பொதுவாக ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமலே கடைசிவரை தனது குடும்பத்திற்காகவே வாழ்ந்து இறந்து விடுவர். வேறு சிலர் தனது குடும்பத்தையும் துறந்து , தனது சுக இன்பங்களையும் மறந்து இறைப்பணிக்காக இல்லற வாழ்க்கையை விட்டு துறவறமென்னும் சன்யாசத்தை ஏற்படுத்திக்கொள்வர். இவையெல்லாம் முன் ஜென்ம கரும பலன்களே. அதாவது பூர்வ புண்யம் என்பர். அவ்வாறு இல்லறத்தை விட்டு துறவறத்தை கொண்ட வைணவப்பெரியார் ராமானுச்சாரியாரின் ஜாதநிலையில் உள்ள கிரககங்கள் ஒரு பார்வை.
பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவப் பெரியார்.உதாரண ஜாதகத்தில் திருமணம் ஆகாமலே சன்யாச வாழ்க்கை வாழ்ந்த ராமானுஜச்சாரியாரின் ஜாதக கிரகநிலைகள் :
- சந்திரனுக்கு நான்காம் அதிபதி புதன் சுக்கிரனுடன் இணைந்திருப்பது.
- சந்திரன் , குரு இணைந்து சனியினால் சமசப்தமாக பார்க்கப்படுவது.இங்கு குரு , சனி இணைப்பு சன்யாச யோகத்தை தந்தது.
- சூரியன் உச்சம் பெற்று 3-12 க்கு அதிபதி புதன் , 4-11 க்கு அதிபதி சுக்கிரனுடன் இணைந்து 10- ல் இருப்பது இறவாப் புகழ் பெற்ற சன்யாச யோகமாகும்.