Saturday, January 15, 2011

2011 குரு பெயர்ச்சி

மேஷம்

(அசுவினி, பரணி, கார்த்திகை 1வது பாதம் வரை)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்

மேஷ ராசியின் சிறப்பு: ராசிக்கட்டத்தில் முதன்மையாக வரும் மேஷ ராசி பூமி தத்துவத்தைக் கொண்டதாகும். செம்மறி ஆட்டின் தலை இதன் உருவமாகும். மேஷத்தை தன் ராசியாகவும் லக்னமாகவும் கொண்டவர்கள் எந்த காரியத்தையும் சாமர்த்தியமாக செய்து முடித்து விடுவார்கள். பொதுவாக இவர்களின் தேகம் மெலிந்து காணப்படும்., நிமிர்ந்த நடை, அடர்ந்த புருவம், செவ்வரியோடிய கண்கள் உடைய இவர்கள் அன்பு, கண்டிப்பு இரண்டையும் கலந்து செயல்படுவார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் அரசுத் துறையில் உயர் அதிகாரியாக பணிபுரிதல், போலீஸ், ராணுவம் போன்ற துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். எளிதில் கோபப்படும் சுபாவம் இவர்களுக்கு உண்டு. தன்னிடம் சரண் அடைந்தவர்களுக்கு அன்பும், ஆதரவும் காட்டுவார்கள். மேஷத்திற்கு உரிய ஆதிக்கக் கிரகம்-செவ்வாய். அதிர்ஷ்ட மலர்-செண்பம். அதிர்ஷ்டக் கல்-பவளம். அதிர்ஷ்ட நிறம்- சிவப்பு. அதிர்ஷ்ட திசை-தெற்கு. அதிர்ஷ்டஎண்-9. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்-சுப்பிரமணியர்.

மேஷ ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: அசுவினி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கார்த்திகை 1ம் பாதம், அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர அதிபதி கேது ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப தெசை கேது ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகும், கவர்ச்சியும் மிக்கவர்களாக இருப்பார்கள். அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)-கேட்டை நட்சத்திரம். திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும். பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி. அதிர்ஷ்ட மலர்- செவ்வல்லி. அதிர்ஷ்ட நிறம்-கரும்பச்சை. அதிர்ஷ்ட எண்-1. இந்த நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சாந்தமும், தயாள குணமும் உடையவர்கள். பிறரை எளிதில் புரிந்துகொண்டு செயல்படுவார்கள். சில சமயங்களில் இவர்கள் பேசுவது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் இருக்கும். இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களின் நெற்றி உயர்ந்திருக்கும். கல்வி அறிவு மிக்க இவர்கள் வாதம் செய்வதில் வல்லவர்கள். எப்பொழுதும் எதாவது ஒன்றிற்காக கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் கணிதத்தில் வல்லவர்களாக இருப்பார்கள். எப்போதும் அமைதியாகவும் அடக்கமாகவும் காணப்படுவார்கள். எவரையும் வžகரிக்கும் சக்தி இவர்களிடம் உண்டு. இவர்களிடம் சில சமயம் சுயநலம் தலை தூக்கும். நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் விசாலமான அறிவு உடையவர்கள். எப்போதும் உண்மையே பேசும் இவர்களிடம் பணமும் நல்ல நண்பர்களும் தங்குவது குறைவாகவே இருக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி சுக்ரன் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப தெசை சுக்ரன் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாக்குத் தவறாதவர்கள். மக்கள் மத்தியில் இவர்களுக்கு நல்ல செல்வாக்கு இருக்கும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- அனுஷம் நட்சத்திரம் திருமணம் செய்ய. தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி, விசாகம். அதிர்ஷ்ட மலர்-வெண்தாமரை. அனுகூல தெய்வம்-லட்சுமி. அதிர்ஷ்டக் கல்-வைரம். அதிர்ஷ்ட நிறம்-வெண் நீலம். அதிர்ஷ்ட எண்-2. பரணி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சிவந்த மேனியும் பருத்த உடலும் உள்ளவர்கள். இவர்கள் எப்போதும் நியாயத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருப்பார்கள். பிறரின் பேச்சைக் கேட்டு அதன்படியே நடப்பார்கள். இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் தன்மானம் மிக்கவர்களாக நடப்பார்கள். இரக்ககுணம் உடைய இவர்கள் சில சமயம் தன்னைத்தானே உயர்வாக மதிப்பிடுவார்கள். விரோதிகளையும் வென்று புகழை அடைவார்கள். மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் எளிதில் ஆத்திரப்படும் சுபாவம் உடையவர்கள். எடுக்கும் காரியங்களில் வெற்றியும், ஆதாயமும் பெறுவார்கள். நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் பருத்த தேகம் உடையவர்கள். இவர்களிடம் செல்வம் வேகமாக வந்து சேரும். கலைகளில் ஆர்வமும், தேர்ச்சியும் உடையவர்கள். இவர்களுக்கு உடன் பிறந்தவர்களால் ஏற்படும் அனுகூலம் குறைவாகவே இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி சூரியன். அவர்களின் ஆரம்ப தெசை சூரியன் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவுத் திறனும் ஆற்றலும் மிக்கவர்கள். அதிகமாகத் தூங்க மாட்டார்கள். கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- விசாகம் நட்சத்திரம், திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி. அதிர்ஷ்ட மலர்-மந்தாரை. அனுகூல தெய்வம்-சிவன். அதிர்ஷ்டக் கல்-மாணிக்கம். அதிர்ஷ்ட நிறம்-சிவப்பு. அதிர்ஷ்ட எண்-3. கார்த்திகை முதல் பாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் நண்பர்கள் சூழக் காணப்படுவார்கள். வசதி வாய்ப்புகள் அதிகம் உள்ள இவர்களுக்கு உடலில் உஷ்ணம் சம்பந்தமான வியாதிகள் இருந்துகொண்டே இருக்கும்.

பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் விக்ருதி வருடம் கார்த்திகை மாதம் 5ம் தேதி 21-11-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு மணி 10.54.மணிக்கு பூரட்டாதி 4ம் பாதம் மீன ராசியில் பிரவேசிக்கிறார். இதுவரை உங்கள் ராசியிலிருந்து 11ம் இடத்தில் இருந்து பல வளங்களை அள்ளித்தந்து கொண்டிருந்த குரு 12ம் இடத்திற்கு மாறுகிறார். பெண்கள் எந்த சூழலிலும் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படும் நேரம் இது. பங்குச் சந்தை, பணம் கொடுக்கல்-வாங்கல் எதுவாக இருந்தாலும் வியாபாரிகள் தங்கள் கணக்கு வழக்குகளை முறையாகப் பராமரித்து வருதல் நல்லது. சுய தொழில் புதிய முதலீடுகளில் கவனமாய் இருந்தால், இழப்புகள் குறையும். உடனிருந்து தொல்லை தருபவர்களிடமிருந்து விலகி இருங்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு உண்மையான திறமைக்கும், நேர்மைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். பயணங்களின் போது புதியவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். தனியார் துறையில் பணிபுரிவோருக்கு, உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை என்ற குறை இருக்கும். தெய்வ பலம், நேர்மையான போக்கு- இரண்டையும் பக்க பலமாக வைத்துக்கொண்டால் வெற்றியும் மதிப்பும் உங்களைத் தேடிவரும்.

பெண்களுக்கு: இணக்கமாய் நடந்து கொள்வதில் கவனமாய் இருந்தால் கணவன் வழி உறவுகள் உங்களுக்கு சாதகமாய் இருக்கும். சிறிய வேலைகளை முடிப்பதற்கான அலைச்சல் அதிகரிக்கும். ஆயாசம் தோன்றாத வகையில் சத்தான உணவு வகைகளை உண்ணுங்கள். பிள்ளைகள் விஷயத்தில் உள்ள பிரச்சினைகளை நிதானமாக கையாளவும். அவர்களிடம் உரையாடுகையில் பேச்சில் பட படப்பைத் தவிர்த்து விடவும். புதிய நட்புகள் கிடைக்கும். எனினும் தராதரமறிந்து அளவோடு பழகுதல் நல்லது. கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.

மாணவர்களுக்கு: படிப்பு விஷயங்களில் சிறிது மந்த நிலை ஏற்பட்டாலும், உங்கள் விடா முயற்சியால் இந்த நிலையை மாற்றி விடலாம். எந்த சிறிய விஷயமாயினும், உடனுக்குடன் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேர்வுக்கு தயார் செய்யும் சமயம் எழும் சந்தேகங்களுக்கு விடை தேட அலைய வேண்டியிராது. மூத்தோர் சொல் அமிர்தம் என்பதற்கிணங்க அவர்கள் தரும் ஆலோசனைகளை அவசியம் பின்பற்றி வாருங்கள். நற்பலன்கள் எளிதில் கிட்டும். அதிக அலைச்சல் அறிமுகமில்லாத புதிய உணவு வகைகள் ஆகியவற்றை விலக்குவது நலம். செலவுகளில் சிக்கனமாக இருப்பது புத்திசாலித்தனமாகும்.

வியாபாரிகளுக்கு: வியாபார வட்டத்தில் அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி வரும். எதிர்பாராத வரிச் செலவு கூடும். எனவே வாடிக்கையாளர்களின் வரவுக்கு ஏற்றவாறு சரக்குகளைக் கொள்முதல் செய்து கொள்வது அவசியம். புதிய தொழிலை இந்த காலத்தில் தொடங்க வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினாலே போதும். பணவிஷயத்தில் சற்று கவனம் தேவை. யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். அதிக முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறும். பணியாளர்களோடு வியாபாரிகளும் அதிக சிரத்தை எடுத்து உழைக்க வேண்டும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: புதிய இலாக்காவிற்கு மாறும் வாய்ப்பிருப்பதால் வேலைப்பளு அதிகரிக்கும். உங்களுக்கு கிடைக்கக்கூடிய சின்ன சலுகைகளை முறையாக பயன்படுத்தி வாருங்கள். பெரிய இழப்புகளைத் தவிர்ப்பதுடன் உங்கள் பெயரையும் காப்பற்றிக்கொள்ள முடியும். தொழிலாளர்களின் முயற்சியில் தடைகள் வரலாம். ஆனாலும் அதை சாமர்த்தியமாக முறியடித்து வெற்றி காண திட்டமிட்டு வேலை செய்வது அவசியம். தீவிர முயற்சியின் பேரில் காரிய அனுகூலம் ஏற்படும். பணிக்கு உரிய மரியாதையை அளித்து வந்தால் உங்களுக்கு உரிய மரியாதை தானே கிடைக்கும். எந்த சூழலிலும் பொறுமை காப்பது அவசியம்.

கலைஞர்களுக்கு: புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்றாலும் அதற்குரிய புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். ஆடம்பர செலவை குறைப்பது புத்திசாலித்தனம். உடல்நலம் சுமாராக இருக்கும். பித்தம், மயக்கம் மற்றும் கண் தொடர்பான உபாதைகளை உடனுக்குடன் கவனிப்பது அவசியம். எடுக்கும் பணியில் சிரத்தை எடுத்து செய்தால், வேண்டிய பலனும், பாராட்டும் தானே வந்து சேரும். புதிய சொத்து வாங்கும் எண்ணங்களை தள்ளிப்போடுவது நல்லது. அடிக்கடி மேற்கொள்ளும் வெளியூர் பயணம் மூலம் பெறும் பலன்கள் சொற்பமாக இருப்பதால், திறமையை முழு அளவில் பயன்படுத்தினால் நல்ல இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.

விவசாயிகளுக்கு: கஷ்டப்பட்டு உழைக்கும் அளவிற்கு விவசாயத்தில் வளம் காணலாம். கடன், மானியத் தொகை முதலியவை பெற தேவையான ஆவணங்களை அறிமுகம் இல்லாதவர்களிடம் கொடுப்பதைத் தவிர்த்தால் வீண் தொல்லைகள் உண்டாகாது. விவசாயத்திற்கு வேண்டிய கருவிகளை கடனாகப் பெறுதல், கடனாகத் தருதல் இரண்டிலும் கவனம் தேவை. நல்ல மகசூல் தரும் பயிர்களைத் தேர்வு செய்வதோடு அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். அரசு வகையில் அனுகூலமான போக்கு உருவாகும் வரை காத்திருந்தால், வேண்டிய சலுகைகளைப் பெறுவது எளிதாக இருக்கும்.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு: எதிர்பார்த்த வகையில் விஷயங்கள் அமையாமல் சிற்சில பின்னடைவுகளை சந்திக்க வேண்டி வரலாம். எனவே திட்டங்கள் நிறைவேறும்வரை பொறுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்படுவது அவசியம். பொதுவாக அலைச்சல் அதிகரிக்கும். பண விவகாரங்களில் விழிப்புடன் இருந்தால், சர்ச்சைகள் எதிலும் சிக்காமல் இருப்பதோடு அமைதியாகவும் வேலைகளில் ஈடுபட முடியும். அவ்வப்போது வழக்குகளில் போக்கை கவனித்து வருவது அவசியம். உடன் இருப்பவர்களோடு அனுசரித்து நடந்து கொண்டால், உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் ஓரளவு கிடைக்கும். பொதுக்கூட்டம் முதலியவற்றில் பக்குவமாக நடந்து கொள்ளவும்.

பரிகாரங்கள்: வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள். வயதானவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்வதோடு, ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வரவும். செவ்வாய்கிழமைகளில் துர்க்கை அன்னையை ஆராதித்து வர, மன சங்கடங்கள் யாவும் படிப்படியாக விலகும். குடும்ப சூழலிலும் இணக்கமான சூழல் நிலவும்.

ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகžரிடம் 1, 2 பாதங்கள் வரை)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்

ரிஷப ராசியின் சிறப்பு: ராசிக்கட்டத்தில் இரண்டாவதாக வரும் பெண் ராசி ரிஷபம் ஆகும். காளை மாட்டின் தோற்றம் இதன் உருவமாகும். ரிஷபத்தைத் தன் ராசியாகவும், லக்னமாகவும் கொண்டவர்கள். கலைகளில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். எந்தத் துறையானாலும் திறம்படச் செய்து முன்னேறி, தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விடுவார்கள். இரக்க சுபாவமும், பிறர்க்கு உதவும் குணமும் கொண்டவர்கள். பொன், பொருள், புகழைக் குவிப்பதில் இவர்களுக்கு எந்த சிரமமும் இராது. இவர்களிடம் சற்று முரட்டுத்தனமும் பிடிவாதமும் காணப்படும். தைரியசாலியான இவர்கள் எதையும் துணிந்து செய்வார்கள். எடுத்துக்கொண்ட காரியத்திலுள்ள சிரமத்தைப் பொருட்படுத்தாது வெற்றிகரமாகச் செய்து முடிப்பர். வேலையை முடிக்கும் வரை பசியோ, தூக்கமோ இவரது கவனத்தைக் கலைத்துவிட முடியாது. ஒழுக்கம், நாணயம் இவையிரண்டையும் இரு கண்களாகக் கொண்டவர். மற்றவர்களின் ஆலோசனைகள் உங்களுக்குப் பல வழிகளில் உதவியாக இருக்கும். அரசியல், அரசு, நிறுவனம் போன்றவற்றில் முக்கியப் பொறுப்பு வகிப்பதால் மக்களிடமும், சக ஊழியர்களிடமும் எளிதில் பழகும் சுமூக வாய்ப்பு கிடைக்கும். தாய், தந்தை மீது அதிக அன்பும் பக்தியும் கொண்டிருக்கும் நீங்கள் குடும்ப உயர்வுக்காகவும் நலனுக்காகவும் பாதுகாப்பாக நடந்து கொள்வீர்கள். ரிஷபத்திற்கு உரிய ஆதிக்கக் கிரகம்-சுக்கிரன். அதிர்ஷ்ட மலர்-வெண்தாமரை. அதிர்ஷ்ட திசை-தென்கிழக்கு. அதிர்ஷ்ட எண்-6. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்-லட்சுமி.

ரிஷப ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி 1, 2, 3, 4 பாதங்கள். மிருகžரிடம் 1, 2, பாதங்கள். கார்த்திகை 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் அடுத்தவர் பாராட்டும்படி வாழ்வை அமைத்துக்கொள்வார்கள். கவர்ச்சியாகப் பேசி அடுத்தவரைக் கவர்ந்து விடுவார்கள். ஆடம்பரமாக வாழ வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். கார்த்திகை 3ம் பாதத்தில் பிறந்தவர்களின் வாழ்வின் முன் பகுதியில் ஏற்றமும், இறக்கமும் காணப்படும். எதையும் நிதானத்துடன் செய்யும் குணம் இவர்களிடம் உண்டு. முன் கோபியாக இருப்பர். கால்நடை மற்றும் பால் பாக்கியம் உள்ளவர்களாக இருப்பார்கள். கார்த்திகை 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் திட புத்தி உள்ளவர்களாக இருப்பார்கள். அரசியலில் செல்வாக்கும் அதனால் ஆதாயமும் பெறுவார்கள். நன்றாக உழைத்து தன் பொருளாதாரத் தரத்தை உயர்த்திக் கொள்வார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப தெசை சந்திரன் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறருக்கு கட்டுப்பட்டு நடக்கும் குணமுடையவர்கள். ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- சுவாதி நட்சத்திரம் திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம். அதிர்ஷ்ட மலர்-அல்லி. அனுகூல தெய்வம்-பார்வதி. அதிர்ஷ்டக் கல்-முத்து. அதிர்ஷ்ட நிறம்-வெள்ளை. அதிர்ஷ்ட எண்-4. ரோகிணி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் அழகும், கவர்ச்சியும் உடையவர்கள். உயர்ந்தவர்களின் நட்பு உண்டு. சில சமயங்களில் பொறுமை இல்லாமல் காரியங்களை அவசரமாக முடித்து விட்டு பின்பு அதற்காகக் கவலைப்படுவார்கள். 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் அன்பு, அடக்கமும் உடையவர்களாக இருப்பார்கள். மிகுந்த ஆச்சாரம் உடையவர்கள். சொன்ன சொல் தவறாதவர். நீண்ட தூரம் நடக்கும் ஆற்றல் உள்ளவர்கள். சுடு சொல் பொறுத்துக் கொள்ளாதவர்கள். 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுகவாசியாக காலம் கழிப்பவர்கள். கணிதத் துறையில் தேர்ச்சியும், நல்ல புலமையும் உடையவர்களாக இருப்பார்கள். 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் சாஸ்திர ஞானம் உடையவர்களாக இருப்பதோடு எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிகம் பாடுபடுவார்கள். ஜாதகர் அரண்மனை போன்ற வீட்டில் வசிக்கும் பாக்கியம் உடையவர்கள். மிருகžரிடம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி செவ்வாய் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்பத் தொகை செவ்வாய் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவு ஆற்றல் மிக்கவராகவும், தான் நினைத்ததை முடிக்கும் இயல்புடையவர்களாக இருப்பார்கள். மிருக žரிட நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)-மிருகžரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் இந்த 3 நட்சத்திரங்கள் கூடாது. (ஏக ரச்சு) மற்றவர்களுக்கு எல்லாம் 6 நட்சத்திரங்கள். ஆகாதவைகளாக வரும் போது உங்களுக்கு மட்டும் 3 நட்சத்திரங்கள் ஆகாதவை என்பது சிறப்புதானே! அதிர்ஷ்ட மலர்-செண்பகப்பூ, பாரிஜாதம். அதிர்ஷ்டக் கல்-மாணிக்கம். அனுகூலத் தெய்வம்-சுப்பிரமணியர். அதிர்ஷ்ட நிறம்-சிவப்பு, செம்மை. அதிர்ஷ்ட எண்-5. மிருக žரிடம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் வலிமையான தேகம் உடையவர்கள். இவர்களிடம் சிறிது முரட்டுத் தனமும், படபடப்பாகப் பேசும் சுபாவமும் உண்டு. நல்ல உணவு மற்றும் ஆடம்பரமான ஆடைகளை அணியும் பாக்கியம் உடையவர்கள். இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் எதையும் சிந்தித்து முன் யோசனையுடன் செய்வார்கள். இவர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நடப்பவர்களாக இருப்பார்கள். அளவுக்கு மீறிய தைரியம் உடைய இவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள்.

பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் 21-11-2010 அன்று இரவு 10.54 மணியளவில் மீன ராசிக்கு மாறுகிறார். இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திலிருந்து பல்வேறு இன்னலை தந்திருப்பார். இப்போது குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்துக்கு செல்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சியை தருவார். பெண்களுக்கு தைரியத்துடன் முடிவெடுக்கும் திறன் கூடும். உறவுகளிடையே இருந்த நெருக்கத்தை அதிகமாக்குவதுடன் மனம் மகிழும் நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளச் செய்வார். தொட்ட காரியம் யாவும் வெற்றி பெறுவதால், புதுத் தெம்புடன் திகழ்வீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். நல்ல பணவரவு இருந்துகொண்டே இருக்கும். எடுத்த காரியத்தில் எந்த தடைகள் வந்தாலும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளையும் பெறுவீர்கள்.

பெண்களுக்கு: குடும்பத்தில் இதற்கு முன்பு இருந்த பின்தங்கிய நிலை மாறுவதால் வீட்டில் நிலவிய குழப்பங்கள் மறையும். புதிய இடம், வீடு மனை வாங்கலாம். உறவினர்கள் வகையில் நற்பலன்கள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே இருந்த பிணக்குகள் மறைந்து ஒன்று சேருவர். விருந்து, விழா என சென்று வரலாம். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கலாம். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். புதிதாக மணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச்செலவு இனி இருக்காது.

மாணவர்களுக்கு: உங்கள் பெயருக்கும், புகழுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். குரு உங்களின் திறமையை பிறர் அறியும்படியான சந்தர்ப்பங்களை உருவாக்குவார். அலை பாயும் மனத்தை கட்டுக்குள் வைத்தால், ஆழ்ந்து படிக்க இயலும். தேவைப்படும் நேரங்களில் தைரியமாக நின்று உங்கள் உரிமையை நிலை நாட்டிக்கொள்வீர்கள். நண்பர்கள் இடையே நிலவிய கருத்து வேறுபாடும் மறையும். பெற்றோர்கள் உங்களுக்கு உதவ ஆர்வத்துடன் முன் வருவார்கள். வெளி இடங்களிலும், சிறப்பான நிறுவனங்களிலும் கல்வி பயில வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களின் கனவும் நிறைவேறும்.

வியாபாரிகளுக்கு: கடந்த காலத்தைவிட முன்னேற்றங்கள் பல காணலாம். பொருளாதார வளம் சிறக்கும். எடுத்த காரியத்தை நேர்த்தியாக செய்து முடிக்கும் மனப்பாங்கு எதிலும் வெற்றியைப் பெற கை கொடுக்கும். உங்களை புரிந்துகொள்ளாமல் விலகி இருந்த பங்குதாரர்கள் உங்கள் மேன்மையை அறிந்து மீண்டும் உங்களுடன் இணைந்து கொள்வார்கள். அரசு வகையில் உள்ள அனுகூலமான போக்கால், இதுவரை ஏற்பட்ட பொருள் விரயம், மனக்கஷ்டம் ஆகியவை தானே மறையும். வியாபார உயர்வுக்கு சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பர். தொல்லை கொடுத்த எதிரிகள் அடங்கிக் கிடப்பார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு: உத்தியோக வகையில் அலுவலகத்தில் ஒற்றுமை, புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் சூழ்நிலை இருக்கும். ஒரு சிலருக்கு தாமதம் அடைந்து வந்த ஊதிய உயர்வு, பதவி உயர்வு, இடமாற்றம் வந்து சேரும். அலுவலகத்தில் எதிர்பார்க்கும் கடன்தொகை கைக்கு வந்து சேரும். மேலதிகாரிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமூகநிலை ஏற்படும். வேலையில் இருந்துகொண்டே புதிய உத்தியோகத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் அனுகூல தகவல் வந்து சேர்வதால் புதுத்தெம்புடன் திகழ்வார்கள்.

கலைஞர்களுக்கு: குருவின் அருளால் வளமான வாழ்க்கைக்கு உயர்வான இடத்திலிருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள எடுக்கும் முயற்சிக்குத் தக்க பலனிருக்கும். நண்பர்களிடையே நீண்ட நாளாய் நிலவி வந்த பகை விலகி உறவுகள் மீண்டும் சுமூகமாகும். நினைத்ததை சாதித்துக் கொள்வது சிறந்த வழியாகும். நூதனமான கலைப்பொருள்களால் உங்கள் இல்லத்தை அலங்கரித்து மகிழ்வீர்கள்.

விவசாயிகளுக்கு: விவசாயத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகி நிறைவான வாழ்க்கையும், கையில் சரளமான பணப் புழக்கமும் இருக்கும். அரசு மற்றும் வங்கிகளின் மூலம் எதிர்பார்க்கும் கடன் உதவிகள் தக்க சமயத்தில் கைக்கு வந்து சேரும். ஒரு சிலர் விவசாயத்திற்கான புதிய உபகரணங்கள், வாகனங்கள் வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். கரும்பு, மற்றும் காய்கனி வகைகள் மூலமாக கூடுதல் மகசூல் கிடைக்கப்பெற்று நல்ல லாபத்தை அடைவீர்கள். நவீன முயற்சிகளை பயன்படுத்தி அதிக லாபம் காணும் வழி வகைகளைப் போதிக்கும் பயிற்சிகளில் சேரும் வாய்ப்புக்களும் கிட்டும்.

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு: பொதுச்சேவையில் உள்ளவர்கள் மக்களிடையே பெயரும், புகழும் பெறுவார்கள். வெளிவட்டாரத்தில் நீங்கள் பெறும் புகழ் மூலம் முக்கியமான பொறுப்புகளை ஏற்கும்படியான சந்தர்ப்பங்கள் தானே உருவாகும். உயர் பதவிகளுக்கான போட்டிகளில் எளிதாக வெற்றி பெறுவீர்கள். மறைமுக எதிரிகள், எதிர்ப்புகளால் ஏற்பட்டிருந்த மனக்கிலேசம் யாவும் விலகுவதால், புதுத் தெம்புடன் மீண்டும் களம் இறங்கலாம். சிக்கலான காரியங்களில் உங்கள் சமயோசித புத்தியைப் பயன்படுத்தி நிலைமையை சமாளிக்கும் திறன் கூடும். உடல் ஆரோக்கியம் žரான நிலையில் இருந்து வரும்.

பரிகாரங்கள்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இல்லத்தில் திருமகளை துதித்து வர, பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தடைப்பட்ட திருமணம் கூடி வருவதோடு கடன் தொல்லைகளும் குறையும். வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு வெள்ளை மலர் சார்த்தி வழிபட்டு வர, தொழில் தடை நீங்கி சுபிட்சம் உண்டாகும்.


மிதுனம்
(மிருகžரிடம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள் வரை)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்

மிதுன ராசியின் சிறப்பு: ராசிக் கட்டத்தில் மூன்றாவதாக வரும் மிதுன ராசி ஆண் ராசியாகும். இந்த ராசியில் காணப்படும் நட்சத்திரங்களின் அமைப்பு கையில் கதை என்னும் ஆயுதத்தைத் தாங்கிய ஆணும், அவனுக்குப் பக்கத்தில் வீணை தாங்கிய பெண்ணும் போன்ற தோற்றம் அளிக்கும். மிதுனத்தைத் தன் ராசியாகவும், லக்னமாகவும் கொண்டவர்கள் சுயநலவாதியாக இருப்பார்கள். மற்றவர்கள் தம்மை புகழும்படியாக சாமர்த்தியமாகப் பேசுவார்கள். உயர்ந்த பருத்த மூக்கு உடையவர்கள். முகத்தில் மரு இருக்கும். நல்ல அறிவும், திறமையும் உடைய இவர்கள் சிறிது அவசர புத்திக்கொண்டவர்களாக இருப்பார்கள். மிதுனத்திற்கு உரிய ஆதிக்கக் கிரகம்-புதன், அதிர்ஷ்ட மலர்-வெண்காந்தள். அதிர்ஷ்டக் கல்-பச்சை. அதிர்ஷ்ட நிறம்-பச்சை. அதிர்ஷ்ட திசை-வடக்கு. அதிர்ஷ்ட எண்-5. நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம்-மகாவிஷ்ணு.

மிதுன ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: மிருகžரிடம் 3, 4 பாதங்கள். திருவாதிரை 1, 2, 3, 4 பாதங்கள். புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள். மிருக žரிடம் 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நடக்கும் குணம் இருக்கும். தன் வாழ்க்கைக்குத் தேவையான வசதி வாய்ப்புக்கள் வரும் வரை உழைக்கத் தயங்க மாட்டார்கள். தெய்வ நம்பிக்கை மிக்கவர்கள். மிருகžரிடம் 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தயாளக்குணத்தோடு சிறிது முன்னெச்சரிக்கை சுபாவமும் உண்டு. விரோதிகளைத் தன்னுடைய திறமையால் அடிபணிய வைப்பார். நினைத்ததை எப்படியும் முடிக்க முனைவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய அதிபதி ராகு ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய ஆரம்ப தெசை ராகு ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முரட்டு சுபாவமுள்ளவர்கள். இவர்களின் மூக்கு எடுப்பாக இருக்கும். திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- திருவோணம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம், ரோகிணி. அனுகூல தெய்வம்-பத்திரகாளி. அதிர்ஷ்ட கல்-கோமேதகம். அதிர்ஷ்ட நிறம்-கருமை கலந்த மஞ்சள். அதிர்ஷ்ட எண்-6. திருவாதிரை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கண்கள் அழகாக இருக்கும். உடல் புஷ்டி குறைவாக இருந்தாலும் தன் மனோபலத்தால் எல்லா வேலைகளையும் செய்து முடிக்கும் குணம் உண்டு. இவர்கள் சட்டத்துறையில் நிபுணராக இருப்பார்கள். 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடக்கும் குணமுடையவர்கள். வாத சம்பந்த நோய்கள் இவருக்குத் தொல்லை தரக்கூடும். இவர்கள் கணிதத்தில் வல்லவராகவும், எழுதும் திறனும் கொண்டவர்களாய் இருப்பார்கள். 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எதையும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் சற்று குறைவாக இருந்தாலும், தன் கடும் உழைப்பால் அனைத்தையும் žர் செய்து விடுவார்கள். பண விஷயத்தில் கண்டிப்புடன் இருப்பார்கள் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள். எதற்கெடுத்தாலும வாக்குவாதம் செய்யும் குணம் உண்டு. ஜாதகர் சுய முயற்சியுடன் செயல்பட்டு சாதனைகள் செய்வதில் வல்லவராக இருப்பார்கள். உடன்பிறப்புகளால் ஜாதகருக்கு அனுகூலமுண்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி குரு ஆகும். இவர்களின் ஆரம்ப தெசை குரு ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கல்வியில் தேர்ச்சியும், நல்ல நிர்வாகத் திறமையும் பெற்றிருப்பார்கள். புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- உத்திராடம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் புனர்பூசம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், விசாகம், பூரட்டாதி. அதிர்ஷ்ட மலர்-முல்லை. அனுகூல தெய்வம்-பிரம்மா. அதிர்ஷ்டக் கல்-கனக புஷ்பராகம். அதிர்ஷ்ட நிறம்-வெண் மஞ்சள். அதிர்ஷ்ட எண்-7. புனர்பூசம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் உத்தியோக வகையில் சாதனை புரிவார்கள். நண்பர்களால் சிலசமயம் நஷ்டங்கள் ஏற்படும். ஜாதகர் எந்த சூழலிலும் துடிப்புடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பதுடன் நல்ல பெயரும் பெறுவார்கள். புனர்பூசம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் சாஸ்திரம் சம்பிரதாயம் ஆகியவற்றைக் கடைபிடிப்பதில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். தங்கள் திறமை வெளிப்படும் அளவிற்கு சூழலை உருவாக்கிக் கொள்ளும் திறன் படைத்தவர்கள். புனர்பூசம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி உடையவர்களாகவும், ஆன்மீகத்தில் நாட்டம் உடையவர்களாகவும் இருப்பார்கள். பிறருக்கு தன்னால் இயன்றவரை உதவி செய்யும் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.

பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் 21-11-2010 அன்று இரவு 10.54 மணியளவில் மீன ராசிக்கு மாறுகிறார். இதுவரை உங்கள் ராசியிலிருந்து 9ம் இடத்தில் இருந்துகொண்டு பல சிறப்பான பலன்களை தந்த குரு பகவான் 21.11.2010 முதல் உங்களின் ராசியிலிருந்து 10ம் இடத்துக்கு மாறுகிறார். தேவையில்லாத அலைச்சல்கள், வீண் முயற்சிகள் ஏற்படும். உடல் ஆரோக்கிய வகையில் கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகளால் அவ்வப்போது இடையூறுகளும், கொடுக்கல்-வாங்கல் வகையில் சங்கடங்களும் வரவேண்டிய வாய்ப்புக்கள் வந்து சேருவதில் காலதாமதமும் உண்டாகும். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவினங்கள் ஏற்படும். வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். எந்தக் காரியத்திலும் இயல்பான மனநிலையோடு செயல்பட முடியாத சூழ்நிலையும் காணப்படுகிறது. புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் நிதானம் தேவை. சிறிய காரியங்களில் கூட பெரிய அலைச்சலை ஏற்படுத்தும். ஒரு சிலர் வீட்டைப் பிரிந்து வெளியூரில் வசிக்கும் நிலையும் ஏற்படும். சகல காரியங்களிலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது அவசியம். முக்கியமாக மற்றவர்களுக்கு ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும். முக்கியமான விஷயங்களில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ரீதியில் செயல்படுவதைத் தவிர்ப்பது நல்லது. மனம் நிம்மதி பெற, இறையருளை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.

பெண்களுக்கு: குடும்ப அமைதிக்காக நீங்கள் அதிக முயற்சி எடுத்தாலும் அவ்வப்போது சலசலப்பு தலைகாட்டும். பெண்கள் உழைப்புக்குத் தரும் முக்கியத்துவத்தை ஓய்வுக்கும் தந்தால், ஆரோக்கியம் பொலிவுடன் விளங்கும். புதிய வீடு மாற்றமோ அல்லது கட்டுவதற்கோ, சற்று யோசனைக்குப் பின் செயல்படுதல் அவசியம். பிறரை நம்பி முக்கிய பொறுப்புகளைத் தருவதையும் தவிர்த்தால் சஞ்சலம், வீண் சங்கடம் ஆகியவற்றில் சிக்காமல் நிம்மதியாய் காலம் செல்லும். எப்பொழுதும் பொறுமை என்னும் தாரக மந்திரத்தை கடைபிடித்தால், சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு: கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் மிகவும் கருத்துடன் படிப்பில் ஈடுபடுவது அவசியம் நல்லது. தீய நண்பர்களுடன் சேர்க்கையை விலக்கிக் கொள்வதன் மூலம் அவப்பெயர் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மாணவர்கள் ஏமாற்றங்களைக் கண்டு சலிப்படையாமல், உங்கள் முழு சக்தியையும் உழைப்பில் போட்டால், வெற்றி உங்கள் வாசல் தேடி வரும். பொது இடங்களில் அடக்கத்துடன் நடந்துக் கொள்வது நல்லது. பகுதி நேரப் படிப்பில் உள்ளவர்கள் சில கெடுபிடிகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும். எனவே தேவையான அனுமதியைப் பெற்று செயல்படுவது புத்தசாலித்தனம்.

வியாபாரிகளுக்கு: வியாபார வகையில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும். கொடுக்கல்-வாங்கல் வகையில் திருப்திகரமான சூழ்நிலை நிலவ பணப்பரிமாற்றம் சம்பந்தமான ஆவணங்களையும், ரžதுகளையும் பத்திரமாக வைக்கவும். வெளியூர்களுக்கு சரக்குகளை அனுப்பும் போது கவனத்துடன் செயல்பட்டால் இழப்புகளைத் தவிர்க்கலாம். கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகளுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பில்லாதவாறு குழுவாக ஆலோசனை செய்து செயல்படுதல் நல்லது. பேச்சு வார்த்தைகளில் கடுமை கலவாமல் இருந்தால், ஒப்பந்தங்கள் கை நழுவாமல் இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: வேலை பளு அதிகரிக்கும். சகஊழியர்களுடன் அவ்வப்போது சிறுசிறு மனக்கசப்புகள் ஏற்படும். அலுவலக ரகசியங்களை ரகசியமாகவே வைப்பது அவசியம். தவறுகள் நேராதவாறு கவனமாய் செயலாற்றுங்கள். உங்களுடைய உழைப்புக்கேற்ற ஊதியத்தை அடுத்தவர் தட்டிக்கொள்ள இடம் கொடுக்காமல் இருந்தால் நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொண்டுவிடலாம். உத்தியோக சம்பந்தமாக வெளியூர்-வெளிநாடு செல்லும் முயற்சிகளில் அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருந்தால் பணக்கஷ்டம், மனக்கஷ்டம் இரண்டும் இல்லாமலிருக்கும்.

கலைஞர்களுக்கு: கலை சம்பந்தமான தொழில்களில் இருப்பர்களுக்கு எதிலும் சற்று தேக்க நிலை இருக்கும். புதிய வாய்ப்புகள் குறைவாகவே காணப்படும். உங்களுடைய திறமையை அதிகப்படுத்திக் கொள்வதன்மூலம் வருமானம் குறையாமல் பார்த்துக்கொள்ளலாம். மற்றவர்கள் குறை கூறினாலும் அதனை பொருட்படுத்தாமல் உங்களுடைய கலைத்திறமை மேம்படுத்தக் கொண்டால் தகுந்த சமயத்தில் அது உங்கள் உயர்வுக்கு கை கொடுக்கும். அவ்வப்போது ஏற்படும் மறைமுக எதிர்ப்புகளை பக்குவமாகக் கையாண்டால் பிரச்சினைகள் மேலும் பெரிதாகாமலிருக்கும்.

விவசாயிகளுக்கு: விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தரமான விதைகள், பூச்சி மருந்து, உரம் முதலியவற்றைப் பயன்படுத்தி வந்தால் வருகின்ற லாபம் குறையாமல் இருக்கும். அரசு சம்பந்தமான உதவிகளைத் தடையின்றி பெறுவதற்கு தகுந்தவர்களை அணுகுவது புத்திசாலித்தனம். கடன் தொகை செலுத்தும் பொழுது அதை உடனடியாக பதிவு செய்வதில் கவனமாக இருந்தால், வீண் நெருக்கடிகள், மன உளைச்சல் ஆகியவை தானே குறையும். மேலும் பருவ நிலை மற்றும் žதோஷ்ண நிலைக்கு ஏற்ற பயிர்களைத் தேர்வு செய்தால் உத்தமம்.

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு: பொது பிரச்சினைகளைத் தீர்க்க காட்டும் ஆர்வத்தை, இல்லப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் காட்டி வந்தால், உறவுகளின் நிறம் மாறாமல் இருக்கும். சூழ்நிலையை ஆராய்ந்தபின் செயலில் இறங்கினால், முன் வைத்த காலை பின் வைக்க வேண்டியிராது. உடல் நலனை நல்ல விதமாக பராமரித்து வந்தால், மருந்துகளுக்கு செலவு செய்வது குறையும். வீண் வம்பு விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருந்தால், வழக்கமான பணிகள் தொய்வில்லாமல் நடந்தேறும் உணவு பழக்க வழக்கங்களில் விஷப்பரீட்சைகள் வேண்டாம்.

பரிகாரங்கள்: செவ்வாய், மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இல்லத்தில் திருமகளை துதித்து வர பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தடைப்பட்ட திருமணம் கூடி வருவதோடு கடன் தொல்லைகளும் குறையும். வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு வெள்ளை மலர் சார்த்தி வழிபட்டு வர, தொழில் தடை நீங்கி சுபிட்சம் உண்டாகும்.


கடகம்
(புனர்பூசம் 4வது பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்

கடக ராசியின் சிறப்பு: ராசிக் கட்டத்தில் 4-வதாக வரும் கடகம் பெண் ராசியாகும். ஜோதிட உலகின் ராணி என்று அழைக்கப்படும் சந்திரனுக்கு உரிய வீடு கடகம். இது சத்துவ குணம் பொருந்திய ஜல ராசியாகும். கடகத்தை தன் ராசியாகவும், லக்னமாகவும் கொண்டவர்கள் கவர்ச்சியான உருவமும், இளகிய மனமும் படைத்தவர்கள். நல்ல கற்பனை சக்தியும், உடையவர்கள். மேலும் சாதாரண விஷயங்களுக்குக்கூட எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். மற்றவர்களிடம் அன்பும், பாசத்துடனும் இருக்கும் இவர்கள் மற்றவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். நீர்நிலை சார்ந்த தொழில்களால் இவர்களுக்கு அதிக லாபம் உண்டு. கடகத்திற்கு உரிய ஆதிக்கக் கிரகம்-சந்திரன். அதிர்ஷ்ட மலர்-வெள்ளை அல்லி, அதிர்ஷ்டக் கல்-முத்து. அதிர்ஷ்ட நிறம்-வெண்ணிறம். அதிர்ஷ்ட திசை-வடமேற்கு. அதிர்ஷ்ட எண்-2. நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம்-பார்வதி.

கடக ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: புனர்பூசம் 4ம் பாதம், பூசம் 1, 2, 3, 4 பாதங்கள் மற்றும் ஆயில்யம் 1, 2, 3, 4 பாதங்கள். புனர்பூசம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் நல்ல குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். பிறரின் குறிப்பறிந்து நடப்பர். தெளிவான சிந்தனையும், சிறப்பான செயலாற்றலும் உடையவர். சிறந்த பேச்சாற்றல் இவர்களிடம் உண்டு. பூசம் நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி தெசையே ஆரம்ப தெசையாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கலை ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். பெற்றோரை அதிகம் நேசிக்கும் குணம் உண்டு. கடவுள் பக்தி மிகுந்தவர்கள். பசி தாங்க மாட்டார்கள். பூசம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தயாள குணம் உண்டு. மதி நுட்பம் கொண்ட இவர்கள் பெரியோரிடம் மரியாதை உடையவர்கள். இவர்களுக்கு அமைதியான வாழ்க்கைத் துணை அமையும். அடிக்கடி வயிற்று வலியால் வருந்துவார்கள். இவர்களிடம் செல்வம் வேகமாக வந்து சேரும். 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் எதையும் நிதானமாக செய்யும் இயல்புடைவர்கள். மற்றவர்களுடன் சில சமயம் சண்டையிடும் குணம் இருந்தாலும், இவர்களிடம் இரக்க குணம் நிறைந்திருக்கும். பிறருக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவதில் வல்லவராக விளங்குவார்கள். 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல அறிவுக் கூர்மை உண்டு. எப்பொழுதும் நல்லதையே யோசிக்கும் இவர்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறும் வரை ஓய மாட்டார்கள். எவ்வளவு பெரிய விஷயமாயினும் அதற்கு சஞ்சலப்பட மாட்டார்கள். 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் விஷயங்களை விரைவாகவும் வேகமாகவும் புரிந்துக்கொள்ளும் தன்மை உடைய இவர்களுக்கு அடிக்கடி சளித் தொந்தரவுகள் உண்டாகும். திட்டமிட்டு செயலாற்றும் இவர்கள் உலகியல் விஷயங்களில் அதிக நாட்டம் உடையவராக இருப்பார்கள். எந்த விஷயத்திலும், ஆழ்ந்து சிந்தித்த பிறகே இறங்குவார்கள். மேலும் எடுத்துக்கொண்ட வேலை முடியும் வரை எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- பூராடம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் பூசம், பரணி, பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி. அதிர்ஷ்ட மலர்-கருங்குவளை. அனுகூல தெய்வம்-எமன். அதிர்ஷ்டக் கல்-நீலம். அதிர்ஷ்ட நிறம்-கறுப்பு. அதிர்ஷ்ட எண்-8 ஆயில்யம்; இந்த நட்சத்திரத்தின் அதிபதி புதன். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப தெசை புதன் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியம் மிக்கவர்கள். பேச்சுவன்மையும், எதிரிகளையும் வெல்லும் திறன் உடைய இவர்கள் பணத்தை செலவழிக்கத் தயங்கமாட்டார்கள். ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- மூலம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் அசுவினி, ஆயில்யம், மகம், மூலம், கேட்டை, ரேவதி. அதிர்ஷ்ட மலர்-வெண்காந்தள். அனுகூல தெய்வம்-மகாவிஷ்ணு, பெருமாள். அதிர்ஷ்டக் கல்-மரகதம். அதிர்ஷ்ட நிறம்-பச்சை. அதிர்ஷ்ட எண்-9. ஆயில்யம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் யாவரையும் தன்வசமாக்கிக் கொள்ளும் அற்புத சக்தியுடையவர்கள். அன்பும், தயவும் தர்ம சிந்தனையுமுடையவர். தளரா ஊக்கமுடையவர். தம் காரியத்திலேயே கண்ணும் கருத்துமாய், உறுதியான நெறியுடன் ஈடுபடுவார்கள். ஆயில்யம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் தோல்வியைக் கண்டு மனத்தளர்ச்சியடைந்தாலும், மீண்டும் புதிய உத்வேகத்துடன் வேலை செய்வார்கள். இளகிய உள்ளம் படைத்தவராகையால், பிறர் இவரை எளிதில் ஏமாற்றி விட வாய்ப்புண்டு. ஆயில்யம் 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பரந்த மனம் உண்டு. உறவினர்களிடத்திலும் நண்பர்களிடத்திலும் அதிகப் பற்றுதல் உடையவர்கள். பிறருடைய கஷ்டத்தையும் கவலையையும் தம்முடையதாகப் பாவித்திடுவார்கள். ஆயில்யம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் குறுகிய காலத்தில் அதிக லாபத்தை சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் உடையவர்கள். எதிர்த்தவர்களைத் தகர்த்திடும் சாமர்த்தியமுடையவர்கள்.

பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் 21-11-2010 அன்று இரவு 10.54 மணியளவில் மீன ராசிக்கு மாறுகிறார். இதுவரை உங்கள் ராசியிலிருந்து 8ம் இடத்திலிருந்து கொண்டு பல அலைச்சல்களை தந்த குரு பகவான் 21.11.2010 முதல் உங்களின் ராசியிலிருந்து 9ம் இடத்துக்கு மாறுகிறார். தேவையில்லாமல் தொந்தரவு கொடுத்த எதிரிகள் அடங்கிக்கிடப்பார்கள். கொடுக்கல்-வாங்கல் வகையில் இருந்து வந்த சிக்கல்கள் தானே விலகும். வீட்டை விட்டுப்பிரிந்து வெளியூரில் இருந்தவர்களுக்கு குடும்பத்தோடு மீண்டும் இணைந்து கொள்ளும் வாய்ப்புக்கள் வந்து சேரும். எவ்வளவு முயற்சிகள் செய்தும் இது நாள் வரை வேலை கிடைக்கவில்லையே என்று வருந்தியவர்கள் நல்ல வேலையில் அமர்வார்கள். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவு என்ற நிலை மாறி பழையபடி அமைதி நிலவும். தடைப்பட்டுக் கொண்டே இருந்த சுப காரியங்கள் நல்ல விதமாக நடைபெறுவதோடு அதற்கு உரிய பணமும் கையில் வந்து சேர குரு அருள் புரிவார். சாதனையாளர்களுக்கு திறமைக்கு உரிய பெருமை கிடைக்கவில்லையே என்ற நிலை இனி இராது. நல்ல விதமாகத் தொழில் தொடங்க வேண்டும். அதில் முன்னேற வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு தகுந்த நேரத்தில் உதவியும், வழி காட்டுதலும் வந்து சேரும்.

பெண்களுக்கு: குடும்பத்தில் நிலவிய சங்கடங்கள் விலகி, குதூகலம் குடியேறும். திருமண வாழ்வை எதிர்பார்ப்பவர்களுக்கு, குருவின் அருளால் மணப்பேறு கிட்டும். பழைய நட்பை சந்தித்து மகிழும் வாய்ப்பு உண்டாகும். அனைவரிடமும் அனுசரித்துச் சென்று, உங்களின் காரியங்களை அனுகூலமாக்கிக் கொள்வீர்கள். நூதனப் பொருட்களின் சேர்க்கையால் இல்லம் பொலிவாய் திகழும். பொது வாழ்வில் உங்களின் ஈடுபாடு சிறப்பாய் இருக்கும். ஆரோக்கியத்தில் இதுவரை இருந்த நலிவு நீங்கி, புதுத்தெம்புடன் வளைய வருவீர்கள். தாய்வழி உறவுகள் உங்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவார்கள்.

மாணவர்களுக்கு: குரு தரும் அருளால் மறதியால் ஏற்பட்டத் தொல்லைகள் விலகி படிப்பில் ஆர்வம் கூடும். ஆசிரியர்கள் அளிக்கும் ஆதரவு உங்கள் கற்பனை எல்லைகளை விரிவடையச் செய்யும். கல்வித் தொடர்பான இதர துறைகளிலும் உங்கள் திறமையும், சாமர்த்தியமும் பளிச்சிடும். கல்விக்கடன் பெற எடுக்கும் முயற்சி பலிதமாகும் வாய்ப்பிருந்தால், விரும்பிய பாடத்துறையில் மகிழ்வுடன் சேர முடியும். தொழில்கல்வி படிப்பவர்கள் சிறப்பான நிலையை அடைவார்கள். சுற்றுலா, விழா ஆகியவற்றில் கலந்து கொண்டு சுவையான உணவு வகைகளை உண்டு மகிழும் வாய்ப்பு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: சாதகமான குரு உங்கள் கடமைக்குரிய பலனை வெற்றிக்கனியாக்கி கையில் தருவார். மேலும் உங்கள் கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் வாய்ப்புகளைத் தருவதால், அலுவலக விழா, போட்டி ஆகியவற்றில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். கணினித் துறையில் இருப்பவர்கள் எதிர்பார்த்த சலுகையுடன் பாராட்டும் வந்து சேரும். உங்கள் மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை விலகி, தன்னம்பிக்கை அதிகரிக்கும். எவ்வளவு பாராட்டும் உயர்வு இல்லையே என்று வருந்தியவர் மனம் குளிரும் வண்ணம் முடக்கி வைக்கப்பட்டிருந்த பதவி உயர்வையும் அதற்கான பொருளாதார உயர்வையும் சேர்த்து வழங்குவார் குருபகவான்.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு: நீங்கள் இதுவரை சந்தித்த மன உளைச்சல், நெருக்கடியான சூழ்நிலை ஆகியவை மாறி இணக்கமான சூழல் உருவாக குரு உங்கள் பக்கபலமாக இருப்பார். பிறருக்கு சிக்கலாக தோன்றும் பணியை சடுதியில் முடிக்கும் திறன் கூடும். உங்களின் திறமையை குறைத்து எடை போட்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக உங்கள் செயல்கள் இருக்கும். பிரயாணங்களின் மூலம் புதிய நட்பு கிட்டும். பைசலாகாமல் இருந்த வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடிந்துவிடும். வெளி வட்டாரப் பழக்க வழக்கங்கள் மூலம் சில ஆதாயங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற பெருமை கிடைக்கும்படி செய்வார் குரு.

வியாபாரிகளுக்கு: அச்சகம், வண்டி வாகனங்களை வாங்கி விற்பவர்கள், எழுது பொருட்கள் விற்பவர்கள் ஆகியவர்கள் சந்தித்த நெருக்கடியான சூழல் மாறி மீண்டும் வியாபாரம் பழைய நிலைக்கு வர குரு பகவான் கை கொடுப்பார். சிறு தொழில் புரிபவர்களும், வியாபாரிகளும், வியாபார நிலவரத்திற்கேற்றவாறு செயல்பாடுகளையும், திட்டங்களையும் மாற்றி அமைத்தால், கணிசமான லாபம் கிட்டும். வாடிக்கையாளர்களுக்கு குறித்த காலத்தில் பொருட்களைக் கொடுத்து அவர்களின் நன்மதிப்பை சம்பாதித்துக் கொள்வீர்கள். பங்குத் தொகையில் முதலீடு செய்த தொகை மூலம் வரும் லாபம் கணிசமாக இருக்கும். புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்தி சாதனை படைப்பீர்கள். உங்கள் கடின உழைப்பால் சவால்களை ஜெயிக்கும் வாய்ப்பை குரு நல்குவார்.

கலைஞர்களுக்கு: நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிக்கு ஊக்கமும், ஆக்கமும் தேடி வரும். போட்டியாளர்களை உங்கள் திறமையால் சுருட்டி விட முடியும். கையிருப்புத் தொகையினை அசையாச் சொத்தாய் மாற்றும் வாய்ப்பு தானே கூடி வரும். சரளமான பண வரவால், பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும். புதுப்பொறுப்புகள் மூலம் உங்கள் அந்தஸ்தும், கௌரவமும் உயரும். சக கலைஞர்களின் ஆலோசனையுடனும், ஒத்துழைப்புடனும் நிகழ்ச்சிகளில் புதிய மாற்றங்களை புகுத்தி வரவேற்பையும், அதற்கேற்ற நல்ல பெயரையும் தக்க வைத்துக்கொள்வீர்கள். நட்புறவுகள் வலுக்கும் விதத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

விவசாயிகளுக்கு: கடன் வாங்கி கலங்கிய நிலை மாறும். விவசாயத்துறையில் லாபம் தரும் உத்திகளைப் பயிலும் வாய்ப்பு கிடைக்கும். நில புலன்களை பராமரிக்கும் வகையில் இருந்த சுணக்கங்கள் யாவும் நீங்கப்பெறுவதால், சுறுசுறுப்புடன் வேலைகளில் ஈடுபடுவீர்கள். தொழில் உபகரணங்கள் வேண்டி அலைந்த நிலை இனி இருக்காது. நெல், கரும்பு, பழ வகைகள் ஆகியவற்றின் மூலம் கணிசமான லாபம் கிட்டும். வங்கிகள் மூலம் கடன் பெற எடுத்த முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும். ஒரு சிலர் விவசாயத்திற்கு என புதிய வாகனங்களும், அதிக மகசூல் தரும் விதை வகைகளையும் வாங்கும் வாய்ப்பையும் பெறுவார்கள்.

பரிகாரங்கள்: வெள்ளிக்கிழமைகளில் திருமகளை வழிபட்டு, விளக்கேற்றிவர, எல்லா முயற்சிகளிலும் தாமதமின்றி நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ஞாயிற்றுக்கிழமை பைரவரை வழிபட்டு வர, தொழில் வளம் சிறக்கும்.

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்

சிம்ம ராசியின் சிறப்பு: ராசிக் கட்டத்தில் 5வதாக வரும் இந்த ஆண்ராசியின் உருவம் சிம்மத்தைப் போன்று இருக்கும். சிம்மத்தை தன் ராசியாகவும் லக்னமாகவும் கொண்டவர்கள் பெருந்தன்மை உடையவர்களாகவும், வட்டமான முகத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எளிதில் எவருக்கும் அடிபணிய மாட்டார்கள். சிம்மத்திற்கு உரிய ஆதிக்கக் கிரகம்-சூரியன், அதிர்ஷ்ட மலர்-செந்தாமரை, அதிர்ஷ்டக் கல்-மாணிக்கம், அதிர்ஷ்ட நிறம்-சிவப்பு, அதிர்ஷ்ட திசை-கிழக்கு, அதிர்ஷ்ட எண்-1. நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம்-சிவபெருமான்.

சிம்ம ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: மகம் 1,2 3,4 பூரம் 1,2,3,4 பாதங்கள், உத்திரம் 1-ம்பாதம். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர அதிபதி கேது ஆகும். இவர்களின் ஆரம்ப தெசை கேது ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுநல நோக்கில் செயல்படுவார்கள். அதிக அளவில் பணம் செலவழிக்கும் சுபாவமுள்ளவர்கள். மகம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை (ஆகாதது)- ரேவதி நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி. அதிர்ஷ்ட மலர்-செவ்வல்லி, அனுகூல தெய்வம்-இந்திரன், அதிர்ஷ்டக் கல்-வைடூரியம், அதிர்ஷ்ட நிறம்-கரும் பச்சை. அதிர்ஷ்ட எண்-10. மகம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சுற்றுப்பயணம் செய்ய ஆர்வம் உள்ளவர்கள். உறக்கம் அதிகம் கொள்ளாதவர்கள். தேவைக்கு மேல் அதிகமாக பணம் செலவு செய்யும் இயல்பு உடையவர்கள். எளிதில் புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் நற்பண்புகள் நிறைந்தவர்களாய் காணப்படுவார்கள். இவர்களுடைய தலை மற்றும் முகம் பகுதியில் சில தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும். வியாபாரத்துறையில் சிறந்து விளங்குவார்கள். மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பலருக்கு உதவி செய்யும் குணம் உண்டு. நியாயமாக நடந்து கொள்வார்கள். ஆனால் வம்பு சண்டை என்று வந்து விட்டால் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பி விடுவார்கள். இவர்களுக்கு கழுத்து வலி இருக்கும். நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் எல்லோரிடமும் பணிவாக நடந்து கொள்வார்கள். இவர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிரங்கமாக வெளியிடத் தயங்குவார்கள். பெண்கள் மற்றும் பெரியோர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி சுக்ரன் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப தெசை சுக்ரன் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் இனிமையாகப் பேசுவார்கள். சிவந்த உடலை உடையவர்களாக இருப்பார்கள். பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- பூராடம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 5. அவைகள் பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திராட்டாதி. அதிர்ஷ்ட மலர்-செந்தாமரை, அனுகூல தெய்வம்-சிவபெருமான், அதிர்ஷ்டக் கல்-வைரம், அதிர்ஷ்ட நிறம்-வெண் நீலம். அதிர்ஷ்ட எண்கள்-2, 11. பூரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பு உடையவர்களாக இருப்பார்கள். கணிதம், விஞ்ஞானம் ஆகியவற்றில் நல்ல மதி நுட்பம் இருக்கும். செல்வாக்கு உடையவராய் இருப்பார்கள். அடிக்கடி சளி, இருமல் தொந்தரவுகளால் பாதிக்கப்படுவார்கள். 2ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு, செல்வ சேர்க்கை, கலைகளில் தேர்ச்சி, சொத்து சுகம் ஆகிய அனைத்தும் ஏற்படும். பெண் குழந்தைகளால் அதிக நன்மை ஏற்படும் யோகம் உண்டு. இவர்கள் மறதி மற்றும் குழப்பத்தால் சில தொல்லைகளை சந்திப்பார்கள். 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இல்லற வாழ்வில் சுப பலன்கள் ஏற்படும். தாய்வழி உறவுகளின் ஆதரவும் அனுசரனையும் இருக்கும். பணவரவு இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பும், லட்சுமி கடாட்சமும் ஏற்படும். வாகன வசதிகள், ஆடம்பர வாழ்க்கை, நல்ல சாப்பாடு ஆகியவை குறைவின்றி கிட்டும். பண விஷயங்களில் கவனமாக இருக்க பிறரின் தூண்டுதல் தேவைப்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி சூரியன். அவர்களின் ஆரம்ப தெசை சூரியன் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வசதியுடன் வாழும் யோகம் உண்டாகும். இவர்களுக்கு சங்கீதத்தில் ஈடுபாடு இருக்கும். உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- உத்திரட்டாதி நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி. அதிர்ஷ்ட மலர்-செந்தாமரை, அனுகூல தெய்வம்-லக்ஷ்மி, அதிர்ஷ்டக் கல்-வைரம், அதிர்ஷ்ட நிறம்-சிவப்பு, அதிர்ஷ்ட எண்-3, 12. உத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தொழில் மற்றும் ஜ“வன வகையில் நற்பலன்கள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சொந்த ஊர் விட்டு வெளி ஊரில் தமது வாழ்கையை அமைத்துக் கொள்வார்கள்.

பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் 21.11.2010 அன்று இரவு 10.54 மணி அளவில் மீன ராசிக்கு மாறுகிறார். இதுவரை உங்கள் ராசியிலிருந்து 7-ல் இருந்து அருமையான பலனைத்தந்து கொண்டிருந்த குரு, இந்தப் பெயர்ச்சி மூலம் 8-ம் வீட்டுக்கு மாறுவதால், தொழிலில் சில மாற்றங்களையும், ஏமாற்றங்களையும் சந்திக்கும் நிலை உருவாகும். வீட்டிலும், வெளி வட்டாரத்திலும் வார்த்தை அம்புகளை வீசாமல் இருந்தால் நேசமும், பாசமும் மாறாமலிருக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் தேவை. சொத்துக்களை வாங்கும் போதும் விற்கும் போதும், வில்லங்கம் இல்லாமல் பார்த்துக் கொண்டால் உங்கள் ஆசைக் கனவுகள் விரைவில் நனவாகும். முரண்பாடான கருத்துக்களுக்கு மனதில் இடம் கொடாமலிருந்தால், மன உளைச்சலைத் தவிர்த்துவிடலாம். வெளியூர் பயணங்களில் புதியவர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. குடும்ப ஒற்றுமை ஆட்டம் காணாமல் நிலையாய் இருப்பதற்கானத் தீர்வை உடன் கண்டு கொண்டால், பிரச்சினைகளைத் திறம்பட சமாளிக்க முடியும். உங்களுக்கு ஏற்படும் தடைகளை சவாலாக எடுத்துக் கொண்டால், எதிலும் வெற்றி பெறுவது உறுதி. புதிய திட்டங்களில் பரபரப்பைத் தவிர்ப்பது அவசியம்.

பெண்களுக்கு: வீண் செலவுகளைச் சுருக்குவதில் தனி கவனம் செலுத்தி வந்தால், வீட்டு செலவுகளைக் குறைவின்றி செய்ய இயலும். அண்டை வீட்டு மனிதர்களால் சில பிரச்சினைகள் உருவாகலாம். சிறிய விஷயங்களுக்கு உணர்ச்சி வசப்படுவதைக் குறைத்துக் கொண்டால், உற்சாகமாக இல்லப் பணிகளை செய்ய இயலும். கர்ப்பிணிப் பெண்கள் ஜ“ரணக் கோளாறுக்கு இடம் தராதவாறு மிதமான உணவு வகைகளை உண்பது நல்லது. செல்லப் பிராணிகளால் சில தொல்லைகள் உண்டாகும். எந்த சூழலிலும் வாக்குவாதத்தைத் தவிர்த்து பொறுமையைக் கடைபிடித்தால், வரும் நன்மைகள் அதிகமாகும்.

மாணவர்களுக்கு: இரவு நேரம் அதிக தூரம் வாகனங்களில் செல்வதைக் குறைத்துக் கொள்வது நல்லது. பதற்றம், மறதி-இரண்டையும் தவிர்த்து விட்டால், படிப்பில் உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி வெற்றி பெற முடியும். நட்பு, வெளி வட்டாரம் ஆகியவற்றில் ஓர் எல்லைக்கோடு இருப்பது அவசியம். படபடவென்று பேசுவதைக் குறைத்தால், பிறரின் கருத்துக்களை ஊன்றி கவனிக்க இயலும். கேளிக்கைகளில் மனதை அலைபாயவிடாமல், கட்டுப்பாட்டுடன் இருந்தால், அதிக நன்மைகள் உங்கள் பக்கம் இருக்கும். உடனிருக்கும் நண்பர்களால், சிறு தொல்லைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

வியாபாரிகளுக்கு: அரசு தொடர்பான காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டியிருக்கும். சில நேரங்களில் பங்குதாரர்களிடையே அதிருப்தியும், முணுமுணுப்பும் தோன்றி மறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் குளறுபடிகள் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சரக்குகளைப் பெறுவதும், விநியோகம் செய்வதும் எளிதாகும். வாடிக்கையாளர்களின் மனதையும், தேவையும் அறிந்த பணியாளர்களை வேறு இடங்களுக்கு மாற்றாமலிருந்தால் வருகின்ற லாபம் žராக இருக்கும். சட்ட பிரச்சினைகளில் உங்களின் தனிப்பட்ட கவனம் இருந்தால் நன்மைகளை உரிய காலத்தில் பெற இயலும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: சிறிய உரசல்களைப் பொருட்படுத்தாமல் பெருந்தன்மையாய் நடந்துக் கொண்டால், அனைவரும் உங்கள் பக்கமே! தளவாடங்கள் மற்றும் இரும்புப் பொருட்களைக் கையாளுகையில் அதிக கவனம் தேவை. உங்கள் கௌரவத்தைக் கெடுக்க நினைப்பவர்களை அருகில் அண்ட விடாதீர்கள். பொது இடங்களில் அதிகாரிகளைப் பற்றி விமர்சனங்களில் ஈடுபட வேண்டாம். அடிக்கடி பிரயாணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பிரயாணம் பணிகளில் குறுக்கிடாமல் தகுந்த ஓய்வெடுத்த பின் வேலைகளைத் தொடர்வது நல்லது.

கலைஞர்களுக்கு: தரமறிந்து நண்பர்களைத் தேர்வு செய்யுங்கள். தொல்லை ஏதும் தோன்றாது. ஒவ்வாத பழக்க வழக்கங்களுக்கு தலையாட்டாமலிருந்தால், வாழ்க்கை வண்டி žராக ஓடும். வீடு மராமத்து, பராமரிப்பு ஆகியவற்றில் நம்பகமானவர்களின் உதவியை நாடுவது அவசியம். உங்கள் லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ள மறைமுக வழிகளுக்கு மாறி விடாதீர்கள். லாபத்தைவிட நஷ்டம்தான் கூடும். வேலை மும்முரத்தில் வேளைக்கு உணவு உண்ணும் பழக்கத்தை கடைபிடிப்பதில் கவனமாய் இருந்தால், ஆரோக்கியம் குறையாமலிருக்கும்.

விவசாயிகளுக்கு: அரசு அளிக்கும் சலுகைகளைக் குறித்த காலத்தில் பெற்றுக் கொள்வது என்பது சற்று சிரமத்திற்கு இடையே நிறைவேறும். சிக்கனம் செய்ய வேண்டிய நேரத்தில் திடீர் செலவுக்காக அதிக பணம் புரட்ட வேண்டியிருக்கும். தொழில் ரீதியான விஷயங்களில் அக்கறையோடு நடந்துக் கொண்டால் மட்டுமே லாபம் என்பது கையில் தங்கும். நிலத்தின் தன்மைக்கு ஏற்றப் பயிர்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம். கடனாகப் பெறும் உபகரணங்களைப் பத்திரமாக வைப்பது மூலம் வீண்செலவுகளைத் தவிர்க்க முடியும். மேலும் போட்ட பணத்திற்கு ஏற்ற மகசூலையும் பெற முடியும்.

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு: பிறர்க்கு உதவப் போய், அங்கும் இங்கும் அலைய நேரிடும். தேவைக்கேற்ற பணத்தைவிட அதிகம் செலவு செய்வதைக் குறைத்துக் கொண்டால், பொருளாதாரம் சிக்கலாகாமல் இருக்கும். வீண் வம்பு விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருங்கள். வழக்கமான பணிகள் தொய்வில்லாமல் நடந்தேறும். நேரடியாக அரசாங்கத் தொடர்பு உள்ளவர்களை பகைத்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வது புத்திசாலித்தனம். வெளி வட்டாரத்தில் கவனமாக இருப்பதன் மூலம் எதிர்பாராத சங்கடங்களில் சிக்காமலிருப்பதோடு மன அமைதியும் சிதறாமல் பார்த்துக் கொள்ளலாம்.

பரிகாரங்கள்: அதிகமான கடன் பிரச்சினையில் தவிப்பவர்கள், செவ்வாய்க் கிழமை தோறும் முருகன் சன்னதியில் தீப விளக்கேற்றி, முருகனுக்குரிய மந்திரங்களைக் கூறி வர கடன் தொல்லைகள் படிப்படியாய் குறையும். பிள்ளைகளின் திருமணம் நல்லபடியாக நடந்தேற வியாழன் தோறும் குருவிற்கு கொண்டைக் கடலை மாலை அணிவித்து வழிபட்டு வரவும்.


கன்னி
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2, பாதம் வரை)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்

கன்னி ராசியின் சிறப்பு: ராசிக் கட்டத்தில் 6வதாக வரும் இந்த பெண் ராசியின் உருவம் கன்னியின் உருவத்தைப் போன்று இருக்கும். கன்னியை தன் ராசியாகவும் லக்னமாகவும் கொண்டவர்கள் எந்த ஒரு விவகாரத்தையும், தனித்து நின்று சமாளிக்கும் தன்மை படைத்தவர்கள். திட்டம் தீட்டுவதிலும், அதை செயல்படுத்துவதிலும் வல்லவர்களாகத் திகழ்வார்கள். கன்னிக்கு உரிய ஆதிக்கக் கிரகம்-புதன். அதிர்ஷ்ட மலர்-வெண்காந்தள், அதிர்ஷ்டக் கல்-பச்சை. அதிர்ஷ்ட நிறம்-பச்சை. அதிர்ஷ்ட திசை-வடக்கு. அதிர்ஷ்ட எண்-5. நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம்-மகாவிஷ்ணு.

கன்னி ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: உத்திரம் 2, 3, 4 பாதங்கள். அஸ்தம் 1, 2, 3, 4 பாதங்கள். சித்திரை 1, 2 பாதங்கள். உத்திரம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் உயர்வான சிந்தனைகள் கொண்டவர்கள். எதிலும் வேகத்தை விட விவேகமாக செயல்பட முயற்சி செய்வார்கள். தைரியமாக பெரிய திட்டங்களில்கூட இறங்கி விடும் தன்மை கொண்டவர்கள். உத்திரம் 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பிடிவாத குணம் உண்டு. வாழ்க்கையில் இன்பங்களைத் தாராளமாக அனுபவிக்கத் துடிக்கும் இவர்கள் அறிவின் துணை கொண்டு எளிதாக வெற்றிகளைத் தேடிக் கொள்வார்கள். உத்திரம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை அதிகமாக சந்திப்பார்கள். நல்லதையும், கெட்டதையும், žர்தூக்கிப் பார்த்து, நல்லதை மட்டுமே எடுத்துக்கொண்டு செயல்படும் குணம் இவர்களிடம் உண்டு. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி சந்திரன். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப தெசை சந்திரன் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறருக்குக் கட்டுப்பட்டு நடக்கும் குணம் உடையவர்கள். அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)-சதயம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம். அதிர்ஷ்ட மலர்-அல்லி. அனுகூல தெய்வம்-பார்வதி. அதிர்ஷ்டக் கல்-முத்து. அதிர்ஷ்ட நிறம்-வெள்ளை. அதிர்ஷ்ட எண்-4. அஸ்தம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் அளவான உயரம் கொண்டவராக இருப்பார்கள். எடுத்துக்கொண்ட காரியத்திலுள்ள சிரமத்தைப் பொருட்படுத்தாது வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். கழுத்துப் பகுதி நீண்டிருக்கும். அஸ்தம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் அசாத்திய பொறுமைசாலிகள். எடுத்துக்கொண்ட வேலையை வேகமாக முடிப்பதைவிட நிறைவாக, நிதானமாகச் செய்வதில் அக்கறைக் காட்டுவார்கள். தோல்விகளைக்கண்டுத் துவண்டு விடாதவர்கள். அஸ்தம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் சில நேரங்களில் தங்களின் கருத்துக்களையே மேலானதாக நினைப்பவராகவும் பிடிவாத குணம் கொண்டவராகவும் காணப்படுவார்கள். எந்த விஷயத்தையும் வெகு žக்கிரமாகக் கிரகிக்கும் தன்மையுடையவர். அஸ்தம் 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தனக்கெனப் பாடுபடும் குணம் இல்லாவிட்டாலும் பிறருக்காக ஈடுபடும் விவகாரங்களில் மிகவும் உற்சாகமாக செயல்படும் குணம் கொண்டவர்கள். உழைப்பு ஒன்று மட்டுமே இவரை மேல் நிலைக்குக் கொண்டுச் செல்லும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி செவ்வாய் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப தெசை செவ்வாய் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவகாரங்களில் மூக்கை நுழைக்க மாட்டார்கள். ஆனால் தேடி வந்த வம்பை ஓட ஓட விரட்டுவார்கள். இவர்கள் கடின உழைப்பாளியானாலும் நிதானமாக செயற்படுவார்கள். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- மிருகžரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் இந்த 3 நட்சத்திரங்கள் கூடாது (ஏக ரச்சு). மற்றவர்களுக்கு எல்லாம் 6 நட்சத்திரங்கள் ஆகாதவைகளாக வரும்போது உங்களுக்கு மட்டும் 3 நட்சத்திரங்கள் ஆகாதவை என்பது சிறப்புதானே! அதிர்ஷ்ட மலர்-செண்பகப்பூ, பாரிஜாதம். அதிர்ஷ்டக் கல்-பவளம். அனுகூலத் தெய்வம்-சுப்பிரமணியர். அதிர்ஷ்ட நிறம்-சிவப்பு, செம்மை. அதிர்ஷ்ட எண்-5. சித்திரை 1-ம் பாதத்தில் பிறந்தவர்கள் தங்களிடம் பணியாற்றும் சக ஊழியர்களிடம் அன்போடும் அரவணைப்போடும் பேசி வேலையை முடிக்கும் திறன் பெற்றவர்கள். அவசரக்காரர்கள் என்றாலும் தந்திரசாலிகள். உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்த மாட்டார்கள். 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் மெலிந்த, உயரமான உடலமைப்பு, நீளமுகம், குறுகுறுக்கும் பார்வை ஆகியவற்றுக்குச் சொந்தக்காரர்கள். எப்போதும் வேகமாக நடக்கும் நடைப்பாங்குடையவர்கள்.

பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் 21-11-2010 அன்று இரவு 10.54 மணியளவில் மீன ராசிக்கு மாறுகிறார். இதுவரை உங்கள் ராசியிலிருந்து 6ல் இருந்து மன உளைச்சலைத் தந்து கொண்டிருந்த குரு, இந்தப் பெயர்ச்சி மூலம் 7-ம் வீட்டுக்கு மாறுவதால், நல்ல நிகழ்ச்சிகள் சங்கிலித் தொடராய் வந்து கொண்டிருக்கும். பரிசுப் பரிமாற்றம், விருந்து என்று மகிழ்வாக இருப்பீர்கள். உங்களின் பூர்வ புண்ணிய பலத்தாலும், தெய்வ அருளாலும் எடுக்கும் காரியம் யாவிலும் வெற்றி கிடைக்கும். பாராமுகமாய் இருந்தவர்கள் பக்கத் துணையாய் மாறுவார்கள். குடும்பத்தில் சுப விசேஷங்கள் எதிர்பார்த்தபடி நடந்தேறும். தொழில், வியாபாரம் ஆகியவற்றில் கூடுதல் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் கல்வி நலனிலும் ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் துறையில் காணப்பட்ட சுணக்கம் மறையும். சுதந்திரமாக சிந்தித்து செயல்பட ஆரம்பிப்பீர்கள். உடலும், மனமும் வலிமை பெறுவதால், புதிய முயற்சிகளில் துணிவுடன் இறங்குவதுடன், நினைத்த ஆதாயமும் கிடைக்கப் பெறுவீர்கள். நல்ல சுற்றமும், நட்பும் உடனிருந்நு தரும் ஊக்கத்தால், நல்ல வாழ்க்கை அமையும். தொடர் பயணங்களால் லாபமும், வெற்றியும் உண்டு.

பெண்களுக்கு: உங்கள், அனுபவ அறிவாலும் அறிவுத் திறமையாலும், சிக்கலான பிரச்சினைகளை எளிதாகத் தீர்த்துவிடுவீர்கள். குரு உங்களை சொந்த மனையில் அமர்த்தி வைப்பார். தள்ளிப்போய்க் கொண்டிருந்த சுப விஷயங்கள் உடனே நிறைவேறும் சூழல் இருப்பதால், மகிழ்வுடன் பணம் செலவழிக்கும் வாய்ப்புகிட்டும். உறவினர் வருகை நல்ல விஷயங்களுக்கு அச்சாரமாக அமையும். தெய்வீக யாத்திரை செல்வதற்கான வாய்ப்புக் கூடி வரும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக அமையும். பிள்ளைகளும் உஙகளின் குணமறிந்து இணக்கமாக நடந்துக் கொள்வார்கள்.

மாணவர்களுக்கு: புதிய நட்பு, இனிமையான நிகழ்ச்சி, நல்ல பொழுதுபோக்கு எல்லாம் கலந்த நூதன அனுபவத்தை அளிப்பார். செவ்வாய், சூரியன் இருவரும் உங்களின் மன பலமும், உடல் பலமும் உறுதியாகும். பெற்றோரின் பாசமும், அரவணைப்பும் உங்கள் உயர்வுக்குக் கை கொடுக்கும் விதமாக அமையும். உங்களின் முன்னேற்றத்திற்கு தடையாய் இருந்தவர்களை புறம் தள்ளி முன்னேறுவீர்கள். கடினமானவற்றையும் உங்கள் அறிவுத் திறமையால் அலசி ஆராய்ந்து ஆதாயம் பெறும் வாய்ப்பு கிட்டும். கிடப்பில் கிடந்த கல்விச் சலுகைகள் மீண்டும் கிடைக்கப்பெறும்.

வியாபாரிகளுக்கு: லாபகரமான பெரிய நிறுவனங்கள் உங்களுடன் இணைந்து பணியாற்ற முன் வரும் வைப்புத் தொகைகள் மூலம் கணிசமான லாபம் கிட்டும். தொழிலாளர்களிடையே நிலவி வந்த மோதலையும், பிணக்கையும் நீக்குவதுடன் குரு பழைய உறவையும் மலரச் செய்வார். வியாபார விரிவாக்கத்திற்கான வாய்ப்புக்களை முறையாகப் பயன்படுத்தினால் நல்ல வளர்ச்சியும், மேன்மையும் உண்டாகும். சரக்குப் பரிமாற்றத்தில் இருந்த சுணக்கம் தீரும். வாடிக்கையாளர்களின் வரவை அதிகமாக்க புதிய யுக்திகள் நல்ல பலனைத் தரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: சாதகமான குரு, உங்கள் கடமைக்குரிய பலனை வெற்றிக்கனியாக்கி உங்கள் கையில் தருவார். சக பணியாளர்களிடமிருந்து அதிக ஒத்துழைப்பைப் பெற்று பணிகளைச் சிறப்பாக முடிக்கலாம். மேலும் பணிகளை திருத்தமாகச் செய்வதால் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். அலுவலக அளவில் மனம் மகிழும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். புதிய சக்தியுடனும், யுக்தியுடனும் எதிரிகளின் செயலை முறியடிப்பீர்கள். திறமையிருந்தும் முன்னேற முடியவில்லையே என்று வருந்தியவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வரும்.

கலைஞர்களுக்கு: ஆசைப்படும் பொருள்கள் உங்கள் வசமாகும். தொழில் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். பண வரவு சரளமாக இருப்பதால் புதிய சொத்து மற்றும் நகை வாங்கி எதிர்கால வளத்தை ஸ்திரப்படுத்திக் கொள்வீர்கள். பிரிந்த உறவுகளும், நட்பும் திரும்ப வந்து சேர்வதுடன் உங்கள் வளர்ச்சிக்குத் தோள் கொடுத்து உதவும் நிலை உருவாகும். உங்களுடைய தனிப்பட்ட சாதுர்யத்தால் கடினமான காரியங்களையும் எளிதில் முடித்து, அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். ஆரோக்கியம் žராக இருக்கும்.

விவசாயிகளுக்கு: பொருளாதார இறக்கம் என்பது படிப்படியாகக் குறைந்து விடுவதால், விரும்பியவாறு கடன்களை அடைத்து மகிழ்வீர்கள். அரசு அளிக்கும் சலுகைகளைப் பெற்றுக் கொள்வதில் இருந்த குழப்பமும், பிரச்சினைகளும் தீர்ந்து விடும். எதிர்கால வளத்திற்கு வேண்டிய திட்டங்களைத் தீட்டி உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள சரியான காலமிது. பணப் பயிர்கள் மூலம் கணிசமான லாபம் கிடைப்பதால், பணம் சேமிக்கும் வாய்ப்பும் வந்து சேர்வதோடு, பயிர்க் கடனும் அடைந்து விடும். மூலிகை வகைப் பயிர்களை நடவு செய்வது மூலம் அவற்றை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு: குரு, உங்களின் திறமையின் செயல்பாட்டை செம்மைப்படுத்துவதுடன் உங்களின் ஆதரவாளர்களின் எண்ணிக்கையையும் உயர்த்துவார். இதுவரை மனதில் இருந்த கலக்கம், குழப்பம் யாவும் விலகுவதால் தெளிவான சிந்தனையுடன் களமிறங்குவீர்கள். உங்கள் கௌரவத்துக்கேற்ற பதவி உங்களைத் தேடி வரும். அவ்வப்போது தொல்லை கொடுக்கும் எதிரிகளை உங்கள் தைரிய நடவடிக்கையால் ஒடுக்கி விடுவீர்கள். உயர்ந்த மனிதர்களின் அறிமுகம் கிட்டும். பணியாளர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகிவிடும்.

பரிகாரங்கள்: கடன் தொல்லைகளைக் குறைக்க செவ்வாயன்று முருகனின் கோவிலில் தீபம் ஏற்றி வர சிறப்பான பலன்கள் தானே உங்களைத் தேடி வரும். உங்களின் குல தெய்வத்தை உரிய முறையில் ஆராதித்து வாருங்கள். குடும்ப வளம் பெருகும். சதுர்த்தி அன்று பிள்ளையாரை வலம் வருவோர்க்கு தொழிலில் இருந்த தடைகள் விலகி, உயர்வுக்கான வழி பிறக்கும்.

துலாம்
(சித்திரை 3, 4 சுவாதி, விசாகம் 1, 2, 3வது பாதம் வரை)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்

துலாம் ராசியின் சிறப்பு: ராசிக் கட்டத்தில் 7வதாக வரும் ஆண் ராசியான துலாத்தின் உருவம் துலாக் கோலை ஒத்திருக்கும். துலாமை தன் ராசியாகவும், லக்னமாகவும் கொண்டவர்கள். அரிய, பெரிய காரியங்களைப் பிறர் வியக்கும் வண்ணம் சாதிக்கும் திறமையுடையவர் தந்திரமாக சாதிக்கக்கூடிய காரியங்களில் விடாக் கண்டர்கள். தரகு, மத்தியஸ்தம் செய்யும் துறைகளில் இவர்களைக் கருவியாகப் பயன்படுத்தினால் காரிய வெற்றியும் கைமேற் பலனும் கிட்டிடும். துலாமிற்கு உரிய ஆதிக்கக் கிரகம்-சுக்ரன். அதிர்ஷ்ட மலர்-வெண்தாமரை. அதிர்ஷ்டக் கல்-வைரம். அதிர்ஷ்ட நிறம்-வெள்ளை. அதிர்ஷ்ட திசை-தென்கிழக்கு. அதிர்ஷ்ட எண்-6. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்-லட்சுமி.

துலாம் ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: சித்திரை 3, 4 பாதங்கள். சுவாதி 1, 2, 3, 4 பாதங்கள். விசாகம் 1, 2, 3 பாதங்கள். சித்திரை 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மூளைதான் மூலதனம். இதைக்கொண்டு வியாபாரத்திலோ, தொழிலிலோ லாபம் பெறுவார்கள். புதிய இடங்களுக்குச் செல்வதிலும், புத்தகங்கள் படிப்பதிலும் அதிக ஈடுபாடுள்ளவர்கள். சித்திரை 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் பொறுப்பை ஏற்பதில் முதலில் சிறிது தயங்கினாலும், எதையும் ஏற்றுக்கொண்ட பிறகு முழு முயற்சியுடன் சாதித்து முடித்திடுவார்கள். கஷ்டப்பட்டு முன்னுக்கு வரக்கூடிய ஆற்றல் மிக்கவர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய அதிபதி ராகு ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய ஆரம்ப தெசை ராகு ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையும் கூர்ந்து நோக்கும் ஆராய்ச்சித் திறனுடையவர். எக்காரியத்திலும் நல்லது கெட்டது என இரண்டையும் அலசிப் பார்த்து பிறகு செயலில் ஈடுபடுவர். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- ரோகிணி நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் ரோகிணி, திருவாதிரை, உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், அதிர்ஷ்ட மலர்-வெண்தாமரை. அனுகூல தெய்வம்-பத்திரகாளி. அதிர்ஷ்டக் கல்-கோமேதகம். அதிர்ஷ்ட நிறம்-கருமை கலந்த மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்-6, 15. சுவாதி 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் அதிக சரீர உழைப்பின்றி மூளையின் உதவியைக் கொண்டு புத்திக்கூர்மையாலும் வாக்கு சாதுர்யத்தாலும் சாதிக்கக்கூடிய செயல்களில் இவர் திறமை சோபிக்கும். சட்ட நுணுக்கங்களை ஆராய்வதிலும் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதிலும் தனித் திறமை வாய்ந்தவர்கள். சுவாதி 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் சுறு சுறுப்பாக செயல்படும் இயல்புடையவர்கள். கம்பீரமான தோற்றமும் அழகான கண்களும் உடையவர்கள். எதிலும் ஆழ்ந்த கருத்தும் கற்பனையும் உடைய இவர்களுக்கு இரக்க குணம் உண்டு. சுவாதி 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் முன்னேற்றப் பாதையில் முன்னணியில் இருப்பார்கள். எளிதில் இவரை ஏமாற்ற முடியாது. வளர்ச்சிக்குரிய காரியங்களையும் பத்திரப்படுத்தக்கூடிய சேமிப்பு விவகாரங்களையும் இவரிடத்தில் ஒப்படைப்பது சிறந்ததாகும். சுவாதி 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்குத் தாம் வழிகாட்டிகளாக இருக்க வேண்டுமென்ற உயர்ந்த நோக்கமுடையவர்கள். பிறரிடத்தில் உள்ள உயரிய குணங்களைப் போற்றிப் புகழ்வதோடு தாமும் அவற்றைப் பின்பற்றுவதற்குத் தயாராய் இருப்பார்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி குரு ஆகும். இவர்களின் ஆரம்ப தெசை குரு ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் திறமையின் மேல் நம்பிக்கை வைத்து செயல்படுபவர்களாக இருப்பதோடு நண்பர்களுக்கு நல்ல வழிகாட்டியாகத் திகழ்வார்கள். கல்வியில் தேர்ச்சியும், நல்ல நிர்வாகத் திறமையும் பெற்றிருப்பார்கள். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)-உத்திராடம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் புனர்பூசம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், விசாகம், பூரட்டாதி, அதிர்ஷ்ட மலர்-முல்லை. அனுகூல தெய்வம்-பிரம்மா. அதிர்ஷ்டக் கல்-கனக புஷ்பராகம். அதிர்ஷ்ட நிறம்-வெண் மஞ்சள். அதிர்ஷ்ட எண்-7, 15. விசாகம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் தான் பயன்படுத்தும் பொருட்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார். சந்தர்ப்பத்திற்கேற்ப சமாளிக்கும் திறமையும் தெளிவும் இவருக்குக் கை கொடுக்கும். விசாகம் 2ம் பாதத்தல் பிறந்தவர்கள் மற்றவர்களின் எண்ணவோட்டத்தை žக்கிரமாகக் கிரகித்துக்கொள்வார்கள். பெரும் புகழைத்தேட வேண்டும் என்பது, இவரது வாழ்நாள் இலட்சியமாக இருக்கும். விசாகம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் தம்முடைய காரியங்களைத் தம்முடைய இருப்பிடத்தில் இருந்துக் கொண்டே சாதித்துக் கொள்வார்கள். பிறர்க்கு தம்மால் உதவி செய்ய முடியாவிட்டாலும் உதவி பெறக்கூடிய வழியைக்காட்டுவார்கள்.

பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் 21-11-2010 அன்று இரவு 10.54 மணியளவில் மீன ராசிக்கு மாறுகிறார். இதுவரை உங்கள் ராசியிலிருந்து 5-ல் இருந்து பல நல்ல பலன்களையும், உயர்வையும் தந்து கொண்டிருந்த குரு, இந்தப் பெயர்ச்சி மூலம் 6ம் வீட்டுக்கு மாறுவதால், எதிலும் நிதானமாய் செயல்படுவது அவசியம். பங்குச் சந்தை, பணம் கொடுக்கல்-வாங்கல் எதுவாக இருந்தாலும் கணக்கு வழக்குகளை முறையாகப் பராமரித்து வருதல் நல்லது. தொழில் துறையில் இருப்பவர்கள் தேடி வரும் வளர்ச்சி வாய்ப்புகளை கவனத்துடன் செயல்படுத்தினால் வளமான வாழ்வு அமையும். பணம் புழங்கும் இடங்களில் பணிபுரிபவர்கள் பிறரிடம் பொறுப்புக்களை ஒப்படைக்கும் போது, அதற்குரிய விதிமுறைகளைக் கடைபிடித்து வந்ததால், வீண் சிக்கலும், மன உளைச்சலும் எழாமல் பார்த்துக் கொள்ள முடியும். குழந்தைகளிடம் அன்பாக நடந்துக் கொண்டால் அவர்கள் எப்போதும் உங்கள் பக்கம்தான்! அசையாச் சொத்துக்களில் அதிக முதலீடுகளைத் தவிர்ப்பதுடன், நம்பிக்கைக்கு உகந்தவர்களை பங்காளிகளாகச் சேர்த்துக்கொண்டு செயலாற்றினால், வியாபாரம் ஓரளவு லாபகரமாய் அமையும். வலிய உறவு கொண்டாடவரும் பகைவரிடமிருந்து விலகி இருந்தால், சங்கடங்களிலிருந்து எளிதில் விடுபட முடியும்.

பெண்களுக்கு: நீங்கள் நல்லது செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிக்க உறவுகள் தயாராய் இருக்கும் பிள்ளைகளிடம் கோபதாபத்தை வெளிப்படுத்துவதைத் தவிர்த்தால் உங்கள் பணிகள் அனைத்தும் žராகவே நடக்கும். தேவையற்ற இடங்களில் வீண் பேச்சுக்களைத் தவிர்த்தல் வேண்டும். பொருளாதாரத் தேவைகளை சமாளிக்க கடன்பட நேரலாம். நல்லவர்கள் போல் நடிப்பவர்களை நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம். பயணங்களில் கைப்பொருளை பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடாய் இருத்தல் அவசியம்.

மாணவர்களுக்கு: குறுக்கு வழியில் சிந்தனையை அலைய விடாதிருந்தால், நாடி வரும் நன்மைகளைத் தக்க வைத்துக் கொள்ள இயலும். விடாமுயற்சியினால் சில நெருக்கடிகளை சமாளித்து, எதிர்நீச்சல் போட்டால், வெற்றியெனும் வழி தெரியும். உதவி செய்ய வருபவர்களை உதாžனப் படுத்தாமலிருந்தால் நிறைய நன்மைகளை அடையலாம். தீயவரை ஒதுக்கி நல்லவரின் நட்புறவைப் பலப்படுத்தினால், வளமான வாழ்க்கை அமையும். உடல் நலத்தை நன்றாக பராமரித்தால், உங்களின் உற்சாகம் குறையாமலிருக்கும்.

வியாபாரிகளுக்கு: ஆடம்பரமான செலவுகளைத் தவிர்த்தால், சேமிப்பினை உடைக்கும் நிலை உண்டாகாமல் இருக்கும். அதிக ஆசைப்படுதல், அகலக் கால் வைத்தல் ஆகியவற்றை விலக்கினால், வந்து கொண்டிருந்த லாபம் குறையாமலிருக்கும். நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளின் மேல் சந்தேகப் பார்வை வேண்டாம். பண இருப்புக்கேற்றவாறு சரக்குகளை வாங்கிக் கொள்ளுதல் நலம். உடனிருந்து தொல்லை தருபவர்களிடம், எச்சரிக்கையாய் இருப்பது அவசியம். கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்ச்சியோடு இருந்தால், பணம் முடங்காமலிருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: சில நேரங்களில் தேவையற்ற அலைச்சலும், இடமாற்றமும் உங்களின் அமைதியைக் கெடுக்கும். மற்றவரை நம்பி ஒப்படைத்த வேலைகளை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கும் சூழல் நிலவும். எனவே முக்கியமான பணிகளில் உங்களின் நேரடி கவனத்தை வைப்பது நல்லது. உயர் பதவியில் உள்ளவர்கள் பொறுப்புடன் கடமையாற்றினால், அவப்பெயருக்கு ஆளாகாமல் தப்பலாம். எப்போதும் கவனமாய் இருந்தால், எதிரிகளின் வலையை சுலபமாக அறுப்பதோடு நல்ல பெயரையும் தக்க வைத்துக் கொள்வது ஓரளவு எளிதாக இருக்கும்.

கலைஞர்களுக்கு: ஏற்ற இறக்கமான பொருளாதாரத்தை சமப்படுத்த கடும் முயற்சி தேவைப்படும். உண்ணவும், உட்காரவும் நேரமின்றி ஓடிக்கொண்டே இருப்பீர்கள். எந்த வேலையிலும் உங்கள் முழு கவனம் இருப்பது அவசியம். புதிய மற்றும் நூதன முயற்சிகளுக்கு ஆதரவான கால நேரம் வரும் வரை பொறுமையாய் இருப்பது நல்லது. விழா, விருந்து ஆகியவற்றில் எதிலும் அளவாக இருந்தால், எந்தத் தொந்தரவும் எழாது. நெருக்கடியான நேரங்களில் புத்திசாலித்தனமாக நடந்துக் கொண்டால், உங்கள் உழைப்பும் நேரமும் வீணாகாமலிருக்கும்.

விவசாயிகளுக்கு: பயிர்களுக்குத் தேவையான பூச்சி மருந்து, உரம் முதலியவற்றை வாங்குவதில் கவனமாக இருப்பதன் மூலம் பணக் கஷ்டத்திலிருந்து தப்பிக்க இயலும். அதிக வட்டிக்குப் பணம் வாங்குவதைத் தவிர்த்து கூட்டுறவு வங்கிகளை அணுகினால், கடனை அடைப்பதில் உள்ள சிரமங்கள் குறையும். குறைவான முதலீட்டில் ஓரளவு லாபம் தரும் பயிர் மற்றும் பூ வகைகளைத் தேர்வு செய்வதன் மூலம் அதிக பணம் முடங்குவதைத் தவிர்க்க முடியும். போர் பைப் போடுபவர்கள் கூட்டு முயற்சியாக செயல்பட்டால், நீர் பற்றாக்குறை என்ற நிலையை மாற்றுவது ஓரளவு சாத்தியமாகும். மேலும் தேவையானபோது சொட்டுப்பாசன முறையைப் பின்பற்றுவது புத்திசாலித்தனம்.

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு: சூடான வார்த்தைகளை உதிர்க்காமலிருந்தால் சுற்றியிருப்பவரின் அன்பையும் ஆதரவையும் எளிதில் பெற முடியும். பல நேரங்களில் உழைப்பு அதிகாகவும், அதற்கான பலன் குறைவாகவும் இருக்கும் எதிரிகளால் அமைதிக் குறைவு, உடல்நலக் குறைவு ஆகியவை ஏற்பட இடம் கொடாமல் விழிப்பாய் இருப்பது அவசியம். அசையாச் சொத்துக்களின் பராமரிப்பில், கவனமாக இருப்பது அவசியமாகும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்கள் இயல்பு வாழ்க்கையோடு மோதாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

பரிகாரங்கள்: வியாழன் அன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் விளக்கேற்றி வந்தால், நலம் பல கூடும். ஏழைகளுக்கும், வயதானவர்களுக்கும் இயன்றபோது அன்னதானம் செய்து வர, குடும்பத்தில் உள்ள குறைகள் நீங்கி நலமும், வளமும் பெருகும். அவரவர்க்குரிய குல தெய்வத்தை வழிபட்டு வர, துன்பங்கள் விலகி இன்பங்கள் கூடும்.

விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை முடிய)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்

விருச்சிக ராசியின் சிறப்பு: ராசிக் கட்டத்தில் 8-வதாக வரும் பெண் ராசியான விருச்சிகத்தின் உருவம் தேளை ஒத்திருக்கும். விருச்சிகத்தை தன் ராசியாகவும், லக்னமாகவும் கொண்டவர்கள் அடிமை வாழ்க்கையை ஒரு நாளும் விரும்ப மாட்டார்கள். எந்தத் தொழில் செய்தாலும் சுயமாகச் செய்வதுதான் நன்மை தரும் என்று தீவிரமாக நம்புவார்கள். விருச்சிகத்திற்கு உரிய ஆதிக்கக் கிரகம்-செவ்வாய். அதிர்ஷ்ட மலர்-செண்பகம். அதிர்ஷ்டக் கல்-பவளம். அதிர்ஷ்ட நிறம்-சிவப்பு. அதிர்ஷ்ட திசை-தெற்கு. அதிர்ஷ்ட எண்-9. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்-சுப்பிரமணியர்.

விருச்சிக ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: விசாகம் 4ம் பாதம், அனுஷம் 1, 2, 3, 4 பாதங்கள். கேட்டை 1, 2, 3, 4 பாதங்கள். விசாகம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் பொறுப்புகளை ஏற்பதற்குத் தயங்குவார்கள். பண விவகாரங்களில் எளிதில் பிறரை நம்ப மாட்டார்கள். அப்படியே இவரிடத்திலிருந்து அனுகூலங்களைப் பெறுவது மிகக் கடினம். தம்முடைய காரியங்களைத் தம்முடைய இருப்பிடத்தில் இருந்து கொண்டே சாதித்துக் கொள்வார்கள். பிறர்க்கு தம்மால் உதவி பெறக்கூடிய வழியைக் காட்டுவார்கள். அனுஷம் நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி தெசையே ஆரம்ப தெசையாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தக் காரியத்திற்கும் பிறர் உதவியை நாடாதவர்கள். சுய நம்பிக்கையுடையவர்கள் என்றும், தன் கையே தனக்குதவியென்ற திட சித்தம் உடையவர்கள். அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு: வேதை(ஆகாதது)- பரணி நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் பூசம், பரணி, பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி. அதிர்ஷ்ட மலர்-கருங்குவளை, அனுகூல தெய்வம்-எமன். அதிர்ஷ்டக் கல்-நீலம். அதிர்ஷ்ட நிறம்-கறுப்பு, அதிர்ஷ்ட எண்-8. அனுஷம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்கள் ஓயாது உழைப்பார்கள். தன் சக்திக்கு மீறி காரியங்களையும், அலுப்பு சலிப்பின்றிச் செய்திடுவார்கள். ஸ்திர புத்தியுடையவர்கள், அரிய பெரிய தத்துவங்களை எளிதில் கிரகித்துக் கொள்ளும் மெய்ஞான உணர்வுடையவர்கள். அனுஷம் 2-ம் பாதத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பானவர்கள். நேரத்தை வீணாக்காமல் இயந்திரம் சுழல்வது போல் ஒரே இடத்தில் நிலைத்துக் காலவரம்பிற்குள் செய்வனவற்றைத் திருந்தச் செய்வார்கள். சிறிய முயற்சியில் பல காரியங்களைச் சாதித்திடுவார்கள். அனுஷம் 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சந்தற்பத்திற்கேற்றவாறு தம் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் பழக்கம் உண்டு. காரியத்தை எளிதில் சாதித்து முடிக்கும் சக்திவாய்ந்தவர்கள். நயமாகப் பேசி மற்றவர்களைத் தம் வசமாக்கிக் கொள்வார்கள். அனுஷம் 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எளிதில் வராது கோபம். வந்தால் கண் மூடித்தனமாக எதையும் செய்திடுவார்கள். இரக்க குணமுடையவர்கள். பழைய சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பதிலும் இவர் நூதன முறையைக் கையாள்வார்கள், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய கருத்துக்களுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் ஊக்கமளிப்பார்கள். உறவினர்களிடத்தில் வாஞ்சையுடையவர்கள் இருப்பது சிறிதெனினும் சுயமாகத் தேடி அதைப் பன்மடங்காக்கும் வல்லமை உடையவர்கள். கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு: வேதை(ஆகாதது)- அசுவினி நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் அசுவினி, ஆயில்யம், மகம், மூலம், கேட்டை, ரேவதி. அதிர்ஷ்ட மலர்-வெண்காந்தள், அனுகூல தெய்வம்-காளி மாதா. அதிர்ஷ்டக் கல்-மரகதம். அதிர்ஷ்ட நிறம்-பச்சை. அதிர்ஷ்ட எண்-9. கேட்டை 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களைக் கைவிட மாட்டார்கள். சில விஷயங்களில் சுயநலவாதிகள் என்றாலும் தம்மை நம்பி வந்தவர்களுக்கு நல்ல பாதுகாப்பளித்திடுவார்கள். கேட்டை 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் சட்டென்று தன் உணர்வுகளை வெளிக்காட்டத் தயங்குவார்கள். மேலும் நண்பர்களிடமிருந்து அதிக உதவியையும், அதிக ஆறுதலையும் எதிர்பார்க்கும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். கேட்டை 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் ஆழ்ந்து சிந்திக்காமல் எந்த விவகாரத்திலும் தலையிடமாட்டார்கள். பிறரைப் புகழ்ந்தோ அல்லது குறுக்கு வழிகளைக் கடைபிடித்தோ காரியத்தைச் சாதிப்பது இவர்களுக்குப் பிடிக்காது. கேட்டை 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் எதையும் திறம்படச் செய்ய வேண்டுமென்ற கொள்கை உடையவர்கள். சில சமயங்களில் மனக்குழப்பமும் மனோவியாகூலமும் இவரைப் பெரிதும் பாதிக்கும்.

பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் 21.11.2010. அன்று இரவு 10.54 மணியளவில் மீன ராசிக்கு மாறுகிறார். இதுவரை உங்கள் ராசியிலிருந்து 4ல் இருந்து நன்மைகளை வர விடாமல் தடுத்து கொண்டிருந்த குரு, இந்த பெயர்ச்சி மூலம் 5ம் வீட்டுக்கு மாறுவதால், பல நன்மைகள் தானே வந்து சேரும். இது வரை நீங்கள் அனுபவித்த பொருள் கஷ்டம், மனக் கஷ்டம் யாவும் நீங்கிவிடும். எந்த விஷயத்திலும் தயங்காமல் காலை வைக்கலாம். ஏனெனில் உங்களுக்கு நன்மை தரப்போகும் நண்பர்களும், நல்லவர்களும் உங்களை சூழ்ந்துள்ளார்கள். பிரிந்திருந்த உறவுகளும், குடும்பமும் இணைவதால், மகிழ்ச்சியும் பெருகும். ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கான வாய்ப்பு கூடி வருவதால், பெண்கள் தனி உற்சாகத்துடன் வலம் வருவார்கள். வெளி வட்டார பழக்கங்களை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வீர்கள். பூர்வீகச் சொத்தில் நிலவிய வில்லங்கங்கள் நீங்கி சுமூகமான முடிவுகள் ஏற்படும். தொழில் விரிவாக்கத்தால் லாபம் கூடும். எந்த ஒரு விஷயமும், எந்த முடிவும் உங்களுடைய தீவிர முயற்சியால் நிறைவான பலனைத் தரும். பலன் தரும் பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். குழந்தைகளால் பெருமை உண்டு. அவர்களின் மேல் படிப்பு, வேலை ஆகியவை அதிக சிரமமின்றி அவர்களின் விருப்பப்படி நிறைவேறும். உங்களின் அயராத உழைப்பால் உன்னதமான நிலையை அடைவீர்கள்.

பெண்களுக்கு: நெடுநாளாக மகப்பேறை எதிர்பார்த்திருந்த பெண்கள் தாயாகும் பாக்கியம் பெறுவதால், மனக்குறை நீங்கும். இல்லத்தில் இருக்கும் மகிழ்ச்சி, உள்ளத்திலும் நிறைந்திருக்கும். அடிக்கடி குழம்பிக் கொண்டிருந்த விவகாரங்களில் நல்லதொரு தீர்வு கிடைக்கும். பண விவகாரங்களில் நல்ல முன்னேற்றம் இருப்பதால், கடன் தொல்லையும் கணிசமாகக் குறையும். மருத்துவ செலவிற்காக கொஞ்சம் பணம் செலவு செய்ய வேண்டியிருந்தாலும், ஆரோக்கியம் žராக இருக்கும். தொழில் மாற்றம், பணி நிமித்தம் நீண்ட நாட்களாக பிரிந்திருந்தவர்கள், குடும்பத்துடன் ஒன்று சேரும் வாய்ப்பு கிடைக்கும்.

மாணவர்களுக்கு: பாராமுகமாய் இருந்த நண்பர்கள் தேடி வந்து நட்பு பாராட்டுவார்கள். குரு நல்ல இடங்களைப் பார்ப்பதால், உங்களுடைய இனிமையான பேச்சால் அனைவரையும் வžகரித்து விடுவீர்கள். உங்களை தேடி வரும் வாய்ப்புகளை நழுவ விடாமல் சாதுர்யமாக பயன்படுத்திக்கொண்டால், உங்கள் திறமை உங்களின் வளமைக்கு அடித்தளமாக மாறும். உங்களின் பாசத்தை நண்பர்கள் புரிந்து கொள்வதால் உறவுகள் வலுப்படும். கல்லூரிப் போட்டிகளில் உங்கள் பெயர், திறமை இரண்டையும் நிலைப்படுத்திக் கொள்வீர்கள்.

வியாபாரிகளுக்கு: புதிய யுக்திகளைப் பயன்படுத்தி தேடி வரும் வாய்ப்புக்களையும், அதனுடன் வரும் லாபத்தையும் தக்க வைத்துக் கொள்வீர்கள். தேவைப்படும் உடனிருப்பவர்கள் உங்கள் ஏற்றத்திற்கு உறுதுணையாக அமைவார்கள். வியாபார வட்டத்தில் உங்களின் நாணயம் நம்பிக்கை இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும். தொழில் நிலையை மேம்படுத்த எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். பிரயாணத்தால் நன்மை உண்டு. மனதை நெருடிக் கொண்டிருந்த விஷயங்களுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: தேவையற்ற பரபரப்பும், பொறுமையின்மையுமாக இருந்த நிலை மாறி அமைதியாக செயல்பட ஆரம்பிப்பீர்கள். அலுவலக அளவில் முக்கியப் பொறுப்பு வகிப்பதால் மக்களிடமும், சக ஊழியர்களிடமும் எளிதில் பழகும் சுமூக வாய்ப்பு கிடைக்கும். தொழிற்சாலை மேற்பார்வையாளர்கள், மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செல்வாக்கும் மதிப்பும் பெறுபவர்களாகத் திகழ்வார்கள். சக பணியாளர்களுடன் ஒற்றுமையும், நட்பும் உண்டாகும். ஊழியர்களுக்கு சம்பள உயர்வும், அதிக சலுகைகளும் தடையின்றிக் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு: முன்னேற்றத்திற்கான திட்டங்களில் இருந்த தேக்க நிலை மாறுவதால், மீண்டும் புதிய பொலிவுடன், உங்கள் திறமைகளை அரங்கேற்றும் வாய்ப்பு கிட்டும். குடியிருக்கும் வீட்டை உங்கள் விருப்பம் போல் மாற்றி மகிழ இது ஏற்ற காலம். கலைஞர்களின் திறமைக்கு ஏற்ற மதிப்போ, பாராட்டோ கிடைக்காமல் இருந்த நிலை மாறி தகுதிக்கு உரிய பாராட்டு கிடைக்கப் பெறும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். €விட்டு போன சொத்துக்கள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. தொழிலில் நிலவிய குழப்பங்களும், நெருக்கடிகளும் மறையும்.

விவசாயிகளுக்கு: குறுகிய கால பயிர்கள் மூலம் பெறும் லாபம் அதிகரிப்பதால், கடன் தொல்லைகள் பெருமளவு குறைந்து உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். இது வரை எதிர்கொண்ட தொழில் நெருக்கடிகள் விலகி, புதிய உத்திகளைப் பயன்படுத்தி மகசூலை பெருக்கும் வாய்ப்பும் மனம் போல் வந்து சேரும். தரமான விதைகள், பூச்சிக்கொல்லிகள் முதலியவை வாங்க அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்களுடைய பராமரிப்பால் பயிர்களில் உள்ள பூச்சித் தொல்லை மட்டுப்படும்.

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு: குரு நல்ல இடத்தில் இருப்பதால், உங்களின் வாக்கு வன்மை பெருகும். விழா, விருந்து என்று உங்கள் பரபரப்புக்கும், மகிழ்ச்சிக்கும் குறைவிராது. தொடர் பயணங்களால் லாபமும், வெற்றியும் உண்டு. நல்ல சுற்றமும், நட்பும் உடனிருந்து தரும் ஊக்கத்தால், நல்ல வாழ்க்கை அமையும். எதிர்ப்பும், போட்டியும் விலகுவதால், ஏகோபித்த ஆதரவு கிட்டுவதுடன், நல்ல பதவியும் கிட்டும். உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் உங்களுக்கு தகுந்த நேரத்தில் பக்க பலமாக இருப்பார்கள்.

பரிகாரங்கள்: பிரதோஷம் வரும் நாளன்று சிவனை வழிபட்டு அவருக்குப் பிடித்த வில்வத்தால் அர்ச்சனை செய்து வரவும். திங்கள்கிழமை தோறும், அபிராமி அன்னையை வலம் வருவோர்க்கு நலம் பல கூடும்.

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்

தனுசு ராசியின் சிறப்பு: ராசிக் கட்டத்தில் 9-வதாக வரும் ஆண் ராசியான தனுசில் அமைந்திருக்கும் நட்சத்திரக் கூட்டத்தின் உருவம் மிருக சரீரத்துடன் கூடிய மனிதன் வில்லேந்தி அம்பு தொடுப்பது போன்ற உருவ அமைப்புடன் காணப்படும். தனுசை தன் ராசியாகவும், லக்னமாகவும் கொண்டவர்கள் மிகுந்த தர்மவானாகவும், யோகியாகவும் இருப்பார்கள். தன் சுய சாமர்த்தியத்தால் எல்லா சிறப்புக்களையும் பெறுவார்கள். தனுசிற்கு உரிய ஆதிக்கக் கிரகம்-குரு. அதிர்ஷ்ட மலர்-முல்லை. அதிர்ஷ்டக் கல்-புஷ்பராகம். அதிர்ஷ்ட நிறம்-மஞ்சள். அதிர்ஷ்ட திசை-வடகிழக்கு. அதிர்ஷ்ட எண்-3. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்-பிரம்மா.

தனுசு ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: மூலம் 1, 2, 3, 4 பாதங்கள், பூராடம் 1, 2, 3, 4 பாதங்கள், உத்திராடம் 1ம் பாதம். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர அதிபதி கேது ஆகும். இவர்களின் ஆரம்ப தெசை கேது ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல சங்கீத வித்துவான்களாகவும், கவிஞராகவும், ஓவியராகவும் விளங்குவார்கள். பந்துக்களிடம் என்றும் மாறாத அன்பு செலுத்துபவர்கள். செய்த உபகாரத்தை மறக்காதவர்கள். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)-ஆயில்யம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி. அதிர்ஷ்ட மலர்-செவ்வல்லி. அனுகூல தெய்வம்-இந்திரன். அதிர்ஷ்டக் கல்-வைடூரியம். அதிர்ஷ்ட நிறம்-கரும் பச்சை. அதிர்ஷ்ட எண்-1, 19. மூலம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் பெண்களிடத்தில் நயமாகப் பேசி அவர்களுடைய அன்பிற்குப் பாத்திரமாவார்கள். இவருடைய முடிவும், தீர்ப்பும் பாரபட்சமற்றதாக விளங்கும். நீதிக்கு விரோதமாக எந்தக் காரியத்தையும் செய்யத் துணியமாட்டார்கள். மூலம் 2ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல அறிவுக்கூர்மை உண்டு. விரிந்த அனுபவமுடையவர்கள். இதனால் இவர்கள் சாமர்த்தியமாக தன் வாழ்க்கையை நடத்திக்கொள்வார்கள். அதிக பொறுப்பைத் தாமாகவே ஏற்றுக்கொள்வார்கள். மூலம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் சிறிய விஷயங்களை இவர் ஒரு பொருட்டாகக் கருதமாட்டார்கள். பெருந்தன்மையும் மன்னிக்கும் கண்ணியமும் இவரிடத்தில் உண்டு. சந்தர்ப்ப சூழ்நிலையை நன்குணர்ந்து, தக்கபடி பயன்படுத்தி கொள்வார்கள். மூலம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் பிறர் காரியங்களில் தலையிட மாட்டார்கள். ஆனால், வந்த வம்பு வழக்குகளை விட மாட்டார்கள். குறிப்பிட்ட காரியங்களை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்கும் ஆற்றலுடையவர். அதேபோல, பிறரிடத்தில் இவர் ஒப்படைத்த காரியங்களை இவர் கருதியபடி செய்து முடிக்காவிட்டால் žறி விழும் குணமும் உண்டு. பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி சுக்ரன் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப தெசை சுக்ரன் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இனிமை. வžகரத் தோற்றம், ஆடம்பரத் தோற்றம் ஆகியவற்றை உடையவர்களாக இருப்பார்கள். வசதியாக வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்களாகவும் இருப்பார்கள். பூராடம் நட்சத்திரர்காரர்களுக்கு வேதை(ஆகாதது)-பூசம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி. அதிர்ஷ்ட மலர்-வெண் தாமரை. அனுகூல தெய்வம்-லட்சுமி. அதிர்ஷ்டக் கல்-வைரம். அதிர்ஷ்ட நிறம்-வெண் நீலம், மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்-2, 20. பூராடம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் எடுத்துக்கொண்ட காரியத்திலுள்ள சிரமத்தைப் பொருட்படுத்தாது வெற்றிகரமாகச் செய்து முடிப்பார்கள். பொதுநலத் தொண்டு, சமூக சேவை ஆகியவற்றில் ஈடுபடுவதன் மூலம் ஆத்ம திருப்தி அடையவார்கள். 2ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சுற்றுப்பிரயாணத்தில் ஈடுபடும் பணிகள் உகந்தவையாக அமையும். லாபம் இருக்கும் காரியங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள். இவரை நன்கறிந்தவர்கள் எப்பொழுதும் இவருக்குத் துணையாய் இருப்பார்கள். 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் எவரையும் எளிதில் நம்பமாட்டார்கள். அப்படி நம்பிவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்யத் துணிந்து விடுவார்கள். இவர்கள் சொந்தமாகத் தொழில் செய்வதைவிட மற்றையோரின் பிரதிநிதியாகப் பணியாற்றின், அதிகப் பலன் கிடைக்கும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பொது மக்களிடம் நெருங்கிய தொடர்பு கொள்ளும் பணி, செய்திகளை சேகரித்தல் போன்ற பணிகளை ஆற்றும் வாய்ப்பு உங்களுக்கு அமையும். இவர்கள் எத்தொழிலிலும் சேவை மனப்பான்மையோடு ஈடுபடுவார்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி சூரியன். அவர்களின் ஆரம்ப தெசை சூரியன் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுதந்திர உணர்வும், žர்திருத்தக் கொள்கையும் கொண்டவர்களாகத் திகழ்வார்கள். அனைவரிடமும் எளிதில் பழகி நட்பு பாராட்டுவார்கள். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)-பூசம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி. அதிர்ஷ்ட மலர்-தாமரை. அனுகூல தெய்வம்-சிவன். அதிர்ஷ்டக் கல்-மாணிக்கம். அதிர்ஷ்ட நிறம்-பச்சை. அதிர்ஷ்ட எண்-3. உத்திராடம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு உயர்ந்த மனிதர்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்புக்கள் கிடைக்கும். விளைவுகளை முன் கூட்டியே சிந்திக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பொதுப்பலன்கள்: இதுநாள் வரை 3ம் வீட்டில் இருந்தாலும், தன் பார்வையால் பல நல்லதைத் தந்த குரு, இந்தப் பெயர்ச்சி மூலம் 4ம் வீட்டுக்கு செல்வதால், நல்ல திட்டங்கள் கிடப்பில் போடப்படும். உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு துணை போகாமலிருந்தால், புகழேணியில் உங்கள் நிலை மேலும் உயரும். வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை காட்டி வாருங்கள். இல்லத்தில் இனிமை குறையாமலிருக்கும். கூட்டுத்தொழிலில் உள்ளவர்கள் விட்டுக் கொடுத்து நடந்தால், பங்காளிகளின் முணு முணுப்பு குறைய வாய்ப்பிருக்கிறது. வெற்றிப்படிகளில் ஏறும் போது கை கொடுத்து உதவியவர்களுக்கு உரிய நன்றியை செலுத்துவன் மூலம் உங்கள் நல்ல பெயரை நிலை நாட்டிக் கொள்ளலாம். பதவியில் உள்ளவர்கள் பதவி உயர்வுக்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். அதிக தடவைகள் அலைந்தபின், உங்களுக்கு வர வேண்டிய தொகை கையில் கிடைக்கும். செலவுகள் அதிகம் என்பதால், சேமிப்புக்கு அதிக தொகை ஒதுக்க இயலாத நிலை இருக்கும். நேரான பாதையில் சிந்தனையைத் திருப்பினால், நிறைவான வாழ்க்கை நிலைத்திருக்கும். வழக்கு, விவகாரங்களில் அனுகூலமான போக்கு வரும் வரை அமைதியைக் கடைபிடிப்பது நல்லது.

பெண்களுக்கு: துணைவருடன் இணக்கமாக இருந்தால் வாழ்வு இனிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் ரத்த சோகை, ரத்த அழுத்தம் போன்றவைகளுக்காக மருந்துண்ண வேண்டியிருக்கும். எனவே அவ்வப்போது ஆரோக்கியத்தை கவனித்து வருவது அவசியம். சில சமயம் நட்பின் பொருட்டு, தர்ம சங்கடமான சூழலை எதிர்கொள்ள நேரிடும். வண்டி வாகனம், குடும்ப அட்டை போன்றவற்றை பிறருக்கு இரவல் தருவதை இதமாக மறுத்துவிடுங்கள். பலப் பிரச்சினைகள் புதிதாக தோன்றாமல் இருக்கும்.

மாணவர்களுக்கு: நண்பர்களில் சிலர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் செல்வர். பின் தங்கியிருந்த பாடங்களில் நல்ல தேர்ச்சி பெற, அதிகாலையில் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. வெளி வட்டார பழக்கத்தில் ஓர் எல்லைக்குள் இருந்தால், தொல்லை ஏதும் தோன்றாது. சில நேரம் தேவையற்ற விஷயங்களுக்காக அதிக பணம் செலவழியும். பொது இடங்களுக்கும், வெளியூர்களுக்கும் செல்லும் போது சஞ்சலங்களும், சபலங்களும் உங்களை வீழ்த்த இடம் கொடுக்காதிருப்பது அவசியம்.

வியாபாரிகளுக்கு: தொழிலில் நம்பகத் தன்மை இல்லாதவர்களை அருகில் சேர்க்காதீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பதில் தனிக் கவனம் செலுத்தி வந்தால், பங்குதாரர்களின் அனுமதியோடு புதிய செயல்களில் இறங்குவது நல்லது. அவர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிட்டும். வியாபார ஒப்பந்தங்களுக்கான பேச்சு வார்த்தைகளில் விதண்டாவாதத்தை தவிர்த்தால், நினைத்த வண்ணம் செயல்கள் நடைபெறுவதில் எந்தத் தடையும் இராது.

உத்தியோகஸ்தர்களுக்கு: அலுவலக அளவில் கருத்துப் பரிமாற்றத்தில் கடுமை கூடாமல் பார்த்துக்கொண்டால் உங்கள் சொல்லுக்கு நல்ல மதிப்பிருக்கும். கோப்புகளைப் பற்றி அறிமுகம் இல்லாதவர்களிடம் பேச வேண்டாம். உங்களின் பலவீனத்தை பிறர் சாதகமாக்கிக் கொள்ள இடமளிக்காதீர்கள். ஆரோக்கியத்தில் பின்னடைவு உண்டாகாமல் பார்த்துக் கொண்டல், வேலைகள் தேங்காமலிருக்கும். சட்டம் மற்றும் நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் அதிக அவசரம் வேண்டாம்.

கலைஞர்களுக்கு: பொது விழாக்களில் படாடோபத்தைத் தவிர்க்கவும். உடலுக்கு ஒத்துக்கொள்ளும் உணவு வகைகளை உண்டு வாருங்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மேலும் சக கலைஞர்களின் தனிப்பட்ட குண நலன்களை விமர்சனம் செய்ய வேண்டாம். சிக்கலான தருணங்களில் சமயோசிதமாக நடந்து கொண்டால் பழிக்கும், அவப்பெயருக்கும் ஆளாக வேண்டியிராது. நண்பர்களுக்கு, பணம் தருவதில் கவனமாய் இருந்தால், நட்பு நிலை நன்றாக இருக்கும்.

விவசாயிகளுக்கு: வாழை, தென்னை முதலியவற்றை வளர்ப்பவர்கள், பயிர்கள் வாடல் நோய் மற்றும் வண்டுகளிலிருந்து காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்தால், பொருள் நஷ்டத்தை தவிர்த்து விடலாம். அவ்வப்போது மண் பரிசோதனை மேற்கொண்டு, நிலத்திற்குத் தேவையான நீர் வளம் மற்றும் தழைச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது அவசியம். கடன்களை உரிய காலத்தில் செலுத்துவதில் கவனமாக இருந்தால், அபராத வட்டி செலுத்துவதைத் தவிர்த்துவிடலாம்.

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு: பண வரவிற்காக முறையற்ற வழிகளை நாடாதீர்கள். அது உங்கள் கௌரவத்தையும், நல்ல பெயரையும் குலைத்து விடும். பணியாளர்களிடமிருந்து அதிக ஒத்துழைப்பை பெற இயலாத சூழல் நிலவும். அதனால் முக்கிய பொறுப்புக்களில் நேரடி கவனம் செலுத்துவது அவசியம். நிர்ப்பந்தத்தின் பேரில் சிலர் சலுகைகளை வலுக்கட்டாயமாய் பெற முயற்சிப்பவர்களிடமிருந்து விலகி இருந்தால் வீண் தொல்லை வராது.

பரிகாரங்கள்: சனிக்கிழமை தோறும் சனி பகவானை வலம் வந்தால், துன்பங்கள் தானே விலகுவதுடன் மன தைரியமும் கூடும். இல்லத்திலும், உள்ளத்திலும் நிலவும் வேதனைகள் விலக, வேலவன் வழிபாடு கை கொடுக்கும். உங்கள் ராசிநாதனான குருவையும் முறைப்படி ஆராதித்து வர, வளம் பல வந்து சேரும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மகரம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம் முடிய)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்

மகர ராசியின் சிறப்பு: ராசிக் கட்டத்தில் 10-வதாக வரும் பெண் ராசியான மகரத்தில் அமைந்திருக்கும் நட்சத்திரக் கூட்டத்தின் உருவம் மான் தலையுடன் கூடிய முதலை போல் தோற்றமளிக்கும். மகரத்தை தன் ராசியாகவும், லக்னமாகவும் கொண்டவர்கள் அசாத்திய பொறுமைசாலிகள். எடுத்துக்கொண்ட வேலையை முடிக்கும் வரை அதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். மகரத்திற்கு உரிய ஆதிக்கக் கிரகம்-சனி. அதிர்ஷ்ட மலர்-கருங்குவளை. அதிர்ஷ்டக் கல்-நீலம். அதிர்ஷ்ட நிறம்-கறுப்பு. அதிர்ஷ்ட திசை-மேற்கு. அதிர்ஷ்ட எண்-8. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்-சிவபெருமான்.

மகர ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம் 1, 2, 3, 4 பாதங்கள். அவிட்டம் 1, 2 பாதங்கள். உத்திராடம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் எதற்கும் அஞ்சா நெஞ்சம் உடையவர்கள். எடுத்துக்கொண்ட வேலையை முடிக்கும்வரை பசியோ, தூக்கமோ இவரது கவனத்தைக் கலைத்துவிட முடியாது. தருணத்திற்கேற்ற தக்க முடிவுகளை நொடியில் எடுக்கும் திறன் உடையவர்கள். உத்திராடம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் உறுதியான மனம் படைத்தவர்களாகவும், எதிலும் தீர்க்கமான முடிவுகள் எடுக்கும் திறமை பெற்றவர்களாகவும், பல்துறை அறிவைத் தேடிப்படிக்கும் வழக்கம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். உத்திராடம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் எந்த செயலை எடுத்தாலும் அது நல்ல விதமாக முடிய தமது முழு உழைப்பையும் அள்ளி வழங்குவார்கள். தூண்டத் தூண்டச் சுடர்விடும் திரிபோல, இவர்களும் தூண்டிவிட்டால் வாழ்க்கையில் நன்கு பிரகாசிப்பார்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி சந்திரன். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப தெசை சந்திரன் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரச்சினைகளுக்கு முடிவெடுக்கும்போது பலவற்றையும் சிந்திப்பவராகையால் தீர்க்கமான முடிவெடுத்து, பிரச்சினைகளைத் தீர்த்து விடுவார்கள். திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- திருவாதிரை நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம். அதிர்ஷ்ட மலர்-அல்லி. அனுகூல தெய்வம்-பார்வதி. அதிர்ஷ்டக் கல்-முத்து. அதிர்ஷ்ட நிறம்-வெள்ளை. அதிர்ஷ்ட எண்-4. திருவோணம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் தாய், தந்தை மீது அதிக அன்பும் பக்தியும் கொண்டிருப்பார்கள். இவர்கள் குடும்ப உயர்வுக்காகவும், நலனுக்காகவும் அதிகம் பாடுபடும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். திருவோணம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள். ஆன்மீகம், ஆலயம், தெய்வத் திருப்பணிகளுக்காகப் பணியாற்றுவதில் அதிக ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருப்பார்கள். பிறர்க்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். திருவோணம் 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கலை, இலக்கியம் ஆகியவற்றின் மீது தனி ஈடுபாடு உண்டு. விஷயங்களை வெகு žக்கிரமாக கிரகிக்கும் தன்மை உடையவர்கள். தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து, செயலாற்றுவார்கள். திருவோணம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் தனக்கெனப் பாடுபடாவிட்டாலும் பிறருக்காக ஈடுபடும் விவகாரங்களில் மிகவும் உற்சாகமாக செயலாற்றும் திறன் கொண்டவர்கள். பெரும்புகழைத் தேடவேண்டம் என்பது, இவர்களது இலட்சியமாக இருக்கும். அவிட்டம்- இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி செவ்வாய் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப தெசை செவ்வாய் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியம் உடையவர்களாகவும், பிறரிடம் வேலை வாங்கும் திறமை உடையவர்களாகவும் இருப்பார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- மிருகžரிடம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்க ஆகாத நட்சத்திரங்கள் 3, மிருகžரிடம், சித்திரை, அவிட்டம். மற்ற 24 நட்சத்திரங்களும் பொருந்தும். அதிர்ஷ்ட மலர்-செண்பக மலர். அதிர்ஷ்டக் கல்-மாணிக்கம். அனுகூலத் தெய்வம்-சுப்பிரமணியர். அதிர்ஷ்ட நிறம்-சிவப்பு, செம்மை. அதிர்ஷ்ட எண்-5. அவிட்டம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் தன் கருத்துகளைத் தயக்கமின்றி வெளிப்படையாக சொல்லும் குணமுடையவர்கள். கோபக்காரர்களாக இருந்தாலும் நியாயத்தைப் பின்பற்றி நடப்பார்கள். 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் தன் திறமைக்கு உரிய அங்கீகாரமும், உழைப்புக்கு உரிய மரியாதையும் கிடைக்கும் வரை பாடுபடுவார்கள். பிறருக்கு உதவி செய்கையில் தன்னுடையத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டு விடுவார்கள்.

பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் 21-11-2010 அன்று இரவு 10.54 மணியளவில் மீன ராசிக்கு மாறுகிறார். இதுவரை உங்கள் ராசியிலிருந்து 2ல் இருந்து வளம் பல தந்து கொண்டிருந்த குரு, இந்தப் பெயர்ச்சி மூலம் 3ம் வீட்டுக்கு மாறுவதால், எந்த விஷயத்திலும் அவசரப்படாமல் யோசனை செய்து செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். சின்ன சின்ன உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால், ஆரோக்கியம் žராக இருக்கும். மன உறுதியுடன் செயல்பட்டால், பிரச்சினைகள், தடைகள் ஆகியவற்றைத் தாண்டி வெற்றியின் பக்கம் உறுதியாக செல்ல இயலும். உங்கள் குடும்ப விஷயங்களை வெளிப்படையாகப் பேசாமலிருந்தால், பிரச்சினைகள் மேலும் பெரிதாகாமலிருக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் உயர்வு உங்கள் பேச்சின் தன்மையைப் பொறுத்தே அமையும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் சில சங்கடங்கள் உருவாகலாம். சிரமங்கள் இருந்தாலும், பிறர்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விடுவீர்கள். பணி சுமை கூடுவதால், எரிச்சலும், அசதியும் அவ்வப்போது வந்து போகும். மூத்தோருடன் வாக்கு வாதங்களில் ஈடுபடாமலிருந்தால், கருத்து வேற்றுமைகள் தானே மறைந்து விடும். கோபம், குதர்க்கத்திற்கு இடம் கொடாமல் இதமான அணுகு முறையைக் கடைபிடித்தால், இனிய பலன்கள் அதிகம் பெறலாம்.

பெண்களுக்கு: சில சில்லறைத் தொந்தரவுகள் இருந்தாலும், குடும்ப வளம் žராகவும், சிறப்பாகவும் இருக்க நீங்கள் அனுசரித்துச் செல்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக வைத்தால், பொருள் இழப்பு, மனக் கஷ்டம், இரண்டையும் தவிர்த்து விடலாம். பிள்ளைகளுக்கு அதிக பணம் தருவதைக் குறைத்துக் கொண்டால், வேண்டாத பழக்கங்கள் அவர்களின் வாழ்வை பாழாக்காமல் இருக்கும். வரவுக்கும் செலவுக்கும் சரியாய் இருப்பதால், புதிய செலவுகளை இழுத்து விட்டுக் கொள்ளாதீர்கள்.

மாணவர்களுக்கு: உங்கள் பிரச்சினைகளை நம்பிக்கையானவர்களுடன் ஆலோசனை செய்து தீர்வு காண்பது நல்லது. இல்லையெனில் மற்றவரின் கேலிக்கு ஆளாக நேரிடும். பிறரின் உடைமைகளுக்கு பொறுப்பேற்பதை நாசுக்காகத் தவிர்த்து விடுங்கள். விடாமுயற்சியால் சில சலுகைகளை அடையும் நிலை உண்டாகும். எந்தப் பிரச்சினையையும் வளர விடாமல் உடனடித் தீர்வு காணுதல் புத்திசாலித்தனம். நட்பு விஷயத்தில் எதிலும் அளவாக இருந்தால் உறவுகள் எப்போதும் žராக இருக்கும்.

வியாபாரிகளுக்கு: உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ள புதிய யுக்திகள் தேவைப்படும். உடனிருப்பவர்கள் உங்கள் ஏற்றத்திற்கு உறுதுணையாக அமைவது என்பது நீங்கள் நினைத்தது போல் இருக்காது. எனவே பிறரை நம்பி செயல்படுவதைத் தவிர்த்து விடவும். வாகன வசதியின் குறைவு காரணமாக சரக்குகளை அனுப்புவதில் சில தடைகள் தோன்றி மறையும். தொழிலில் தோன்றும் சின்ன பிரச்சினைகளை பிறர் பெரிதாக்க இடம் கொடாதீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு: வராமலிருந்த வரவுகள் வந்து சேர்ந்தாலும், அவை யாவும் செலவுக்கே சரியாகிவிடும் வேண்டாத பகை பெரிதாகாதவாறு சமாதானக் கொடியைக் காட்டி விட்டால், அலுவலகச்சூழலில் இருக்கும் இறுக்கம் தானே விலகிவிடும். கேட்காமலே உதவி செய்தாலும், குறை சொல்பவர்களின் குற்றச்சாட்டை கேட்க நேரிடும். சலிப்பும் வெறுப்பும் சில சமயம் உங்கள் உற்சாகத்தைக் குறைத்தாலும், உங்கள் பணியில் கவனமாய் இருந்தால், உயரதிகாரிகளின் நல்லாதரவு கிட்டும். எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செயலில் இறங்கினால், எடுத்த காரியம் எல்லாம் வெற்றிகரமாக முடியும்.

கலைஞர்களுக்கு: நீங்கள் எதிர்பார்த்த சில நன்மைகளும் ஒப்பந்தங்களும் கையில் வரும் வரை சிறு கலக்கம் மனதில் இருந்துகொண்டே இருக்கும். பிரச்சினைகளை சமாளித்து உங்கள் பெயர், திறமை இரண்டையும் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டி வரும். முன்னேற்றத்திற்கான திட்டங்களில் முனைப்பாக செயல்படுவது புத்திசாலித்தனம். பயணங்களின் போது புதிய உணவு வகைகளுக்கு அருகில் செல்லாமலிருந்தால், ஜ“ரணக் கோளாறுகள் இல்லாமல் உடல் நிலை žராக இருக்கும்.

விவசாயிகளுக்கு: நீண்ட காலப் பயிர்களைத் தேர்வு செய்வதைக் காட்டிலும், குறுகிய காலப் பயிர்களைத் தேர்வு செய்தால், கிடைக்கின்ற லாபம் மற்றும் மகசூல் குறையாமலிருக்கும். பயிர்களுக்கான விதைகளைத் தரமான இடத்திலிருந்து வாங்குவதில் கவனமாக இருக்க, பூச்சித் தொல்லை முதலியவை அதிகம் தலை காட்டாமல் இருக்கும். குத்தகைக்கு பயிர்களை விடுவதிலும், எடுப்பதிலும் கவனமாக இருந்தால் போட்ட முதலீடுக்கு உரிய லாபத்தை எடுத்து விடலாம்.

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு: அதிகமாக ஆசைப்படுதலையும், ஆடம்பரச் செலவுகளையும் சுருக்கிக் கொண்டால், பற்றாக்குறையை ஓரளவு சமாளித்துவிட முடியும். விடுபட்ட சலுகைகளைப் பெறுவதற்காக அதிகம் போராடும் நிலை இருக்கும். சட்ட திட்டங்களை மீறிய செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பூர்வீகச் சொத்துக்களின் பராமரிப்பில் தனி கவனம் செலுத்தி வந்தால், புதிய தொல்லைகள் முளைக்காமலிருக்கும்.

பரிகாரங்கள்: ஒளிக் கடவுளாம் சூரியனை அவர்க்குகந்த நாளாம் ஞாயிறு அன்று வழிபட நலம் பல கூடும். செவ்வாயன்று முருகனின் கோவிலில் தீபம் ஏற்றி வர, சிறப்பான பலன்கள் தானே உங்களைத் தேடி வரும். குரு தரும் பலனை சாதகமாக ஆக்கிக்கொள்ள தட்சிணாமூர்த்தியை வியாழன் தோறும் வணங்கி வாருங்கள்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கும்பம்
(அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம் முடிய)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்

கும்ப ராசியின் சிறப்பு: ராசிக் கட்டத்தில் 11-வதாக வரும் ஆண் ராசியான கும்பத்தில் அமைந்திருக்கும் நட்சத்திரக் கூட்டம் பார்ப்பதற்கு ஒரு மனிதன் மண் கலசத்திலிருந்து நீரைக் கொட்டுவது போல் இருப்பதால் கும்பம் என்று பெயரிட்டனர்கள். கும்பத்தை தன் ராசியாகவும், லக்னமாகவும் கொண்டவர்கள் பிறர் வாழ்க்கையில் குறுக்கிட விரும்பாதவர்கள். žர்திருத்தக் கொள்கைகளில் விருப்பமுள்ளவர்கள். அசாத்திய பொறுமைசாலிகள். எடுத்துக்கொண்ட வேலையை முடிக்கும் வரை அதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். கும்பத்திற்கு உரிய ஆதிக்கக் கிரகம்-சனி. அதிர்ஷ்ட மலர்-கருங்குவளை. அதிர்ஷ்டக் கல்-நீலம். அதிர்ஷ்ட நிறம்-கறுப்பு. அதிர்ஷ்ட திசை-மேற்கு. அதிர்ஷ்ட எண்-8. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்-சிவபெருமான்.

கும்ப ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம் 1, 2, 3, 4 பாதங்கள். பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள். அவிட்டம் 3-ம் பாதத்தில் பிறந்தவர்கள் ஆழ்ந்து சிந்திக்காமல் எந்த விவகாரங்களிலும் தலையிட மாட்டார்கள். எதையும் திறம்படச் செய்யவேண்டுமென்ற கொள்கை உடையவர்கள். தம்முடைய திறமையினால் உயர்ந்த அந்தஸ்தை அடைந்திடுவார்கள். அவிட்டம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் அதிக மூலதனமில்லாமலேயே பெரும் நிதியை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பைத் தேடிக்கொள்வார்கள். வணிகத்துறையிலும், கலைத்துறையிலும் இவர்கள் புகழுடன் விளங்குவார்கள். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய அதிபதி ராகு ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய ஆரம்ப தெசை ராகு ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை செயலினால் அன்றி சொல்லால் இவரை வசமாக்குவது கடினம். எவ்விதக் கடின வேலைகளையும் நொடிப்பொழுதில் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உடையவர்கள். நியாயமும், மத்தியஸ்தமும் இவருடைய இயற்கையான பொக்கிஷங்கள் ஆகும். எதையும் கூர்ந்து நோக்கும் ஆராய்ச்சித் திறனுடையவர். எக்காரியத்திலும் நல்லது கெட்டது என இரண்டையும் அலசிப் பார்த்துப் பிறகு செயலில் ஈடுபடுவார்கள். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- திருவோணம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம், ரோகிணி. அதிர்ஷ்ட மலர்-மந்தாரை. அனுகூல தெய்வம்-பத்திரகாளி. அதிர்ஷ்டக் கல்-கோமேதகம். அதிர்ஷ்ட நிறம்-கருமை கலந்த மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 8, 9. சதயம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் நேர்மையானவர்கள். ஆதலால், நேர்மையற்ற செயல்களும் நேர்மையற்றவர்களின் உறவும் இவருக்குப் பிடிக்காதவை. அடுத்தவர்களின் திறமை மற்றும் கல்விக்கு உரிய மரியாதை கொடுப்பார்கள். சதயம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் தன் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வரை பாடுபடவும் தயங்க மாட்டார்கள். சிக்கலான விஷயங்களுக்கு சட்டென்று முடிவுகாணும் தனித்திறமை உடையவர்களாக இருப்பார்கள். சதயம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் அறிவில் சிறந்தவர்கள். கல்வியில் உயர்ந்தவர்கள். இளமையிலேயே உலக அனுபவம் பெற்றவர்களாக இருப்பார்கள். கொள்கையை விட்டுக் காரியத்தை சாதிக்க மாட்டார்கள். சதயம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் எடுத்த பணியை வெற்றிகரமாக முடிக்காமல் உறங்க மாட்டார்கள். பொறுப்பான காரியங்களைச் சாதித்து முடிப்பார்கள். இரக்க குணமுடையவர்களாக இருப்பார்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி குரு ஆகும். இவர்களின் ஆரம்ப தெசை குரு ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேலோர் போற்றத்தக்க அறிவாளிகளாக விளங்குவார்கள். குற்றத்தை ஒப்புக்கொண்டால் மன்னிக்கக் கூடிய மாண்புடையவர்கள். கண்ணியமானவர். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு: வேதை(ஆகாதது)-உத்திரம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் புனர்பூசம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், விசாகம், பூரட்டாதி. அதிர்ஷ்ட மலர்-முல்லை. அனுகூல தெய்வம்-பிரம்மா. அதிர்ஷ்டக் கல்-கனகபுஷ்பராகம். அதிர்ஷ்ட நிறம்- வெண்மஞ்சள். அதிஷ்ட எண்-7. பூரட்டாதி 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் இரக்க குணமுடையவர்கள். நினைத்த மாத்திரத்தில் எக்காரியத்தையும் உரியவர்களைக் கொண்டு செய்து முடிக்கக்கூடிய ஆற்றலும் சாமர்த்தியமும் உடையவர்கள். பூரட்டாதி 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் உயர்ந்த வாழ்க்கையை விரும்புவதோடு அதற்காக வேண்டிய அளவும் பாடுபடும் இயல்பும் உடையவர்களாக இருப்பார்கள். உள்ளத் தூய்மையும் புத்திசாலித்தனமும் கொண்ட இவர்கள், அதையும் கற்றுத்தேறும் ஆற்றல் படைத்தவர்கள். பூரட்டாதி 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தலைமைப் பதவி வகிக்கக் கூடிய அளவிற்கு திறமை உண்டு. கடமை உணர்ச்சிமிக்க இவர்கள் கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்வார்கள்.

பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் 21-11-2010 அன்று இரவு 10.54 மணியளவில் மீன ராசிக்கு மாறுகிறார். இதுவரை உங்கள் ராசியிலிருந்து 11ல் இருந்து வளம் பல தந்து கொண்டிருந்த குரு, இந்தப் பெயர்ச்சி மூலம் 12ம் வீட்டுக்கு மாறுவதால் பொறுமை, நிதானம் ஆகிய இரண்டையும் கடைபிடித்தால் வாழ்க்கை žராக செல்லும். பொருளாதாரத்தில், சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்ற நிலை இருப்பதால், அதிக செலவுகளை இழுத்து விட்டுக்கொள்ள வேண்டாம். பங்குச் சந்தையில் ஸ்திரமற்ற நிலை இருப்பதால் அளவான முதலீடு நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் யாரையும் குற்றம் சாட்டிப் பேச வேண்டாம். இயன்ற வரை இரவு நேரப் பயணத்தைத் தவிர்த்து விடுங்கள். மூன்றாம் நபரின் தலையீடு இல்லாமலிருந்தால், குடும்பத்தில் குழப்பம் இராது. சின்ன, சின்ன விஷயங்களிலும் நேரடியான கவனம் செலுத்தி வந்தால், முழு லாபமும் முறையாக உங்களை வந்து சேரும். உல்லாசம், கேளிக்கை ஆகியவற்றில் ஈடுபடுவதைக் குறைத்துக்கொண்டால், பாதி பிரச்சினைகள் தானாகவே குறைந்து விடும். வெளிநாடுகளில் பணிக்கு செல்ல விரும்புபவர்கள் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களையும், நம்பிக்கைக்குரிய நபர்களையும் அணுகுவது நல்லது. கவனக் குறைவிற்கு இடம் கொடாமல், உங்கள் பணியில் விழிப்பாய் இருப்பது அவசியம்.

பெண்களுக்கு: கடன் பட்டாவது சுப நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தும் சூழல் இருக்கும். எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் உங்கள் கடமையை முடித்துவிடுங்கள். தகுந்த நேரத்தில் நல்லவை உங்கள் இடம் தேடி வரும். சில நேரங்களில் சின்ன சின்ன ஆரோக்கிய நலிவுகள் தலை காட்டும். தேவையான செலவுகளை மட்டும் செய்து வந்தால், வரவுக்குள் உங்கள் தேவைகள் அடங்கி விடும். உறவுகளிடம் சூழலுக்கேற்றவாறு பக்குவமாக நடந்துகொள்வது நல்லது.

மாணவர்களுக்கு: அறிமுகம் இல்லாத இடங்களில் படபடவென்று பேசுவதை குறைத்துக்கொள்ளுங்கள். பிரச்சினைகள் உங்கள் அருகே வராமலிருக்கும். தகுதிக்கு மீறிய நட்புக்கு ஆசைப்படாமலிருப்பது அவசியம். சில சமயங்களில் உங்கள் அழைப்புக்கு உரிய பலனைப் பெற சிலர் தடையாய் இருப்பார்கள். அவர்களைப் புறந்தள்ளிவிட்டு முன்னேறுங்கள். வயது முதிர்ந்தவர்களுடன் எந்த வாக்கு வாதத்திலும் ஈடுபடாமலிருப்பது புத்திசாலித்தனம்.

வியாபாரிகளுக்கு: வியாபார வட்டத்தில் புதிய ஒப்பந்தங்களைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவும். எப்போதும், விழிப்புடன் செயல்படவும். வாடிக்கையாளர்களின் ஆதரவு சிறப்பாக அமைய நல்ல திட்டங்களைத் தீட்டுவதோடு மட்டுமல்லாமல் அதனைத் தகுந்த முறையில் செயல்படுத்துவதும் முக்கியம். தகுந்த ஆலோசனையுடன் புதிய முயற்சியில் ஈடுபட்டால், நீங்கள் வெற்றி பெறுவது உறுதி. சரக்கு அனுப்பும், வாகனங்களை தகுந்த விதத்தில் பராமரித்து வந்தால், வீண் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: எந்த சூழலிலும், கட்டுப்பாடாய் நடந்து கொள்வதை கடைப்பிடித்தால், எல்லோரிடமும் நற்சான்றிதழைப் பெற்றுவிட முடியும். ஞாபக மறதியால், வரும் சிக்கல்களைத் தவிர்க்க, எதையும் உடனுக்குடன் குறித்து வைப்பது அவசியம். அலுவலக வாகனங்களை சொந்த உபயோகத்திற்கு எடுத்து வரும் பழக்கத்தை குறைத்துக்கொள்வது நல்லது. கடன் வாங்கி கொண்டாட்டம் கேளிக்கை ஆகியவற்றைத் தவிர்த்தல் நல்லது. கோபதாபத்தை கட்டுக்குள் வைத்தால், எதிலும் வெற்றி வாய்ப்பு உங்களுக்கே!

கலைஞர்களுக்கு: புதிய இடங்களில் கட்டுப்பாடுடன் நடந்து கொண்டால் எந்த பிரச்சினையிலும் சிக்காமல் தப்பலாம். பத்திரிக்கைச் செய்திகளால் நிம்மதி குறைய வாய்ப்பிருப்பதால், எதிலும் நடுநிலையாக செயல்படுங்கள். எந்த சூழலிலும் தேவையற்ற பரபரப்பிற்கு இடமளிக்காமல் இருந்தால் சிந்தனைகள் சிதறாமலிருக்கும். நீங்கள் பங்கேற்கும் விழா, விருந்துகளில் நாவிற்கு அதிக சுதந்திரம் அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. பணப்புழக்கத்தில் விதிமுறைகளை கடைபிடிப்பது அவசியம்.

விவசாயிகளுக்கு: பயிர் வளர்ச்சிக்கான புதிய திட்டங்களில் உள்ள நிறை குறைகளை உணர்ந்து, அதற்கேற்றவாறு மாறுதல்களை செய்தால், நல்ல பயனை அடைய இயலும். கணிசமான லாபத்தை கையில் தக்க வைத்துக்கொள்ள இடைவிடா உழைப்பும், தளராத முயற்சியும் தேவைப்படும். அறிமுகம் இல்லாதவர்களுக்கு விலையுயர்ந்த விவசாயப் பொருட்களை இரவலாகத் தருவதை தவிர்த்தால் உபகரணங்கள் பாழாகமலிருக்கும். அதிகமாக பயிர்க் கடன் பெறும் முன் அதில் உள்ள சாதக பாதகங்களை கவனத்தில் கொள்வது நல்லது.

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு: உங்கள் உடன் பணிபுரிபவர்களுக்கு, எல்லா விஷயங்களிலும் பிறர்க்கு அறிவுரை வழங்குவதை குறைத்துக்கொள்ளுங்கள். உங்கள் சொல்லுக்கு தனி மதிப்பிருக்கும். அதிக பொறுப்புக்களை சுமக்கும் நேரங்களில் ரத்த அழுத்தம் ஆகியவற்றை அவ்வப்பொழுது பரிசோதித்துக் கொள்வது அவசியம். உங்கள் உழைப்பிற்கேற்ற பாரட்டும், வெகுமதியும் கிடைத்தாலும், தலைக்கனமின்றி எளிமையாகப் பழகினால் ஆதரவாளர்கள் அனைவரும் உங்கள் பக்கமே! வேண்டாத பிரச்சினைகளில் தலையிடாமலிருந்தால், வீண் தலைவலியைத் தவிர்த்து விடலாம்.

பரிகாரங்கள்: வேண்டாத துன்பங்கள் யாவும் விலக துர்க்கை சன்னதியில் மனமுருகி வழிபடுங்கள் விடும். நலம் பல வந்து சேர, கூட்டுவிக்க, பிள்ளையாரை பணிந்து வருவது நல்லது. நீங்கள் பக்தியுடன் செய்யும் குல தெய்வ வழிபாடு சுகமான வாழ்வைத் தரும். குருவின் மனத்தை குளிரச் செய்ய அவருக்குப் பிடித்தமான முல்லை மலரால் அர்ச்சனை செய்து வரவும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி வரை)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்

மீனம் ராசியின் சிறப்பு: ராசிக்கட்டத்தில் 12வதாக வரும் பெண் ராசியான மீனத்தில் இருக்கும் நட்சத்திரக் கூட்டத்தின் அமைப்பு, மீன்கள் இரண்டு எதிரும், புதிருமாக இருப்பது போல் காணப்படும். மீனத்தை தன் ராசியாகவும், லக்னமாகவும் கொண்டவர்கள். கம்பீரமாக இருப்பார்கள். இவர்களின் கண்கள் கவர்ச்சியாக இருக்கும். மனதில் கவலைகள் இருந்தாலும் அதை வெளிக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். மீனத்துக்குரிய ஆதிக்கக் கிரகம்-குரு. அதிர்ஷ்ட மலர்-முல்லை. அதிர்ஷ்டக் கல்-புஷ்பராகம். அதிர்ஷ்ட நிறம்-மஞ்சள். அதிர்ஷ்டத் திசை-வட கிழக்கு. அதிர்ஷ்ட எண்-3. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்-பிரம்மா.

மீனம் ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: பூரட்டாதி 4ம் பாதம். உத்திரட்டாதி 1, 2, 3, 4 பாதங்கள். ரேவதி 1, 2, 3, 4 பாதங்கள். பூரட்டாதி 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் தாம் ஈடுபடும் விஷயங்களில் சிறப்புடன் பணியாற்றுவார்கள். மன உறுதி படைத்த இவர்கள் எளிதில் பிறருடன் நட்பு பாராட்டுவார்கள். இவர்கள் பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்குவார்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி சனியாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி தெசையே ஆரம்ப தெசையாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த காரியத்திற்கும் பிறர் உதவியை நாடாதவர்கள் சுயநம்பிக்கையுடையவர்கள் என்றும், தன் கையே தனக்குதவியென்ற திட சித்தம் உடையவர்கள். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)-பூரம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் பூசம், பரணி, பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி. அதிர்ஷ்ட மலர்-கருங்குவளை. அனுகூல தெய்வம்-சனீஸ்வரன். அதிர்ஷ்டக் கல்-நீலம். அதிர்ஷ்ட நிறம்-கறுப்பு. அதிர்ஷ்ட எண்-2, 6, 8. உத்திரட்டாதி 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் பொறுமைசாலிகள். ஆனால், தம்மை உதாžனப்படுத்துபவர்களைக் கண்ணெடுத்தும் பாரார்கள். பிறர் இவரைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி இவர் சிறிதும் கவலைகொள்ளார். பிடிவாதக் கொள்கை உடையவர்கள். உத்திரட்டாதி 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் காரியவாதிகள். கொள்கையை விட்டுக் கொடுப்பதுபோல் தளர்த்தி இறுக்கிப்பிடிப்பார்கள். இவர் கடமையுணர்ச்சியிலிருந்தும், பொறுப்பிலிருந்தும், பந்த பாசங்களிலிருந்தும் விடுபடார்கள். உத்திரட்டாதி 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் பிறர் உள்ளத்தில் உள்ளதை எளிதில் கிரகிக்கும் சக்தியுடையவர். பிறர் செய்யும் குற்றம் குறைகளை அச்சமின்றி எடுத்துரைப்பர். யாவருக்கும் நன்மையே செய்ய வேண்டுமென்ற கருத்துடையவர்கள். உத்திரட்டாதி 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் அழுத்தந் திருத்தமாகப் பேசுவார்கள். பேச்சில் உறுதி தொனிக்கும். கபடமற்ற உள்ளமும், ஆடம்பரமற்ற தோற்றமும் உடையவர்கள். பிரதிபலன் கருதாது உழைத்திடுவார்கள். ரேவதி நட்சத்திரத்தில் நட்சத்திரத்தின் அதிபதி புதன். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப தெசை புதன் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் புதிய கருத்துகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் ஊக்கமளிப்பார்கள். உறவினர்களிடத்தில் வாஞ்சையுடையவர்கள். இருப்பது சிறிதெனினும் சுயமாகத் தேடி அதைப் பன்படங்காக்கும் வல்லமை உடையவர்கள். ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)-மகம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் அசுவினி, ஆயில்யம், மகம், மூலம், கேட்டை, ரேவதி. (நன்மை செய்யும் நட்சத்திர வரிசையில் உங்களுக்கு அசுவினி மட்டும் வருகிறது. கேதுவின் நட்சத்திரமான மகம், மூலம் வரவில்லை. எனவே வேதையாக வந்தாலும் அசுவினி மட்டும் தான் திருமணம் செய்ய ஏற்றதாக எடுத்துக்கொள்ளலாம்). அதிர்ஷ்ட எண்-9. ரேவதி 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் பணத்தைக் கொண்டும், செல்வாக்கைக் கொண்டும், மற்றவர்கள் சாதிக்க முடியாததை நொடிப்பொழுதில் சாதித்திடுவார்கள். சிக்கல் நிறைந்த வாழ்க்கையெனினும் சிக்கலிலிருந்து இவர் தன்னை விடுவித்துக் கொள்வார்கள். ரேவதி 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் அரிய வாய்ப்பை நழுவ விடமாட்டார்கள். ஆத்ம பலமும், மனோதிடமும் உடையவராதலால், பிரபலமான காரியங்களைத் திட சங்கற்பத்துடன் செய்து முடிப்பார்கள். ரேவதி 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் உயர்ந்த பண்பு உடையவர்கள். நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தக்கூடியவர்கள் அன்பு உடையவர்கள், சாந்தமானவர்கள். ரேவதி 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் அமைதியான தோற்றமுடையவர்கள். தத்துவ ஆராய்ச்சியிலும், விஞ்ஞான ஆராய்ச்சியிலும் கருத்துடையவர்கள். தீர ஆலோசித்து எந்தக் காரியத்திலும் ஈடுபடுவார்கள்.

பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் 21-11-2010 அன்று இரவு 10.54 மணியளவில் மீன ராசிக்கு மாறுகிறார். இதுவரை உங்கள் ராசியிலிருந்து 12-ல் இருந்து அலைச்சலையும், செலவுகளையும் வளம் பல தந்து கொண்டிருந்த குரு, இந்தப் பெயர்ச்சி மூலம் உங்கள் ராசிக்கே மாறுவதால், எந்தவொரு விஷயத்தையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் கவனத்துடன் இருந்தால், பணிகள் தொய்வின்றி žரான வேகத்தில் சென்று கொண்டிருக்கும். பொருளாதார அளவில் யானைக்கும், பானைக்கும் சரி என்பதுபோல, வரவுக்கும் செலவுக்கும் சரியாய் இருக்கும். உறவுகளை புரிந்துகொண்டால், அவர்களின் ஆதரவும் அனுகூலமும் குறையாமலிருக்கும். உங்களை புகழ்பவர்களை நல்லவர்கள் என்று நம்பி உங்கள் சொந்தப் பிரச்சினைகளை அவர்களிடம் கொட்ட வேண்டாம். கோபதாபங்களை குறைத்துக்கொண்டால், குடும்பத்தில் கூடுதல் மகிழ்ச்சி நிலவும். žரான உணவுப்பழக்க வழக்கம், தேவையான உடற்பயிற்சி- இந்த இரண்டையும் கடைபிடித்து வர, ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெளி வட்டாரங்களிலிருந்து வரும் வம்பு, தும்பு ஆகியவற்றில் ஈடுபடாமலிருங்கள். அமைதியாக வேலைகளைச் செய்ய இயலும். பல சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனித்து வந்தால், எந்த பாதிப்பும் இராது.

பெண்களுக்கு: சில சமயம் எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். உறவுகளின் தேவைகளை நிறைவேற்றுவதில் எந்த சுணக்கமும் காட்டாமலிருந்தால், அவர்களும் இணக்கமாக நடந்து கொள்ள முன் வருவார்கள். பயணங்களின் போது உங்கள் உடைமைகளை பத்திரமாக வைப்பது நல்லது. வீண் ஜம்பம், படாடோபம் ஆகியவற்றிற்கு தலையாட்டாமல் இருந்தால், மன உளைச்சலிருந்து தப்பிக்க இயலும் கோபத்தையும், வேகத்தையும் தவிர்த்து செயல்பட்டால் அனைத்திலும் வெற்றியே!

மாணவர்களுக்கு: ஆசிரியர்-மாணவர் உறவு அனுகூலமாக இருக்க அடக்கமாக நடப்பது அவசியமாகும். வாகனங்களில் மிதமான வேகத்தில் செல்வது உங்கள் பாதுகாப்புக்கு நல்லது. உடனிருப்பவர்களே எரிச்சலூட்டும்படியான காரியங்களில் ஈடுபடலாம். கவனக் குறைவைத் தவிர்த்து செயல்பட்டால், தேர்வுகளை பயமின்றி எழுத இயலும். நண்பர்களிடையே அவ்வப்போது உருவாகும் பூசல்களை மனம் விட்டு பேசித் தீர்த்துக்கொண்டால், நட்பு என்பது பிரியாமலிருக்கும்.

வியாபாரிகளுக்கு: பங்குதாரர்களின் மனப் போக்கை உணர்ந்து செயல்பட்டால், வீண் சங்கடங்களைத் தவிர்க்க முடியும். சரக்கு போக்குவரத்தில், கண்மூடித்தனமாக யாரையும் நம்பாமல் விழிப்புடன் இருந்தால், நல்ல வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். வெளிவட்டார பழக்க வழக்கங்களில் அதிருப்தி ஏற்படாதவாறு உங்கள் செயல்பாட்டை மாற்றி அமைப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு: உங்கள் உரையாடல்களில் இனிமையின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்கு நல்ல மதிப்பிருக்கும். சக ஊழியர்களால் தொல்லைகள் தோன்றி மறையும். உடனிருப்பவர்கள், உங்கள் தலையில் பணியை கட்டி விட்டு, நழுவ இடம் கொடாமலிருப்பது நல்லது. ஏனோதானோவென்று செயல்படும் ஊழியர்களை இதமாகக் கண்டிப்பது நல்ல பலனைத் தரும். சில நேரங்களில் சிறிய தவறுகளுக்காக சில பணிகளை மீண்டும் செய்யும் சூழ்நிலை உருவாகும்.

விவசாயிகளுக்கு: புது நிலம் வாங்கும் முயற்சிகளில் சிறிது தேக்க நிலை காணப்பட்டாலும், கடுமையாக உழைத்தால், நினைத்ததை ஓரளவு சாதிக்க இயலும். நிலப் பராமரிப்பு, நீர்ப்பாசனம் முதலியவற்றில் தோன்றும் சிறு பிரச்சினைகளை வளர விடாமல் இருப்பது புத்திசாலித்தனம். கால்நடைகள் மூலம் பெறும் லாபம் அதிகரிக்க அவற்றை பராமரிப்பது அவசியம். கடன் தொல்லைகளைக் கட்டுக்குள் வைக்க சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது நல்லது.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு: பண விஷயங்களில் திட்டம் போட்டு செயல்படுவது நல்லது. சிலரை நம்பி ஒப்படைத்த காரியங்கள் முடியாமல் இழுபறியாய் இருக்கும் சூழல் நிலவும். முடிந்ததாக நினைத்த பிரச்சினையை, விஷமிகள் மீண்டும் கிளறி உங்களை அலைக்கழிக்கக் கூடும். எனவே எதிலும் கவனமாக இருப்பது நல்லது. பிறரின் குறைகளைக் கண்டுபிடிப்பதை விட நிறைகளைப் பாராட்டினால், அனைவரும் உங்கள் பின்னால் இருப்பார்கள்.

கலைஞர்களுக்கு: சக கலைஞர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். அது சில முக்கியமான விஷயங்களில் நல்ல பதில் கிடைக்கும் வரை காத்திருப்பது நல்லது. உங்கள் சுறுசுறுப்பு மங்காமல் பார்த்துக்கொண்டால், எடுத்த காரியங்கள் விறு விறுவென்று நடைபெறும். உங்களுக்கு நல்ல யோசனை சொல்பவர்களின் மனம் நோகாமல் நடந்து கொள்ளுங்கள். முன்னைக் காட்டிலும் அதிகம் பாடுபடுவார்கள். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் சற்றே மேலோங்கும்.

பரிகாரங்கள்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வாருங்கள். வாழ்க்கையில் வரும் பலன் நன்மையாய் மாறும். துர்க்கை வழிபாடு ராகுவின் மனத்தை குளிர்விக்கும். சனியின் அருளாசி பெற, அவருக்கு உரிய பாடலை சொல்லி வாருங்கள். சனிக்கிழமை தோறும் அஞ்சனை மைந்தனாம் அனுமனை ஆராதித்து வருபவர்களுக்கு தொழிலில் எந்த சங்கடமும் தோன்றாது.