Sunday, December 14, 2008

சனிபகவான் இருக்கும் சிறப்பான இடங்கள்...

கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற சனி பகவானின் வரலாற்றையும் அவர் ஒரு ராசிக்கு இடம் பெயரும்போதும் அவர் தரும் துன்பங்களை மறந்தவர்கள் இப்புவியுலகில் யாரும் இல்லை.சனிபகவான் ஒரு ராசிக்கு வந்தால் அவர் அந்த ஜாதகருக்கு நல்ல பாடத்தை கற்றுக்கொடுப்பார். ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு சனிபகவான் கொடுக்கும் வழிகாட்டல்தான் அந்த ஜாதகருக்கு துன்பமாக அமைகிறது. சனிபகவான் போல் கொடுப்பவரும் இல்லை அவரை கெடுப்பவரும் இல்லை என்பர் சிலர். அத்தகைய ஆற்றல் மிக்க சனிபகவானின் திருப்பாதங்களை சரண் அடைந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பதே ஜோதிடர்களின் கருத்து.
சனிபகவான் ஒரு ஜாதகத்தில் இருக்கக்கூடிய சிறப்பான இடங்கள்:
  • ஜென்ம லக்கினத்திற்கு 4, 8 ஆகிய இடங்களில் சனிபகவான் பலம் பெற்று அமைவது நல்லது.
  • மறைவு ஸ்தானமான 3, 6 , 8 , 12 ஆம் இடங்களில் பலம் பெற்று அமைவதும் சிறப்பானது ஆகும்.
  • இரண்டில் இருப்பதும் சிறப்பானதுதான்.
சனிபகவான் ஒரு ஜாதகத்தில் இருக்கக்கூடிய கோட்சார நிலை:
  • ஜெனன காலத்தில் சனிபகவான் வலுவுடன் காணப்பட்டால் கெட்ட பலன்கள் செய்ய வேண்டிய காலத்தில் கெட்ட பலன்கள் செய்யாமலும் , நல்ல பலன்கள் செய்ய வேண்டிய காலத்தில் சாதரண பலன்களே நடைபெறும்.

Saturday, December 13, 2008

சுப பலன்கள் தரும் கிரகங்கள்




















சுப பலனை தரும் கிரகங்கள்

இலக்கினாதிபதியும் லக்கினத்திற்கு 5, 9 ஆம் வீட்டு அதிபதிகளும் சுப பலனையே தருவார்கள். ஆயினும் மாறுபட்ட ஆதிபத்யங்கள் சுப பலனை குறைக்கும்.
பாப பலனை தரும் கிரகங்கள்.
3 , 6 , 11 ஆம் வீட்டு அதிபதிகள் பாப பலனை தருவார்கள்.ஆயினும் 3, 6 ,11 ஆம் வீட்டில் இருக்கும் பாபர்கள் சுப பலனை தருவார்கள்.மேற்படி வீட்டுக்குரியவர்கள் சுபவர்க்கம் அடைந்தால் பாப பரிகாரம் ஏற்பட்டு நல்ல பலன் தருவார்கள்.

Junior Astrology Course 1-9 Right Click To Download Here Size 613KB Format : PDF file