Friday, April 29, 2011

குருப்பெயர்ச்சி பலன்கள் 2011 (மிதுனம்)

மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், நகைசுவை உணர்வுடனும் செயல்படக் கூடிய மிதுன ராசி நேயர்களே! பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் வரும் 8-5-2011 முதல் சஞ்சரிக்க இருப்பதால் பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். கடன்கள் யாவும் மறையும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியமும் உண்டாகும். உற்றார்- உறவினர் களிடையே இருந்த பகைமை விலகி ஒற்றுமை பலப்படும். எதிரி களும் நண்பர்களாக மாறுவார்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை முதலீடு செய்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள். இதுவரை 1, 7-ல் சஞ்சரித்த கேது- ராகு மாறுதலாகி 6-6-2011 முதல் ராகு 6-ஆம் வீட்டிலும் கேது 12-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதும்; வரும் 15-11-2011-ல் உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டி ருக்கும் அர்த்தாஷ்டமச் சனி முடிவடைந்து விடுவதும் சாதகமான அமைப்பு என்பதால் அலைச்சல், டென்ஷன் குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும் இடமாற்றங்களையும் பெறுவர். அசையும்- அசையா சொத்து சேர்க்கை, சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.

ஆரோக்கியம்:

உங்கள் தேக ஆராக்கியம் மிகவும் அற்புதமாகக் காணப்படும். உங்களுக்கு எதிர்பாராத விதத்தில் வெற்றியும் மனமகிழ்ச்சியும் தரும் சம்பவங்களும் நடைபெறும். புத்திர வழியில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். அன்றாட செயல்களில் மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். தொலைதூரப் பயணங்கள் மூலம் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

பொருளாதார நிலை:

உங்களுக்கு பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளி வந்த கடன் பைசல் ஆகும். சிலருக்கு எதிர்பாராத தன வரவு உண்டாகும். பொருளாதார வகையில் தன்னிறைவும் சேமிப்பும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பான நற்பலன்களைக் கொடுக்கும்.

குடும்பம்:

கணவன்- மனைவி ஒற்றுமை மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் புதிய சொத்துகளின் சேர்க்கை உண்டாகும். மேலும் பெண்களுக்கு சகோதர வழியில் பொருள் வரவும் தன வரவும் உண்டாகும். சிலருக்கு தாய் வழியில் சொத்து சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகையால் தன லாபம் ஏற்படும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

அதிகாரிகளின் ஆதரவும் ஊழியர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துவிடும். சுப காரியத்திற்கு அரசு வழியில் பெரும் தொகை கடனாகப் பெறுவீர்கள். தனியார் துறையில் உத்தியோகம் செய்பவர்களுக்கு உத்தியோகத்தில் மேலும் மேலும் சுபிட்சம் உண்டாகும். அதுமட்டுமின்றி, பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் யாவும் உண்டாகும்.

தொழிலாளர்களுக்கு:

உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெற்றுவிடக் கூடிய சூழ்நிலைகள் உருவாகிவிட்டன. சிலர் இக்காலத்தில் புதிய வண்டி வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பாராட்டுதல்களையும் புகழையும் பெறுவீர்கள். சில சத்ருக்களை வீழ்த்த உங்களிடம் இக்காலத்தில் நல்ல மனோதிடம் காணப்படும்.

பெண்களுக்கு:

உங்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். மனதில் தெளிவு ஏற்படும். திருமணம் ஆகாத பெண்களுக்குத் திருமணம் ஆகும். படித்த பெண் களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே வேலைக்கு முயற்சி எடுக்கவும். குடும்ப வாழ்வு சந்தோஷம் கொடுக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாக்கும்.

கலைஞர்களுக்கு:

அதிர்ஷ்ட தேவதை உங்களை நோக்கி வரக்கூடிய காலமாகும். தொழில்ரீதியாக மீண்டும் எழுச்சி மேலோங்கும். குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும். வீடு, வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.

விவசாயிகளுக்கு:

நன்செய் மகசூல் நல்ல செழிப்பை ஏற்படுத்தும். அரசு வழியில் உதவிகளும் கடன் சலுகைகளும் கிடைக்கும். உங்கள் புகழ் பெருகும். உங்கள் திறமை குன்றின் மேலிட்ட விளக்காய் ஒளிரும். பொருளாதாரம் நல்ல உயர்வு பெறும்.

இளைஞர்களுக்கு:

உங்களுக்கு பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் மூலம் நற்பலன் உண்டாகும். பொருள் வரவு மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலை கிடைக்கும். மணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

மாணவர்களுக்கு:

கல்வியில் மேன்மையான பலன் கிடைக்கும். மாணவர்கள் வெற்றி கரமான காரியங்களைச் செய்து சாதனை செய்திடுவர். குறிப்பாக விளையாட்டுப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். பொருளாதாரம் வங்கி சம்பந்தப்பட்ட துறையினை எடுத்துப் படிப்பவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்

உங்களின் தேக ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். தொழிலில் ஏற்றமான நிலை உண்டாகும். தெய்வ வழிபாடு, ஸ்தல தரிசனம் செய்யும் வாய்ப்பு உண்டாகும். தொழில்ரீதியாக தொடரும் காரியங் கள் வெற்றியைக் கொடுக்கும். விவசாயிகளுக்கு நன்செய் மகசூலில் நல்ல செழிப்பு ஏற்படும். நண்பர்களுடன் நல்ல உறவும் யோகமான நிலையும் மேலோங்கும். பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை அற்புதமாகவே அமையும். எதிர்பார்க்கும் சுபச் செய்தி மன மகிழ்வை உண்டாக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை அபரிமிதமான நற்பலன்களைக் கொடுக்கும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். அரசாங்க வழியில் அனுகூலங்கள் ஏற்படும்.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்

உங்களுக்கு எல்லா விதத்திலும் மேன்மையையும் ஆற்றலையும் உண்டாக்கித் தரும். உங்களின் உடல் ஆரோக்கியம் மிகத் திருப்தி கரமாக அமையும். உங்களுக்கு தொழில்ரீதியாக ஏற்றங்கள் உண்டாகக் கூடிய நிலைகள் ஏற்படும். செய்யும் தொழில் சிறப்பாகவே இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய சொத்து வாங்குகின்ற யோகமும் இக்காலத்தில் அமையப் பெறும். குடும்பத்தில் சுபிட்சமான நற்பலன்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபங்களும் அபிவிருத்தியும் உண்டாகும். சிலருக்கு கைவிட்டுப்போன சொத்து சுகங்களும் கைவந்து சேரும். தெய்வ வழிபாட்டாலும் பெரியவர்களின் ஆதரவாலும் உயர்பலன் உண்டாகும். மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றி பெற்று நிறைய மதிப்பெண்கள் வாங்குவார்கள். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும்.

குரு வக்ர கதியில்
31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்

உங்களின் தேக நலன் சுமாராகவே காணப்படும். குடும்பத்தில் பொருள் வரவு வந்தாலும் விரயச் செலவுகள் கூடுதலாகும். சிலருக்கு கண் வியாதிகள் வரும். உங்கள் வாக்கிற்கு மதிப்பு குறையும். திடீர் கடன்கள் வாங்க நேரிடும். ஸ்திர சொத்துக்கள் வர தாமதமாகும். மாணவர்கள் வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாகச் செயல்பட வேண்டும். வியாபாரிகளுக்கு கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடு தோன்றும். புதிய முயற்சிகள் அனுகூலமாக இருக்காது. சிலருக்கு அரசு வழியில் திடீர் சோதனைகளும் கெடுபிடிகளும் உண்டாகி மனக் குழப்பத்தை ஏற்படுத்தும். மேலதிகாரிகளையும் சக ஊழியர்களையும் அனுசரித்துப் போவது நல்லது. விவசாயி களுக்கு எதிர்பார்த்த விளைச்சல் இருக்காது. கணவரின் உடல்நலத்தில் பாதிப்பேற்படும். புதிய திட்டம், புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். ஸ்பெகுலேஷன் நற்பலன் தராது.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்

உங்களுக்கு எடுத்த காரியங்கள் வெற்றியைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். மருத்துவச் செலவுகள் கட்டுக்குள் அடங்கும். சகோதரி வழியில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் பெற்றோருக்கு நற்பெயரும் மதிப்பும் கூடுத லாகும். பிள்ளைப்பேறு எதிர்பார்த்தவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். எந்தத் தொழில் தொடங்கினாலும் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிலருக்கு தூர தேசப் பயணமும் உண்டாகும். புதிய நண்பர்களின் சேர்க்கை ஏற்பட்டு அவர்களால் சில நற்பலன்கள் உண்டாகும். மாணவர்கள் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்வார்கள். கோர்ட், வழக்கு போன்றவை உங்களுக்கு சாதகமாக முடியும். குடும்பத்தில் சுப விரயம் உண்டாகும். அரசு வழியில் அனுகூலம் ஏற்படும்.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்

இக்காலத்திலும் உங்களுக்கு ஏற்றமான பலன்களை உண்டாக்கும். பொருளாதார ரீதியில் தனவரவும் பொருள் வரவும் அற்புதமாக இருக்கும். மனோ தைரியம் கூடும். சகோதரர், தந்தை வழியில் உதவிகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கும் புதுப் பதவி கள் வந்து நிலைமையை உயர்த்தும். எதிரிகளின் தொல்லை குறைந்து உங்களுக்கு அவர்கள் கீழ்ப்படிந்து நடப்பார்கள். அவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சிலருக்கு அரசு கடன் உதவிகள் கிடைக்கப் பெறும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். உத்தியோக ரீதியாக திடீரென்று சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறும். உங்களின் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் யாவும் கூடும். குடும் பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாகவே இருக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை அபரிமிதமான லாபத்தை உண்டாக்கும். புது முயற்சிகள் வெற்றி தரும்.

குரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்
3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்

எல்லா வகையிலும் ஏற்றமும் வெற்றியும் உண்டாகும். உங்க ளுக்கு இந்த காலம் நன்மைகள் அதிகம் கொடுக்கும். கடல் கடந்த பயணமும் சிலருக்கு உண்டாகும். பூமி சேர்க்கை, மனை சேர்க்கை எதிர்பாராமல் ஏற்படும். மாணவர்கள் முதன்மையாக வெற்றி பெறுவதுடன் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். சகோதர வழியில் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சியான உறவுகள் உண்டாகும். சுப காரியத்திற்கு மற்றவர்களிடம் பொருள் பெறும் நிலை உண்டு. உத்தியோகஸ்தர்கள் சுபிட்சமான பலன் பெறு வார்கள். எதிர்பாராமல் திடீர் திடீரென்று பொருள் வரவாகும். வியாபாரிகள் அபரிமிதமான லாபத்தைப் பெற்றிடுவார்கள். அரசு ஊழியர்கள் மிக சுபிட்சமான பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை அற்புதமாகவே அமையும்.

மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:

உங்களுக்கு சொத்து வகையில் லாபங்கள், தொழில் ரீதியில் சாதகமான சூழ்நிலைகள், நண்பர்களால் பெரிய நன்மைகள், அரசு வழியில் அனுகூலமான நற்பலன்கள் உண்டாகும். குடும்ப வாழ்வில் ஒற்றுமை நிறைந்திடும். கூட்டுத் தொழில் யோகம் கொடுக்கும். சுப காரியங்கள் சிறப்பாகக் கைகூடும். உத்தியோகத்தில் விரும்பிய பதவி உயர்வு உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

தேக நலன் அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத தன வரவு உண்டாகி மனமகிழ்வை ஏற்படுத்தும். திருமணம் போன்ற மங்களகரமான காரியங்கள் இனிதே நடைபெறும். பெண்களுக்கு புத்திர வழியில் பூரிப்பையும் பெருமையையும் கொடுக்கும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் லாபம் பெருகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும். புது முயற்சியில் ஏற்றம் உண்டாகும்.

புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:

இக்காலத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகும். புதிய முயற்சிகள் வெற்றி கொடுக்கும். இல்வாழ்வில் நிம்மதி கொடுக்கும். சிலருக்கு ஸ்திர சொத்துச் சேர்க்கை உண்டாகும். எண்ணிய எண்ணம் கைகூடும். சிலருக்கு தொலைதூரப் பயணமும் அதனால் நற்பலனும் மேலோங்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட் ராக்ட் போன்றவற்றில் அற்புதமான நற்பலன்களை உண்டாக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை:

அதிர்ஷ்ட தேதி: 4, 5, 9, 14, 18, 23.
அதிர்ஷ்ட கிழமை: புதன், வெள்ளி, ஞாயிறு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெள்ளை.
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட கல்: மரகதப் பச்சை.
அதிர்ஷ்ட தெய்வம்: விஷ்ணு.

பரிகாரம்:

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை வாரி வழங்கினாலும், வரும் 15-11-2011 வரை அர்த்தாஷ்டமச் சனி தொடருவதால் நீங்கள் சனிக் கிழமைகளில் சனி பகவானுக்குப் பரிகாரம் செய்வது, எள் எண்ணெயில் தீபமேற்றுவது, கறுப்பு நிற வஸ்திரம் சாற்றுவது உத்தமம். ஆஞ்சனேயரை வழிபாடு செய்வதன் மூலமும் வாழ்வில் வளம் பெருகும்.

No comments: