2011

குருப்பெயர்ச்சி பலன்கள் 2011 (துலாம்)

துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

பிறருடைய குணங்களைத் தெளிவாக எடை போடக் கூடிய துலா ராசி நேயர்களே! உங்களுக்கு ஏழரைச் சனியால் தேவையற்ற பிரச்சினைகளும் சோதனைகளும் இருந்தாலும் வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை குரு பகாவன் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பண வரவில் இருந்த பற்றாக் குறைகள் விலகும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பொன்பொருள் சேர்க்கைகளும், சிலருக்கு ஆடை, ஆபரணம் வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். பூமி, மனை, வண்டி, வாகன சேர்க்கைகளும் ஏற்படும். 6-6-2011-ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 2-லும் கேது 8-லும் சஞ்சரிக்க இருப்பதால், குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பதும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தைக் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் கௌரவமான உயர்வுகள் கிட்டும். வெளி யூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய யோகமும் உண்டாகும். சனி துலா ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோக காரகன் என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது என்றாலும் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்தகாலத்தில் இருந்த மருத்துவச் செலவுகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் நலமும் ஆரோக்கியமாகவே இருக்கும். உங்களின் சோதனைகள் அனைத்தும் விலகி குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.

பொருளாதார நிலை:

கொடுக்கல் - வாங்கலில் நன்மை ஏற்படும். பொருளாதார ரீதியாக முன்னேற்றமும் உண்டாகும். எதிர்பாராத பண வரவு உண்டாகி பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத் தில் சில அனுகூலப் பலன்கள் பொருளாதாரரீதியாக உண்டாகும்.

குடும்பம்:

கணவன் - மனைவி ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எதிரி களின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். உறவினர்களும் நண்பர் களும் சாதகமாக இருப்பார்கள். குடும்பத்தில் இருந்து வந்த கடன் தொல்லைகள் மறையும். எதிர்பாராத காரிய சாதனைகளைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

பெரிய அதிகாரிகளின் அன்புக்குப் பாத்திரமாவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு, சிலருக்கு வேண்டிய இடத்திற்கு மாறுதல் போன்ற நற்பலன்கள் யாவும் உண்டாகி பூரிப்பை ஏற்படுத்தும். அடிக்கடி பயணங்கள் உண்டாகி அனுகூலமும் ஆதாயமும் மேலோங்கும். வேலைக்கு முயற்சி செய்தால் நல்ல நிலையான வேலை கிடைக்கும்.

தொழிலாளர்களுக்கு:

பழைய கடன்கள் பைசலாகும். அரசு சலுகைகள் உதவிகள் எதிர் பார்த்த வண்ணம் கிடைக்கும். வேலை இதுவரை இல்லாதவர் களுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். கட்டிட துறையில் இருப்போருக்கு தொடர்ந்து வேலை செய்யும் யோகம் கிட்டும். இதனால் தன வரவு அதிகமாகும்.

பெண்களுக்கு:

உங்களுக்கு சாதகமான காலமாகும். குரு பலம் மிகவும் பிரமாத மாக உள்ளது. எனவே நீங்கள் திருமண முயற்சியில் ஈடுபடலாம். கணவன் மற்றும் உற்றார் - உறவினர்களிடம் நல்ல பெயர் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் சந்தோஷமும் உண்டாகும். புதிய முயற்சிகள் அனுகூலமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அற்புதமாகவே அமையும்.

கலைஞர்களுக்கு:

அதிர்ஷ்ட தேவதை உங்களை நோக்கி வரக்கூடிய காலம் வந்துவிட்டது. தொழில்ரீதியாக மீண்டும் எழுச்சி மேலோங்கும். வீடு, வண்டி, வாகனம் போன்றவை வாங்கும் உன்னதமான அமைப்பு ஏற்படும். மக்கள் ஆதரவு கிடைக்கும். அரசாங்க வழியில் நற்பலன் உண்டாகும்.

விவசாயிகளுக்கு:

நன்செய் மகசூலில் நல்ல செழிப்பு ஏற்படும். ஆழ்கிணறு எடுப்பது மூலம் ஜலப் பிராப்தி கிடைக்கப் பெறும். கால்நடை சேர்க்கை மூலம் தன வரவு சிறப்பாக இருக்கும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். பழவகை, பருத்தி பயிர் செய்வோருக்கு நல்ல வருமானம் கிடைக்கப் பெறும்.

இளைஞர்களுக்கு:

உங்களுக்கு பொருள், தன வரவில் மிகவும் திருப்தியான நிலை ஏற்படும். வெற்றிமேல் வெற்றி உண்டாகும். வெளிவட்டாரப் பழக்கம் சாதகமான பலனைத் தரும். சிலருக்கு அசையா சொத்து வாங்கும் யோகம் ஏற்படும்.

மாணவர்களுக்கு:

கல்வியில் இருந்த மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்றம் அமையப் பெறும். கல்வியில் வெற்றிமேல் வெற்றி கிட்டும். அதிக மதிப் பெண்கள் பெற்று பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் பாராட்டு பெறும் அமைப்பு உண்டாகும். அரசு வழியில் கணிச மான உதவியை சிலர் பெறும் நிலை உண்டாகும்.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்

உங்களுக்கு எல்லா விதத்திலும் மேன்மையையும் அனுகூலத் தையும் உண்டாக்கித் தரும். உங்கள் உடல் ஆரோக்கியம் மிக திருப்திகரமாக இருக்கும். தொழில்ரீதியாக ஏற்றங்கள் உண்டாகக்கூடிய நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன் - மனைவி ஒற்றுமை மிகவும் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு புத்திர வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும். திருமணமாகாத வர்களுக்கு திருமணம் கைகூடி மன மகிழ்வை ஏற்படுத்தும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறப்பான சாதனை புரிவார்கள். கலைஞர்கள் சிறப்பான வாய்ப்புகளால் நல்ல தன வரவைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் கௌரவமான பதவிகள் பெறுவார்கள். விவசாயத்தில் விளைச்சல் பெருகும்.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்

உங்கள் தேகநலன் சிறப்பாகவே இருக்கும். உங்கள் மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். எதிர்பார்த்த உத்தியோக உயர்வுகள் கைகூடும். இல்லத்தில் புத்திரப் பேறு உண்டாகி மன மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு உயர் அதிகாரி, அமைச்சர் போன்ற பதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் கூடும். குடும்பத்தில் கணவன் - மனைவி ஒற்றுமை பெருகும். தொழில்ரீதியாக பெரிய அளவில் முதலீடு செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். கூட்டுத் தொழில், கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் அபரிமிதமான பலன்களை உண்டாக்கும். நண்பர்கள், உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். சிலருக்கு தூர தேசப் பயணங்கள் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிமேல் வெற்றி கிட்டும். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் குதூகலமும் உண்டாகும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் பெருகும்.

குரு வக்ர கதியில்
31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்

உங்களின் தேகநலனில் கவனம் தேவை. குடும்ப வாழ்வில் கணவன் - மனைவி இடையே ஒற்றுமை குறையும். தேவையில்லாத அலைச்சலையும், டென்ஷனையும், விரயத்தையும் உண்டாக்கிக் கொடுக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிலும் எச்சரிக்கையாகச் செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியில் பற்றாக் குறைகள் ஏற்பட்டு அதனால் புதிய கடன்கள் வாங்கும் நிலையும் உண்டாகும். அரசு வழியில் கெடுபிடிகள் அதிகம் உண்டாகும். அரசாங்க ஊழியர்களுக்கு விருப்பமில்லாத மாற்றத்தைக் கொடுக்கும். கூட்டுத் தொழிலில் சங்கடங்களும் பொரு ளாதார நெருக்கடியும் உண்டாகும். எந்த புதிய முயற்சியும் தோல்வி யைக் கொடுக்கும். செய்கின்ற தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்

உங்கள் முயற்சிகள் பரிபூரண வெற்றியை உண்டாக்கித் தரும். வாழ்வில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகமாகும். தேக ஆரோக்கியம் பலப்படும். குடும்பத்தில் அபரிமிதமான செல்வச் சேர்க்கை உண்டாகும். சோதனைகள் குறையும். அரசாங்க வகை யில் உதவி மற்றும் ஆதரவுகள் பெருகும். குடும்பத்தில் கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும். புத்திர வழியில் சந்தோஷம் ஏற்படும். தொழில்ரீதியாக எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் இட மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு தூர தேசப் பயணங்கள் அமையும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகைகள் சிலருக்கு திடீரென்று வந்துசேரும். மாணவர்களில் சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் கிட்டும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை ஏற்றமான பலன்களை ஏற்படுத்தும்.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்

உங்களின் உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாகவே இருக்கும். அரசியல்வாதிகளுக்கு ஏற்றமும் உயர்வும் உண்டாகும். உங்கள் செல்வம், செல்வாக்கு, புகழ், பெயர், பெருமை யாவும் இக்காலத்தில் மிகச் சிறப்பாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் தனச் சேர்க்கை, லாபம் போன்றவை ஏற்படும். குடும்பத்தில் சேமிப்பு நிலை பெருகும். கணவன் - மனைவி உறவு கலகலப்பாகக் காணப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நற்பெயரும் பெற்றோர்களுக்குக் கிடைக்கும். பொருளாதாரம் பல்வேறு வகையில் பெருகும். மாணவர்கள் கல்வியில் சாதனை படைத்து பரிசுகளைப் பெறுவர். கொடுக்கல் - வாங்கல் அனுகூலமாக இருக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை அற்புதமாகவே அமையும். சிலருக்கு ஸ்திர சொத்துச் சேர்க்கை உண்டாகும்.

குரு கிருத்திகை நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்

இக்காலத்தில் உங்களின் தேகநிலை அற்புதமாக இருக்கும். திடீர் பண வரவு ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை காணப்படும். மன நிம்மதியும் மகிழ்ச்சியான நிலையும் உண்டாகும். தொழில் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் யாவும் குறையும். வெளியூர்ப் பயணங்களால் அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் இனி இருக்காது. புத்திர வழியில் பூரிப்பும் பெருமையும் உண்டாகும். நெருங்கிய உறவினர் களால் நன்மை ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் அதனால் விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைக்கும். மாண வர்கள் ஏற்றமான நிலைகளில் காணப்படுவார்கள். அரசியல் வாதிகளுக்கும் கலைஞர்களுக்கும் விரும்பிய செயல்கள் ஈடேறும்.

சித்திரை 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:

உங்களின் தேக ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் சிறப்பாகக் கை கூடி மன மகிழ்வை ஏற்படுத்தும். கொடுக்கல் - வாங்கல் யோகமாக இருக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை ஏற்றம் தரும். வியாபாரத்தில் பெரிய அளவு முதலீடுகளைப் பயன்படுத்தி லாபத்தைப் பெருக்குவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத தன வரவினால் மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

தேகநிலை அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் கணவன் - மனைவி ஒற்றுமை பெருகும். புத்திர வழியில் பூரிப்பும் பெருமையும் உண்டாக்கும். பெண்கள் நினைத்த காரியம் வெற்றியைக் கொடுக் கும். கூட்டுத் தொழிலில் ஒற்றுமை ஏற்பட்டு உற்பத்தி பெருகும். கலைஞர்களின் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் யாவும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான சாதனை புரிவார்கள். அரசியல் வாதிகளுக்குப் புதிய பொறுப்புகள் வந்துசேரும்.

விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:

எடுக்கும் காரியம் யாவும் வெற்றிமேல் வெற்றியை உண்டாக்கும். குடும்பத்தில் தன வரவும் பொருள் வரவும் சிறப்பாகவே இருக்கும். பெண்களுக்கு சுப காரிய முயற்சிகள் கைகூடும். மாணவர்களின் கல்வியில் ஏற்றம் ஏற்படும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை யோகம் கொடுக்கும். அரசியல்வாதிகளின் செல்வம், செல்வாக்கு கூடும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை:

அதிர்ஷ்ட தேதிகள் : 5, 6, 8.
அதிர்ஷ்ட கிழமை : புதன், சனி.
அதிர்ஷ்ட திசை : மேற்கு.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை.
அதிர்ஷ்ட தெய்வம் : முருகன், ரங்கநாதர்.

பரிகாரம்:

இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால், வியாழக் கிழமைகளில் விரதமிருந்து தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி மஞ்சள் நிற வஸ்திரமும், மஞ்சள் நிறப் பூக்களும் சாற்றி அர்ச்சனை செய்வது நல்லது. சனிக் கிழமைகளில் சனி பகவானுக்கு பரிகாரம் செய்வது, எள் எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது மிகவும் உத்தமம். ஏழை- எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.

No comments: